முறைமை தவறினால், முக்திப் பேறு தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 6,962 
 
 

முறைமை என்பது என்ன? தெளிந்த நீரோட்டமான, வாழ்க்கையில் உறவு முறை தவறி, ஒரு கல்யாணம் நடந்தேறினால், உண்மையில் அது ஒரு விபத்துத் தான். உண்மை என்பது பளிங்கு வானம் போல, பளிங்கு வானம் எப்படியிருக்கும் என்பதை பிறர் சொல்லக் கேட்டு அறிந்தவளல்ல, மதுரா. அவள் கல்யானம் காட்சியாக, வந்து கன்ணை மட்டுமல்ல. ஏன், மனதையும் கூடத்தான் சுட்டு எரித்து, அவளையே, முற்று முழுதாக பங்கமுறச் செய்து நரகத்தில் தள்ளியது , விதி மடுமல்ல மனிதர்களும் கூடத்தான், ஆளையே இரை விழுங்கி வேடிக்கை பார்த்த அந்த, ஒரு தருணம், ஆம். அவள் உயிர்த்தெழுந்து உண்மையையே, கண்டறிந்த, பொன்னான ஒரு யுகம் அதை ஒரு வேதமாக, சொல்வதற்கே, இன்றும் ஒரு தபஸ்வினியாக சாந்த வேள்விசெய்து அவள் காத்திருக்க நேர்ந்திருக்கிறது. சகதி குளித்தே வாழ்ந்து களிக்கும் பாமர மக்களைக் காப்பாற்றி, தெய்வீக இருப்பில் நிலை நிறுத்தவே, அவ\|ளுடைய இந்த வேத பிரகடனம்.

அதற்காக அவள் நெருப்பாற்றையே கடந்து வந்திருக்கிறாள். அந்த அனுபவம் நேர்ததன் விளவே இன்றைய அவளின் முக்திப் பேறே அடைந்து விட்ட வெற்றிக் களிப்பில் இடையூறின்றி நிகழும் அவள் வாழ்க்கை பயணம். பளிங்கு வானமே காணாமல் போய், சாத்தான் வசமே அவள் சிக்கி சீரழிந்த போதெல்லாம் அவளுக்கு கை கொடுத்ததும் உன்னத இருப்பில் , நிலை சரிந்து போகாமல், அவளை வாழ வைத்ததம்அவள் வேதமாகவே படித்துத் தேறிய அனுபவ ஞானம் ஒன்று மட்டுமே, இன்று வரை அவளை காப்பாறி கரை சேர வைத்திருக்கிறது . மனித மனதில் கூட்டு இன்றி, அவளின் சுயம் பிரகாசமான இருப்பின் மொத்த வெளியீடும் இதுவேயாகிறது அறியாமை நீங்கி ஓர் ஆதர்ஸ பெண்ணாக, அவள் தலை நிமிர்ந்து நிற்பதற்கு இதுவே காரணம் உ.ள்ளிருப்பான மாசு படாத பளிங்கு வானம் ஒன்றே பெறுமதி மிக்க கையிருப்பாக கடவுள் அவளுக்குக் கொடுத்த வரமாகிறது. அதைப் பின் தள்ளியும் விலைமதிப்பற்ற, அவளின் இருப்பைக் கணக்கெடுக்காமல், கருத்தில் கொள்ளாமல் நேர்ந்த தவறுகளுக்கு பரிகாரமாக, அவளால் செய்ய முடிந்தது இது ஒன்றேயாகும்.

அவளுக்கு நன்றாக நினைவிருந்தது ஏழாலையில் உள்ள வீட்டிற்கு குடி புகுந்த வேளை, அதுவும் கணவன் உழைப்பில் வந்து சேர்ந்த சொத்தல்ல அவனை மணமுடிப்பதற்காக வரதட்சணையாக கொடுத்த வயற் காணிகளை விற்றுத் தான் அப்பா கட்டித் தந்த வீடு அது, அங்கு குடிவந்த பிறகு மின் இணைப்பு எடுப்பதற்காக அப்பா அவள் மதிப்பு மிக்க கணவனிடம் ஆறாயிரம் ரூபா வாங்கித்தருமாறு கேட்ட போது நேர்ந்த ஒரு கொடிய விதி.

