புவி
ஆகஸ்ட் 18, 2025 அன்று வழக்கமாக பொழுது புலர்ந்தது. லண்டனில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் காலை 8 மணிக்கு மேலும் விஜய், அவன் மனைவி புவனா, அவர்களின் இரு மகள்களும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.
பெரியவள் கடந்த இரு வருடங்களாக கிட்டார் கற்று கொள்கிறாள். அவள் ஆசைப்பட்டதால் அதற்கு முந்தினம் தான் ஒரு எலக்ட்ரிக் கிட்டாரை விஜய் ஆர்டர் செய்திருந்தான். அன்று டெலிவரி தினம் என்பதால் அவனால் தூங்க முடியவில்லை.
எட்டு மணிக்கு மேல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தவன் எழுந்து ஹாலுக்குள் நடந்தான். ஆர்டர் ஸ்டேட்டஸ் ஐ செக் செய்ய அவன் மனம் கூறியது. அப்போது அவனுக்கு அவன்
மனைவி புவனாவின் குரல் கேட்டது டேய் புள்ள பூச்சி எந்திரிச்சிட்டியா இனிமே தூங்க விட மாட்டியே காப்பி டீ டிபன் எல்லாமே கேட்பாயே என்று செல்லமாக கூறினாள்
விஜய் அவனுடைய லேப்டாப்பை ஆன் செய்து ஆர்டர் ஸ்டேட்டஸை சரி பார்த்தான். அவனுக்காக ஒரு இமெயில் காத்திருந்தது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் அன்று டெலிவரி செய்யப்பட வேண்டி இருந்த கிட்டார் அடுத்த நாள் டெலிவரி செய்வதாக சொல்லி இருந்தார்கள். விஜய் தன்னுடைய அதிர்ஷ்டத்தை நினைத்து நொந்து கொண்டான். டெலிவரி அன்று செய்யப்பட்டு இருந்தால் அவனுடைய மகளுடன் அமர்ந்து அன்பாக்சிங் மற்றும் புதிய கிட்டாரை பிளே செய்ய வேண்டும் என்பதாக எண்ணி இருந்தான். இப்பொழுது கிட்டார் டெலிவரி தள்ளிப் போனதால் எவ்வாறு தன் மகள்களை
எங்கே வைத்து செய்யலாம் என்று யோசித்தவன் அவர்களை மாலை பேட்மிட்டன் வகுப்பிற்கு கூட்டிப் போகலாம் என்று தீர்மானித்தான். 40 வயதை கடந்த விஜய் 20 வருடங்களுக்கு மேலாக மென்பொருள் துறையில் வேலை செய்பவன். கம்ப்யூட்டரில் தான் அதிக நேரம் செலவிடுவான் சில நேரங்களில் அவன் காதல் மனைவி புவனா, “என்ன கட்டிக்கிட்டதற்கு பதில் நீ உன் லேப்டாப்பையே கட்டியிருக்கலாம்” என்பாள் செல்லமாக. விடுமுறை மற்றும் வார இறுதி நாள்களிலும் காலையில் கம்ப்யூட்டரை ஆன் செய்து விட்டால் அவனுக்காகவே பல வேலைகள் உலகில் காத்திருப்பது போல் பல வேலைகளை செய்து பல இமெயில்களை செய்து கொண்டிருப்பான் அன்றும் அப்படித்தான். கணிப்பொறியில் வேலை செய்து கொண்டு இருந்தவன், புவனா சூடாக பில்டர் காப்பி நீட்டிய போது தான் திரும்பினான். காப்பியை ருசித்தபடி இன்னைக்கு காலைல என்னம்மா டிபன்? என்றான் அவள் அதற்கு இன்று எதுவும் செய்யவில்லை இன்று கிரோசன்ட் மட்டும் தான் வாங்கி வந்திருப்பதாகவும், அவள் அன்று ஒரு மேம்போகிராம் ஸ்கிரீனிங் டெஸ்ட் செல்ல இருப்பதாகவும் கூறினாள். விஜய் சரி என்றவன் அவளுடன் கிட்டார் டெலிவரி தடங்கல் பற்றியும் குழந்தைகளை மாலையில் பேட்மின்டன் கூட்டி செல்வதை பற்றியும், இன்ன பிற உலக விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தான். அவளும் குரோசனை சாப்பிட்டுக் கொண்டும் காப்பியை அருந்திக்கொண்டும் அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
நேரம் போனது தெரியவில்லை. பகல் ஒரு மணி அளவில் புவனா அவனிடம் சமையல் முடிந்து விட்டது. சாதம், கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்,
உருளைக்கிழங்கு அவித்து மட்டும் வைத்திருப்பதாகவும் அதை தாளிதம் மட்டும் செய்ய வேண்டும் என்றும், நேரத்துடன் நாங்கள் மூவரும் சாப்பிடும் படி கூறிவிட்டு அவள் மருத்துவமனைக்கு கிளம்ப தயாரானாள்.
