பொதுவாழ்வு
‘இன்றிரவு எட்டு ம்ணிக்கு ஷெர்ட்டனில் சந்திக்கலாம். நீல சாரி அணிந்திருப்பேன். மெரூன் பார்ட்ர்’ மனைவி வருவதை கவனித்து சட்டென்று அதன் குறிப்பை கிழித்துப் போட்டான்.
“என்னங்க அது?”
“ஒண்ணுமில்லை ஒரு மீட்டிங்குக்கு சீட்டு அனுப்பி கூப்பிட்டிருக்காங்க. போகணும்.”
“இன்னைக்குமா? தினப்படி மீட்டிங் ஆயிடுத்தே உங்களுக்கு”
“என்ன பண்றது… பொது வாழ்வுன்னா அப்படித்தான்.”
“முந்தாநேத்து கொரில்லா இனத்தை காப்பாத்தறது
பற்றி மீட்டிங்னீங்க, நேத்து குடும்பக்-கட்டுப்பாடுன்னீங்க… இன்னிக்கு?”
“எய்ட்ஸ் விழிப்புணர்வு.”