அப்போது அவளின் கணவன் நடேசனுக்கு கொழும்பில் நீதி மன்ற வேலை . வேலை என்றால், முழுஅர்ப்பணிப்போடு, செய்கிற ஆள் அவன் ஆனால், குடும்ப வாழ்க்கையும் அதன், தாற்பரியங்களும் அறியாத மூடனாகவே, அவனை அவள் எதிர் கொள்ள நேர்ந்தது தான் அவள் கொண்டு, வந்த பாவக், கணக்கு இந்த கணக்கின் படி தான் அவளின் வாழ்க்கை, எதிரமறை சங்கதிகளூடன் துருவத்தில் சத்திய தார்மீக இருப்பின் மறை பொருளாய், இருட்டில் தள்ளி அவளை அழ வைத்து வாடிக்கை பார்க்கிறது இதற்கு இந்த சமூகமும் உடந்தையே.அப்படி அதன் காலில் விழுந்து, அவள் அழ நேர்ந்தாலு,ம் எட்டி உதைத்து விட்டுப் போகிற கொடூர சமூகமே இது . எல்லா அழுக்குகளையும் கழுவி ஓடுகிற நிர்மலமான கங்கை போன்ற, அவளுக்குத் தான் இந்த வாழ்க்கை சவுக்கடிகள் , அன்பு முற்றாக, ஒழிந்து போன புத்தி பேதலித்த ஒரு பாமர மனிதனிடம் போய் சரணாகதி அடைந்து அவள் முற்று முழுதாக தன்னை அர்ப்பணித்தி விட்ட நிலையிலும் கூட அவளைக் கருவறுத்துக் கொன்று போடவே காத்திருக்கும் அவன் கரங்கள்.

அந்த வேளையும் வந்தது வயிற்றில் அவன் தந்த சுமை வேறு, நாலாவதாக் ஒன்று உதிரக் காத்திருக்கும் வேளையில் தான், அவன் பூகம்பமாய் கிளம்பி பொங்கி வெடித்தான் அவளுக்கு வயிற்றில் சுமை ஏறுகிறபோதெல்லாம் அவளுக்கு அரணாக அந்த் தாய் வீடே இருந்தது.

அப்பாவின் மனக் கவலை வேறு அவள் நிழலில் குருத்தவிழ்ந்த சின்னஞ் சிறுசுளையே மனம் கொள்ளும் ஆதீத அன்பில் அவர் எடுத்த அந்த ஒர் முடிவே அவளின் தலைக்குள் இடியாக வந்து இறங்கியது.

இதற்காக அவனிடம் வரம் கேட்டு அவள் இருந்த பொழுதில் தான் இந்த விபரீத ந்நிகழ்வுக்கு அவள் முகம் கொடுக்க நேர்ந்தது. புத்தம் புதுசாய் அப்பா கட்டித் தந்த அந்த அழகான வீட்டின் முன் வாசற்படியில் நிலை கொள்ளாமல் அமர்ந்த வாறே அவன் பதில் கடித்தை எதிர்ப்பார்த்து, அவள் காத்திருந்த வேளை மறுபடியும் கானல் மூழ்கிப் போன கதையாய் கடிதப் பரப்பில் அவன் முகம் தெரிந்தது , கொழும்பிலிந்து அவன் விட்ட முதல் கேள்விக் கணை, குத்திக் கிழிக்கும் அம்பாக வந்து அவளைத் துளைத்து துவம்சம் செய்து வீழ்த்தி விட்ட அந்த ஒரு பொழுது.

அங்கிருந்து விஷம் கலந்த குரலில் அவன் கேட்கிறான்.

