புது வெள்ளம்





(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இலக்கியத்தின் அருட்கொடை சிறுகதை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆயிரம் பக்கப் புதினம் எழுதலாம்; ஐம்பது பக்கச் சிறு புதினம் எழுதலாம். ஆனால், சிறுகதை எழுதுவது கற்பனை மலையை சிந்தனை உளி கொண்டு செதுக்குவதாகும். சிறிது கவனம் தவறினாலும் அதன் அழகும் சொற் கட்டுக்கோப்பும் கெட்டுவிடும். அதிலும் நடந்த ஓர் உண்மை நிகழ்வைச் சுவையான சிறுகதையாக வடிப்பது அபூர்வம். அதன்படி இந்தப் புது வெள்ளத்தை காவிரிக் கரையிலிருந்து கண்ணெதிர் வெள்ளமாக்கி நம் கரத்தில் தவழ விடுகிறார் கலைமாமணி விக்கிரமன்.
கதை, காவிரியின் இனிய புது வெள்ளத்தில் தொடங்கி முரட்டுத்தனமான வெள்ளத்தில் முடிந்திருக்கிறது. படிப்பவர் மனத்தில் சோகத்தை ஏற்றி விட்டிருக்கிறது. அதிகம் ஏட்டுப் படிப்பு படிக்காத சுயம்புவாக உருவான வெள்ளம்’. ஒரு புல்லாங் குழல் கலைஞனின் வாழ்வின் நிகழ்வுகள்தான் ‘புது தன்னைப் போல தன் மகனும் ஏரோடும் பயிரோடும் நின்று விடாமல் படித்து நல்ல வேலைக்குச் சொல்ல வேண்டும் என்று விரும்பும் தந்தை. புல்லாங்குழல் இசையில் தன்னை மறந்து லயித்து தானறியாமல் பெரிய தலைஞனான பாஸ்கரன். பிற்காலத்தில் மேலும் பிரபலமாக வருவான் என்று அணித்து மகளைக் கட்டிக் கொடுக்க ஆசைப்படும் தாய்மாமா. இசையாய் வாழும் பாஸ்கரனுக்கு இசைந்த துணையாய் தன்னை இணைத்துக் கொள்ள விரும்பும் கோலக்கிளி பாரிஜாதம். நாகத்தையும் தன் மயக்கும் இசையால் வாகவமாக அடக்கி விடக்கூடிய பாஸ்கரனையும், அறியாமையால் தங்களோடு தண்ணீரில் மூழ்கடித்து முடித்து வைத்த நண்பர். அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்த படகோட்டி.
இப்படி இந்த புது வெள்ளத்தில் வரும் அத்தனை பேரும் நம்மோடு வாழ்ந்தவர்கள்; வாழ்பவர்கள்தான். மேலே முழு வெள்ளியைக் காய்ச்சி உருக்கி வார்த்து கீழே தண்ணீரெல்லாம் வெள்ளியாக மாற்றின ரசவாதம். அழகாகப் படமெடுத்து ஆடும் நாகத்தின் படத்திலேயும் வெண்மதியின் வெள்ளிக் கிரணம் பட்டு பளிச் பளிச்சென்று மின்னின அழகு.
சிறுகதையில் இத்தனை அழகான வர்ணனை அதிசயமாக இருக்கிறது… படிக்க இனிக்கிறது. சென்ற தலைமுறையில் வெளிவந்த, நாளைய நிலைமுறையும் படித்து இன்புற்று ஒரு பாடப் பகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய இந்த ‘புது வெள்ளம்’ கலைமாமணி விக்கிரமன் புகழ் மகுடத்தில் மின்னும் வைரமணி.
– மேகலா சித்ரவேல்
புது வெள்ளம்
கொடுமுடியிலிருந்து காவிரியைக் கடந்து அக்கரைசெல்வதற்காகப் படகில் ஏறி உட்கார்ந்தோம். படகில் என்னையும் நண்பரையும் தவிர வேறு யாரும் இல்லை. வானத்தில் வட்ட முழுமதி வெள்ளியை காய்ச்சி உருக்கி வார்த்து வாரி இறைத்துக் கொண்டிருந்தது. சுழலுடன் வேகமாகச் செல்லும் ஆற்றில் அசைந்தாடிப் போகும் படகில் தண்ணீரெல்லாம் வெள்ளியாக மாறிய ரசவாதக் காட்சியை மெய்மறந்து பார்த்து லயித்திருந்தோம். புது வெள்ளத்தின் தனிச் சோபையில் ஈடுபட்ட நண்பர் மௌனத்தைக் கலைத்தார். “நல்ல பாட்டாகப் பாடிக் கொண்டே இந்த வேளையில் சென்றால் எவ்வளவு இன்பமாக இருக்கும்?” என்றார்.
