புறப்படு போர்க் களத்திற்கு!
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,226
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்
“விறலியே புறப்படு” என்றான் பாணன்.
“எங்கே”? என்றாள் விறலி.
“போர்க்களத்திற்கு”
“ஐயோ நான் மாட்டேன், பயமாயிருக்கிறது”
“போர் செய்யவல்ல, பொருள் வாங்க”
“செத்த வீட்டில் தருமமா? போர்க்களத்தில் பரிசா?”
சாதாரண போர்க்களம் அல்ல விறலி , பெருவழுதியின் போர்க்களம். கிழப் பருந்திற்கும் விருந்தளிக்கும் பெரு வழுதி நம்மையா சும்மா விடுவான். தயங்காதே. விரைவில் புறப்படு. அமுதம் கிடைக்கும். அழகிய பட்டாடை கிடைக்கும் விதவித நகைகளும் கிடைக்கும்.
துள்ளி எழுந்தாள் விறலி.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
கருங்கல்லும் கூழாங்கல்லும்!
வளர்கவி
June 17, 2026