லைட் இல்லாமல் நீங்கள் இருக்க மாட்டியளே? அதைக் கேட்டு உயிர் வதையாய் ஒரு ஒற்றைக் குரலில் பதில் சொல்ல வேண்டுமென்ற ஆவாசம் பெருந் தீயாக அவளைப் பற்றிக் கொண்டாலும் அப்பா கொடுத்த் வரமாய் பூரண ஞான இருப்பில் இன்னும் பேசாமடந்தையாகவே அவள் இருக்க நேர்ந்தது. அவனுக்கென்ன பேச்சு அவன் சுதந்திரம் அன்பு வற்றிபோன ஒரு குரல் அவனுக்கு. குரல் எங்கே வந்தது? கடிதத்திலே தான் நீட்டி முழங்கிப் பேச வைத்தது அவன் ஆணவம் அந்த ஆணவ சிறுக்கன் முன் அவளால், வேதம் சொல்லவா முடியும் அப்படிச் சொல்ல நேர்ந்தாலு,ம் அவன் இருக்கிற நிலையில் வெறும் கல் எறிந்தாலே, உறைக்காது . வார்த்தைகளே வியர்த்தம் தான்.

அங்கிருந்து உக்கிரமாகஅவன் குரல் கேட்டது . முறைமை தவறினால், வறுமை தான். அவன் நாக்கு புரண்டு புரளி கிளப்பினால், அதை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் மட்டுமல்ல சகதி குளித்தே சாக வேண்டிய கொடிய தலை விதியும் கூட அவளுக்கு அவன் குரல் கேட்டது கடித வழியே என்றாலும் அவளைக் கேட்காமலே அழுகை மழை கொட்டிற்று அதன் பொழிவில் அழிந்தது வெறும் எழுத்துக்கள் மட்டுமல்ல வாழ்க்கௌயும் கூடத் தான் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவன்?

உண்மையைப் பேசி உயிரையே அவன் வதைத்தாலும் அந்த நெருப்பில் வீழ்ந்து பஸ்பமாகி போகிற அந்தப் ப பாவக் கணக்குக்கு நானே பொறுப்பு என்ற நிதர்ஸனமான, உண்மை அவளுக்குப் புரிந்தாலும் இதற்குப் பரிகார சித்தியாக அன்பையே பரிசாகக் கொடுத்தாலும் அவன் புத்தி முழுவதும் சகதி எழவே காத்த்க் கொண்டிருப்பதாகவே அவளுக்கு உறைத்தது அவன் நிழலில் நிலைத்து வாழ வேண்டிய அவன் குடும்பம் அதாவது நான் என் பிள்ளைகள் எதிலுமே சுகப்படாலும் லைட் இல்லாமலும் இருளில் மூழ்கி செத்தாலும் சரி என்று அவனை நினைகத் தூண்டிக் கொண்டிருப்பது சாதாரண சாந்த புத்தியுள்ள மன ஓட்டமல்ல/ இப்படி அவளை மட்டுமல்ல அவள் வயிற்றில் பிறந்த பிள்ளைகலையும் கூட நெருப்பில் தள்ளி சாகடித்து விடவே , அவனின் காத்திருப்புக் கணங்கள். முறைமை தவறுதல், என்பதை எதை நினைவு கூர்ந்து அவனை இப்படிபேச வைத்திருக்கிறது அவள் கண்ணீர் மல்க, சிந்தித்தாள் தியானம் கூட வந்தது.

அன்பில்லாமல் போன ஓரு நிகழ்வு தடம் புரண்டு போன ஒரு காட்சி மையம் அவன் தம்பி அக்கா என்ற கூட்டு உறவில் சிக்கிக் கொண்டு விட்ட புழு அவன் பழுவாய் பிறக்க நேர்ந்ததன் பின் விளைவு . அவன் கல்யாணம். அந்தக் காட்சி நாடகத்தின் முன் கடவுள் விரித்துவிட்ட நிழல் கோல பொம்மையாய் அவள்.