பகல் 2:30 மணிக்கு அவளுடைய அப்பாயிண்ட்மெண்ட். 1:30க்கு கிளம்பி விட்டாள். 20 நிமிட பேருந்து பயணம் மொபைலில் அவனுக்கு அப்டேட் செய்து கொண்டே இருந்தாள். பகல் 2:40க்கு தன்னுடைய அப்பாயிண்ட்மெண்ட் முடிந்து விட்டதாகவும் மருத்துவமனை வாசலில் ஒரு காய்கறி கடையில் கத்தரிக்காயும் உரித்த பூண்டும் வாங்கியதாகவும் கூறினாள் பகல் 3 வாக்கில் வீட்டில் நுழைந்தவள் காய்கறி பை அவளுடைய மொபைல் எல்லாவற்றையும் கீழே அவசரமாக போட்டுவிட்டு பாத்ரூமை நோக்கி ஓடினாள்.
வாந்தி எடுக்க தொடங்கினார் பதறிய விஜய் ஓடி சென்று என்ன ஆயிற்று என்றான் முதுகை நீவி விடவா என்றான் அதற்கு அவள் கவலைப்படாதே இது பித்த வாந்தி போல் தெரிகிறது காலையில் குரோசண்டம் காபி மட்டும் தான் சாப்பிட்டேன் அதனால் இருக்கும் என்று அவனை சமாதானப்படுத்தினாள்
தான் சிறிது ஓய்வெடுத்துக் கொள்வதாக கூறியவள் சிறிது பழரசம் கேட்டாள் விஜயும் பழ ரசத்தை கொடுத்தான் அதை குடித்தவள் சிறிது நேரம் படுத்துக் கொண்டாள் சிறிது நேரத்திலேயே மீண்டும் பாத்ரூம் போனவள் மீண்டும் வாந்தி எடுக்க ஆரம்பித்தாள் இப்பொழுதும் அவன் அவளிடம் கவலை படாதே இது ஒன்றுமில்லை என்றும், மெமோகிராம் ஆல் தன்னுடைய நெஞ்சு பகுதி வலிப்பதாகவும் ஒரு மணி நேரம்
ஓய்வுத்த பின் கிளினிக்கில் நடந்த எல்லாவற்றையும் சொல்கிறேன் என்றும் கூறியவள் சிறிது நேரம் படுத்துக்கொண்டாள். தனக்கு வெட்கையாக இருப்பதாக கூறியவள் சாளரங்களைத் திறக்க சொன்னாள். அப்பொழுது விஜய் அவளுடைய நெற்றியில் சிறு வியர்வைத் துளிகள் இருப்பதை கண்டான். அதைப்பற்றி கேட்ட பொழுது ஸ்கிரீனில் டெஸ்ட்க்கு பின் பேருந்தில் பயணம் செய்யும் பொழுது உடம்பு சரியில்லை என்று தோன்றியதாகவும், அதனால் வேகமாக வீட்டுக்கு வர வேண்டி வேகமாக நடந்ததுதான் வியர்வைக்கு காரணமாக இருக்கும் என்றும் கூறினாள்.
அப்பொழுதுதான் விஜய் இன்னொரு விஷயத்தை கண்டான். அவள் தனது இடது கையின் மணிக்கட்டுக்கு அருகில் ஒரு துணியை கட்டி இருந்தாள். அவன் எதற்காக இது என்றதுக்கு இந்த இடத்தில் எனக்கு வலிக்கிறது, நீ உன் கையை உறங்கும் போது என் மேல் போட்டிருப்பாய் அதனால் தான் இருக்கலாம் என்றார் சிரித்தபடி. பதறிய நிலையில் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய்யை பார்த்து சிறிது புன்னகைத்தால் பிறகு பயப்படாதே எனக்கு ஒன்றும் இல்லை என்றால் பிறகு திரும்பி படுத்த நிலையில் முதுகை சிறிது அமுக்கி விடும்படி கூறினாள் அவனும் செய்தான் தான் எழுந்தவுடன் இரவுக்கு பூண்டு ஊறுகாயோ அல்லது கத்திரிக்காய் பொறியலோ செய்வதாக கூறினாள் ஒரு மணி நேரம் படுத்துக் கொள்கிறேன் நீங்கள் நேரத்துக்கு சாப்பிடுங்கள். என்றால் அவள் நிலைமையை பார்த்த அவனுக்கு அவனுக்கோ குழந்தைகளுக்கோ சாப்பிடவே தோணவில்லை.
மாலை 4:20 விஜய் அவள் அறைக்கு சென்று பார்த்தான் அவள் படுத்து இருந்தாள் ஆனால் தூங்கவில்லை மீண்டும் புன்னகைத்தால் விஜய் அவளிடம் குழந்தைகளை பேட்மிட்டன் வகுப்பிற்கு கூட்டி செல்ல நினைத்ததாக கூறினான் அதற்கு அவள் தாராளமாக நீங்கள் சென்று வாருங்கள் எனக்கு ஒன்றும் இல்லை போய் வரும் பொழுது சிறிது பழசாறும் கேட்பது வேறு சில பொருட்களும் வாங்கி வரும்படி கூறினாள் விஜய் அவளிடம் இந்த பொருள்களை வாங்கி கொடுத்துவிட்டு போகவா என்றவனிடம் வேண்டாம் வரும்போது வாங்கினால் போதும் என்றாள் அப்படி 4:30 விஜயும் அவனது இரு மகள்களும் வீட்டை பூட்டிவிட்டு கிளம்பினார்கள் பின்னால் இருந்து புவனாவின் குரல் கேட்டது துணிப்பை எடுத்துட்டு போப்பா.
மாலை ஐந்து முதல் ஆறு மணி வரை பேட்மின்டன் வகுப்பு அதை முடித்து 15 நிமிட பேருந்து பயணம் இறங்கியதும் அம்மா சொன்ன பொருட்களை மறக்காமல் வாங்க வேண்டும் என்று குழந்தைகள் கூற அருகில் இருந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அவள் கேட்ட எல்லா பொருட்களையும் வாங்கி வீடு திரும்பி கொண்டு இருந்தபோது விஜய்க்கு விபரீத எண்ணங்கள் மனதில் தோன்றி மறைந்தன அப்பொழுதுதான் அவன் உணர்ந்தான் அவளிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லை அவள் எவ்வாறு இருக்கிறாள் திடீரென குழந்தைகளிடம் வேகமாக நடக்கும் படி கூறியவன் எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொண்டு வேகமாக நடந்தான்.
மாலை 6:45 கதவைத் திறந்தவன் அவள் படுத்து இருந்த அறைக்குள் சென்று பார்க்க நினைத்த அதே தருணம் அவருடைய சிறிய பெண் அலறினால் அப்பா அம்மா அங்கு தரையில் படுத்து இருக்கிறார் என்றால் விஜயின் முதுகுத்தண்டுக்குள் ஒரு ஈட்டி பாய்வதை போன்ற உணர்வு அவன் பொருட்களை வாங்கி வந்த பையை அப்படியே தரையில் போட்டு ஓடி அவளை அணுகினான்.
20 ஆண்டுகள் அவருடன் திருமண வாழ்க்கையில் பயணித்த அவனுடைய காதல் மனைவி புவனா அங்கு தரையில் சரிந்த படி படுத்திருந்தாள் இமைகள் திறந்த நிலையில் அவள் மூச்சு விடவில்லை அவருடைய கைகளில் குளிர் பரவி இருந்தது அவனுடைய உலகமே வெடித்தது தரையில் இருந்த அவளை எடுத்து அணைத்தவன் புவனா! புவனா! எந்திரிடி என்று அலறினான் அவனுடைய உலகமே இருண்டது உடம்பு நடுங்கியது. சிறுபிள்ளையைப் போல அழுதான். பசை போல ஒட்டக்கூடிய இருளில் மாட்டியது போன்ற ஒரு உணர்வு, அதே நேரம் குழந்தைகள் ஆம்புலன்ஸை அடைத்து இருந்தார்கள்.
15 நிமிடங்களில் சில பாரா மெடிக்ஸ் வந்தார்கள். அவளுக்கு சிபிஆர் கொடுப்பதை பார்த்துக் கொண்டிருந்த அவன், எல்லா கடவுளர்களிடமும், மூதாதையர்களிடமும் மன்றாடி வேண்டிக்கொண்டிருந்தான். புவனா அவனுடைய காதல் மனைவி 90களின் பிற்பகுதியில் இருவரும் திருச்சியில் ஒரு கணிப்பொறி மையத்தில் மாணவர்களாக அறிமுகமானவர்கள். அவளை கண்ட நாள் முதல், அவளை தொலைத்த நாள் வரையான நினைவுகள் ஒரு நிழல் படத்தைப் போல ஓடிக் கொண்டிருந்தது. அவன் பிரம்மை பிடித்தவன் போல் அங்கு அமர்ந்திருந்தான். சுமார் 30 நிமிட சிபிஆர் மற்றும் டிபிரிபிலேட்டர் மற்றும் பல விதங்களில் அவளை மறுபடி எழ முயற்சி செய்த பாராமெடிக்ஸ், முப்பொழுது நிமிடங்கள் கழிந்த நிலையிலும் அவள் எழாததால் அவள் இறந்து விட்டதாக அறிவித்தார்கள். அவனுடைய தொண்டை கனத்தது, கண்கள் இருண்டன, உடம்பு நடுங்கியது, அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: January 23, 2026
பார்வையிட்டோர்: 2,064