நான் குபீரெனச் சிரித்துவிட்டேன். மறுகணம் சிரிப்பு நின்று “உங்களைப் போலத்தான் சென்ற வருஷம் பாஸ்கரனும் எண்ணினான் இந்த நடுக் காவிரியைக் கேளுங்கள். ஓடும் தண்ணீரைக் கேளுங்கள் அவை பாஸ்கரனின் குழலோசையைப் பிரதிபலிக்கும். மேலே பார்த்து ஏதோசிரிக்கிறதே, நிலா – அதுகூட பேசாமல் கூசாமல் கதை சொல்லும்” என்றேன். என் நண்பருக்கு ஒன்றும் விளங்கவில்லை. புதிர் போட்டது போலிருந்தது அவருக்கு.
“என்னப்பா விழிக்கிறாய்? புல்லாங்குழல் பாஸ்கரனைக் கேள்விப் பட்டதில்லையா? அவனைத்தான் கேள்விப்படவில்லையென்றாலும், சென்ற வருஷத்து புதுவெள்ள சமயம் படகு கவிழ்ந்ததே, அதைப் பற்றிப் பேப்பரிலாவது படித்திருக்கவில்லையா?” என்றேன். வேகத்துடன், ‘இல்லை’ என்பதுபோல் தலையை ஆட்டினார் நண்பர்.
புங்கனூரில் பாஸ்கரன் பத்து வருடங்களுக்கு முன் சாதாரண மனிதனாகவே இருந்தான். ஆனால், பொழுது போகாத வேளையில் எப்பொழுதோ செய்யப்பட்ட மூங்கில் குழலிலிருந்து நாதத்தை எழுப்பிக் கொண்டிருப்பான். தன் மகனைப் படிக்க வைத்து எப்படியாவது ஈரோட்டுக்கு அனுப்பி ஏதாவது உத்தியோகத்தில் சேர்ந்து நல்ல முறையில் வாழச் செய்ய வேண்டும் என்பது தந்தையின் எண்ணமாக இருந்தது. கிராமத்தில் இந்த மாட்டையும் ஏரையும் ரையம் கட்டி அழுதது போதும் போதும் என்றாகி விட்டது.
பாஸ்கரனுக்கோ அதிலெல்லாம் பிடித்தமில்லை. சுதந்திரமாகக் தாயில் காளையைப் போல் திரிவான். காவிரி ஆற்றில் தண்ணீரில் த்து ஓடி நீண்டிருக்கும் வேரில் உட்கார்ந்து கொண்டு குழலூதிக் காலம் குழிப்பான். சும்மா ஊதிக் கொண்டிருந்த மூங்கில் குழாய், குழலாகவே நாறி இனிய நாதத்தைப் பரப்ப ஆரம்பித்தது. ஊருக்குள்ளேயே வந்து பாஸ்கரன் திண்ணையில் உட்கார்ந்து குழல் ஊழ ஆரம்பித்து விட்டால் அப் பிள்ளைகளுக்குக் குஷிதான். அவனைச் சுற்றி பெருங்கூட்டம் தடி விடும்.
இவன்தான் உருப்படாமல் தறுதலையாக இருக்கிறான் என்றால் தர்ப் பிள்ளைகளையெல்லாம் ஏன் கெடுக்கிறான் என்று சில இபரியவர்கள் முணுமுணுப்பார்கள். பாஸ்கரன் அவற்றையெல்லாம் இலட்சியம் செய்வதில்லை. தன் வீட்டுப் பசு, எருதுகளை ஆற்றில் குளிப்பாட்டுவது, தூங்குவது, புல்லாங்குழல் ஊதுவது தவிர வேறு இதிலும் அவன் ஈடுபடுவதில்லை.
”நான் இருக்கிறவரையில்தாண்டா இப்படியெல்லாம் உனக்கு ராஜா மாதிரி வேளா வேளைக்கு எல்லாம் நடக்கும். அப்புறம் நீயே புரிஞ்சுக் தவே!” என்று நெஞ்சு தழுதழுக்க பாஸ்கரனின் தந்தை அடிக்கடி கூறுவார். மனிதன் மாறுகிறானோ இல்லையோ, காலம் ஒரே நிலையில் இருப்பதில்லை. மாறிக் கொண்டே ஓடிக் கொண்டே இருக்கிறது.
பாஸ்கரனின் குழலில் இனிமை பொங்கியது. பூர்வ ஜென்ம விட்டகுறை தொட்டகுறை என்று கூட ஊரார் மெல்ல மெல்லப் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். அவன் புல்லாங்குழலிலேயே மகுடி வாசிக்க ஆரம்பித்தால் அசல் மகுடியினால் கூட அவ்வளவு சிறப்பாக வாசிக்க முடியாது. அந்த வட்டாரங்களில் எந்தக் கல்யாணம் நடந்தாலும் பாஸ்கரனின் குழல் கச்சேரி வைக்கத் தவற மாட்டார்கள். ஆனால், மகுடி மட்டும் வேண்டாம்பா என்று கூறிவிடுவார்கள். ஏனெனில் ஓர் இடத்தில் அவன் மகுதி ஊதி எங்கிருந்தோ நாகப்பாம்பு ஒன்று கல்யாண வீட்டினுள் வந்து படமெடுத்து ஆட ஆரம்பித்து விட்டது. பாஸ்கரனின் திறமையை எல்லாரும் மிக மிகப் புகழ்ந்தாலும், நாகப் பாம்புக்கு நடுங்காமலிருக்க முடியுமா?
பாஸ்கரனின் மாமன் மகள் பாரிஜாதத்திற்குக் குழலோசை மீது ஆசையா, பாஸ்கரனின் மீது ஆசையா எனத் திட்டப்படுத்திச் சொல்ல முடியாதபடி இருந்தது. பெரியவளாகி விட்டபடியால் அவள் சிறுவர் சிறுமிகள் போல் வெளியே வந்து பாஸ்கரனின் குழலோசை இன்பத்தி ஈடுபட முடியாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்திருந்து காற்றிலே மிதந்த வரும் மெல்லிய கீதத்தையும் மனத்திரையில் இலேசாக நடமாடும் அவள் முகப் பொலிவையும் எண்ணி இன்புறுவாள். வேதனையும் மெல்ல மெல்லத் தோன்றி பறையும்
‘முறைப் பெண்’ என்பார்களே அதன்படி பாரிஜாதம் பாஸ்கரனின் முறைதான். பாஸ் ரனுக்கு இதிலெல்லாம் ஏது நினைவு? அவளது களங்கமற்ற இதயம் கலை’யொன்றிலேயே நினைவாக இருந்தது. இந்த உலகம் ஈடுபடும் போசப் பொருளிலோ, இனிய பொழுது போக் லேயோ, ஆடம்பர அழகிலேயோ மனத்தைப் பறி கொடுக்கவில்லை. குழல்தான் அவன் உயிர்.
முன்பு முணுமுணுத்துக் கொண்டிருந்த அவன் தந்தை கச்சேரி மூலம் ஏதோ பண வரவைக் கண்டவுடன் முணுமுணுப்பை நிறுத்தினார். ஆனால், அவன் வளமுடன் வாழ்வதைப் பார்க்கக் கொடுத்து வைக்கு வில்லை. பாஸ்கரனின் துரதிர்ஷ்டத்தை என்னவென்பவது, கோவை ‘ஜில்லா’ முழுவதும் மக்களை அல்லல்படுத்திய பிளேக் நோய் பாஸ் கரனின் தந்தையைப் பற்றியது. பிளேக் பீடித்த பத்தாம் நாள் இறந்தார்.
பாஸ்கரனின் துக்கத்தை எடுத்துச் சொல்ல முடியாது. குடும்பத்தில் நெருங்கி ஒட்டிக் கொண்டிருந்தவன்போல விம்மி விம்மியழுதான் இனி என்ன செய்வது என்ற எண்ணத்தில் அவன் மனம் ஆழ்ந்தது. நல்ல வேளையாக முன்பெல்லாம் அவன் மீது அலட்சியமாயிருந்த அவள் மாமன் திடீரெனப் பரிவு காட்டினார். பாஸ்கரனின் பெயரும் புகழும் ஓங்குவதைக் கண்டும், இன்னும் பிரபலமாக அவன் வருவான் என்பதைத் திட்டமிட்டுக் கொண்டும் தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்ள முடிவு செய்தார். பாரிஜாதத்தையும் அவனுக்குக் ‘கட்டி’ கொடுத்துவிடும் எண்ணமும் இருந்தது அவருக்கு.
(இதற்குள் நாங்கள் ஏறியிருந்த படகு கரையை அடைந்தது. ‘கதை அவ்வளவுதானா?’ என்றார் நண்பர். ‘ரொம்ப நன்றாக இருக்கிறது. கதை இல்லை ஒய்… கதை இல்லை… நிஜமாக நடந்தது… இன்னும் துக்க கரமான பின்பகுதியையும் கேளுங்கள்’ என்று கூறி, படகிலிருந்து இறங்கி இருவரும் ஆற்றங்கரை வெண் மணலிலேயே சிறிது நேரம் உட்கார்ந்தோம்)
கிளிபோன்ற பாரிஜாதத்தின் குலுங்கும் அழகை அவன்கண்டதில்லை, அசந்து நின்று விட்டான். கிளிக் கூண்டுக்கருகிலேயே வந்து விட்டோமே என எண்ணி ஆச்சர்யப்பட்டான். உலகம் தெரிந்த அவனுக்கு இனி குழல் இடும்தன் உயிரில்லை. குழலின் இனிய இசையைப் போல அழகு திரும்பிய பாரிஜாதத்துக்கும் பங்கு உண்டு என முடிவு செய்தான்.
தானாக ஆக வளரும் கிளிதன்னிடம்தான் நிச்சயம் ஒப்படைக்கப்படப் போகிறது என அறிந்தவுடன் பாஸ்கரனின் உடலில் ஒரு புத்துணர்ச்சி முற்பட்டது. அதிலிருந்தே பாஸ்கரனின் குழல் வாசிப்பில் பொலிவு இற்பட்டது. நேரம் போவது தெரியாமல் குழலூதுவான். மக்களும் சளைக்காமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த வருஷம் குடகில் மழை. இங்கும் பலத்த மழைதான். காவிரி இரு கரையும் அணைய டிக் கொண்டிருந்தது. பெரும் பெரும் வைக்கோல் போர்களும், தாங்களும் வெள்ளத்தில் அடித்து வரும்.
அந்தப் புது வெள்ளத்தைப் புத்துணர்ச்சியுடன் பாரிஜாதமும், பாஸ்கரனும் ரசித்து ரசித்து இன்புற்றத்தை எப்படி வார்த்தையால் கூறி விளக்குவது?
பௌர்ணமியன்று நாமக்கல் பாறையில் பெரிய கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். முதல் நாளே, நாள் நன்றாக இருந்தபடியால் பிறப்பட்டுப் போகலாம் என பாஸ்கரனின் மாமன் கூறி விட்டார். பாரிஜாதத்துக்கும் உள்ளுக்குள்ளேயே பெரும் ஆசைதான், தானும் போக வேண்டுமென்று. ஆனால், மணமாகாமல் அவர் கூடப் போனால் ஊர் வம்பளக்குமே எனப் பயந்து சும்மா இருந்து விட்டாள்.
ஆற்றிலே சிறிது வெள்ளம் தணிந்திருந்தாலும் வேகமும் இழுப்பும் சுழலும் குறையவில்லை. ஒரு வாரமாகப் படகு ஓட்டாதிருந்த பட கொட்டிகள் அன்றுதான் மீண்டும் ஓட்டத் தொடங்கியிருந்தனர். பாஸ் கரனுடன் நான்கைந்து தோழர்களும் உடன் வந்தனர்.
பக்க வாத்தியக்காரர்கள் நேரே நாமக்கல்லுக்கே வந்து சேர்ந்து விடுவார்கள்.
படகுக்குத் தேவையான ஆட்கள் கிடைத்துவிட்டார்கள். பௌர்ணமிக்கு முதல் நாளாதலால் முழுமதி வானத்தில் காய்ந்து கொண்டிருந்தது. அந்த நிசப்தமான வேளையில் ‘ஹோ’ என்ற பேரிரைச்சலுடன் ஓடியது ஆறு. ‘சளக் சளக்’ என்ற துடுப்புச் சப்தத்தைத் தவிர வேறு ஒலியே எழவில்லை. பாஸ்கரனுக்கு வட்ட மதியையும், ஓடும் நதியையும் கண்டவுடன் உற்சாகம் பிறந்து விட்டது. குழலூத ஆரம்பித்து விட்டான். ‘மகுடி மகுடி’ என்று நண்பர்கள் உற்சாகத்துடன் கூவினர்.