அக்கா வயது முப்பது கடந்தும் கல்யாணம் காட்சி நாடகம் எதும் அரங்கேறாமல் , மூளியாய் இருகும் போது அவள் கண் முன்னால், ஒரு கல்யான நாயகனாய் நான் கிரீடம் தரித்து வருவது நீதியாகுமா? என்ற கேள்வி நெருப்பில் வீழ்ந்து அவன் செத்து மடிந்து அந்த நாட்களில் தான் அவளூக்கு இந்தக், கல்யாணாம் கைகூடி வந்தது அதுவும் புரோக்கர் மூலமாக நடந்தேறிய கல்யாணம் அதற்கு விலையாக அந்தக் காலத்தில் சீதனமாக, பெருமதிக்க காணிகளும் ரூபா பத்தாயிரமும் காசாகக் கொடுத்துத் தான் அக் கல்யாண வாழ்க்கை கை கூடி வந்தது இதில் உண்மை நிலை அறியாமல் நேர்ந்த தவறுக்கு அப்பாவிப் பெண்ணான மதுரா எப்படிப் பொறுப்பாவாள்? அந்தப் பழியை அவள் தலை மீது போட்டு நித்தமும் அவன் சண்டை போட்டு சகதி குளித்து எழுவது எந்த விதத்தில் நியாயமென்று அவளூக்குப் புரிய மறுத்தது.

நிழலும் நிஜமும் முட்டி மோதி சரிந்து விட்ட விவாக வேள்வியில் பலிக்காடவாகவேயானாள் அவள் அவனது குடும்பம் பெரியது. சுருட்டுத் தொழில் செய்யும் இளையதம்பிக்கு பத்துப் பிள்ளைகள் தொழிலும் ஒழுங்கில்லை . சதா குடி வேறு நடேசன் தான் ஏதோ உருப்படியாக ஓரளவு படித்துத் தேறி கிளார்க்காக இருக்கிறான். ஏதோ காசு கேட்டதற்காக அவன் போட்ட சாபம் மதுராவின் வாழ்க்கை செல்லரித்துப் போனது முறைமை தவறினால், வறுமை மாட்டுமல்ல நோயும் வரும் அதற்கு உதாரணம் மதுராவின் கடைசி மகள் மனித நாக்கின் விஷம் தீண்டி, இன்று அவள் பட்ட மரம் . இந்தபடுதலின் உச்சகட்டத்திற்குப் போய் உயிர்த்தெழுந்த ஓர் ஆதர்ஸதேவதையாகவே மதுரா இப்போது . காட்சி கொண்டு உலாவுகிறாள் அவள் கணவன் ஜெபித்தது வேறு ஏதோ மந்திரம் . முறைமை தவறிப் போனால், அடி சறுக்கும் . குடும்பமே அழிந்து போகும் அப்படி நடக்காமல் முக்திப் பேறேஅடைந்துவிட்ட சாத்வீக சாந்த இருப்பில் அவளைக் காண்கையில் அன்பு விடுபட்டுப் போன பொய் வந்து மறைக்கும் அவனின் தோன்றுதல் கூட அவளை சபிக்கவல்ல சாந்த மலர் தூவி அவளை முற்று முழுதாக முக்திப் பேறில் உயிர்த்தெழ வைத்துக் கரை சேர்க்கவேயென்றும் அந்த விதியின் சாபத்தை புறம் தள்ளி அவள் கரம் கூப்பி வணங்கினாள் இது கடவுளையே வணங்குவது போல் ,இடைவிடாத தியான இருக்கையில் அவளை அமர வைத்து சிறிதும் பங்கமுறாத, உதயசூரியானாய் இன்னும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது இந்த ஒளிர்தலுக்கு மு ன், பட்ட மரமென்ன பாவிகள் கூட விழித்தெழத் தான் அவளுக்கு வந்து வாய்த்த இந்த, முறைமை, தவறிய திருவிழாக் கோலமும் முக்திப் பேறும் அதன் அனுபூதியான அனுபவ சுவடுகளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *