மென் பொருள் கதைகள் 2 – Microsoft Excel





நான் ஒரு பெரிய 125 மாடி அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸில் வசித்து வந்தேன். நான் இருந்தது 87 வது மாடியில். என்னுடைய பிளாட் எண் C87.

எங்கள் அபார்ட்மெண்ட்டில் பலதரப்பட்ட மக்கள் குடியிருந்தார்கள். பெரிய குடும்பங்கள் மற்றும் ஒற்றை மனிதர்கள். சில பிளாட்கள் காலியாக இருந்தன. சிலவற்றில் ஒவ்வொரு வாரமும் புதிய மக்கள் குடி வந்தார்கள். சில குடியிருப்பாளர்கள் தங்கள் பிளாட்டுக்குள் நான் விரும்பாத மஞ்சள் நிற பெயிண்ட் அடித்திருந்தினர்.
பல மாதங்கள் எங்கள் வாழ்க்கை நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. பின்னர் திடீரென்று ஒரு நாள் நாங்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டோம். யாருமே அதை எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு வந்த எச்சரிக்கை மிகவும் தாமதமாக வந்தது. வெளியேற்றப்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, ஒரு எக்ஸல் டாகுமெண்ட்டை டெலிட் செய்வது பற்றி ஒரு மெசேஜ் ப்ளாஷ் செய்யப்பட்டது.
பூஃப்! கண் மூடி கண் திறப்பதற்குள் நாங்கள் அனைவரும் காலி.
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |