மின்னுவதல்லாம்… பொன்னல்ல..!
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 9, 2026
பார்வையிட்டோர்: 5,825
(குழந்தைகளுக்காக ஒரு கதைப்பாடல்)

வயது முதிர்ந்த காகமாம்
வாடி வதங்கி தாகத்தால்
பருக நீரைத் தேடியே
பறந்து கொண்டிருந்தது!
உச்சி வானப் பாதையில்
உயரப் பறந்த வேளையில்
பட்சி பார்வை தன்னிலே
படவே இல்லை நீருமே!
சின்ன ஏரி, குளக்கரை
தண்ணீர் உள்ள தடாகமோ
ஆறு கிணறு எதுவுமே
அதற்குக் கண்ணில் படவில்லை!
பறந்து பறந்து ஓய்ந்தது
பாவம் வாடிக் காய்ந்தது
இருந்த இரண்டு இறகுமே
ஈரம் ஓயச் சாய்ந்தது!
துக்கப் பட்ட காகத்தின்
துன்பம் போக்கும் வண்ணமாய்
நிற்கு மொரு படத்தினை
நெருங்கிப் பறந்து கண்டது!
நெகிழி தன்னில் வரைந்ததாம்
நிற்குமந்த வரைபடம்
ஒழுகி ஓடும் அருவியை
ஓவி யமாய்க் கொண்டது!
கண்ணில் கண்ட படத்தினை
காகம் மெய்யாய் எண்ணியே
உண்ண நீரை தனக்கென
உயர்க டவுள் தந்ததாய்
எண்ணிக் கொண்டு வேகமாய்
இறங்கிப் படத்தில் மோதியே
சின்ன பின்ன மானது
சிரத்தை உடைத்துக் கொண்டது!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ வருவாயென..!
வளர்கவி
October 15, 2026
மதுரை விடியல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 12, 2026
ஸ்க்ரைப்
ஜூனியர் தேஜ்
October 12, 2026