மேலும் ஆற்றின் நடுவே, படகில் மகுடி வாசித்தால் எங்கே நாகம் வரப் போகிறது என்று துணிவுடன் பாஸ்கரன் ஊத ஆரம்பித்தான், ஆகா… விளக்கணையும் போதல்லா ஒளி இன்னும் சுடர் விட்டுப் பெரிதாக எரிகிறது?
அன்றும் அவன் வாசித்தது பேரின்பமாக இருந்தது. இலக்கியத்திலும், புராணத்திலும் மகா புருஷர்கள் வாசித்தது பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால், அன்றைய அந்த வாசிப்பு – இனிமை அழகு!
படகோட்டியும் குழலின்பத்தில் மெய்மறந்து, ஆற்றின் இழுப்புக்கு எதிர்த்துடுப்புப் போடுவதில் உண்டான அலுப்பையும் அறியா திருந்தான்.
குழலில் பிறந்து வரும் மகுடியின் இசையை வேறெங்கு இவ்வளவு தைரியமாகக் கேட்க முடியும் என்று நண்பர்கள் புகழ்ந்தனர். பாஸ்கரனை என்ன சொல்லிப் புகழ்வது என்றே தெரியவில்லை அவர்களுக்கு.
படகு நடு ஆற்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
‘உஸ்… உஸ்’ என்னும் ஒலி கேட்டது. நண்பர்கள் கூர்ந்து கவனித்தனர்; படகின் ஓரமாகத் தலையெடுத்து அழகாக ஆடும் நாகம். அதன் படத்திலே வெண்மதியின் வெள்ளிக்கிரணம் பட்டுப் பளிச் பளிச் என்று மின்னியது.
“ஐயோ” என்று கூவினர் வீராதி வீர நண்பர்கள். பாஸ்கரன் மெல்லப் பார்த்தான். மகுடியை நிறுத்தவில்லை.
ஆனால், ஆழ்ந்த இசையின்பத்தில் ஈடுபடக் கூடிய பொறுமையுள்ள நண்பர்கள் உண்மை ரசிகர்களாக இல்லாததால் ஆபத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இங்கும் அங்கும் எழுந்து ஒதுங்கினர். குழல் வாசிப்பு தடைப்பட்டது. மெய்மறந்து ஆடிய நாகம் சீறியது.
நடு ஆறு, துடுப்புக்கு எட்டாத ஆழம் – வேகமல்லவா அங்கு படகுக்காரன் கூவினான். படகு ஆடியது, குலுங்கியது, தடுமாறியது ஒரு கணம் விவரிக்க முடியாத அளவு அல்லோலகல்லோலமாகியது; உடனே மறுகணம் பெருஞ்சுழலில் படகு கவிழ்ந்தது. ‘ஐயோ’ என்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவர்கள் இட்ட ஓலம் திசையெல்லாம் பரவியது.
நாகம் எப்படி வந்ததோ சொல்ல முடியாது. வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்பு தப்பிவிடப் படகில் ஏறியிருக்கலாம். ஆனால், படமெடுத்த நாகத்துக்கு அவர்கள் அஞ்சாதிருந்திருந்தால் பாஸ்கரன் தனது திறமையான நாதத்தால் லாகவமாக அதை அடக்கியிருப்பான்.
உயிரின் கடைசி ஓலம் கரையின் கிராமம் ஒன்றிற்கு எட்டியது. திராமமே திரண்டு வந்துவிட்டது.
படகுகளுடன், வலைகளுடன் திறமையான நீச்சலாட்களுடன் பாஸ்கரனைத் தேட ஆள் விட்டார் மாமா.
“ஐயோ… பாஸ்கரா!” என அவர் அலறியது இன்னும் என் காதில் டுவிக்கிறது.
பயங்கரமாக ஓடும் புது வெள்ளத்தின் சுழலில் புத்துணர்ச்சி பொங்கப் பாடிய பாஸ்கரரின் – ஏன் மற்றவர்களின் – உடலை இலேசில் கண்டு பிடித்து விட முடியுமா?
(நண்பர் பெருமூச்சு விட்டார். அவர் கண்களில் நீர் தளும்பியது. ‘பாரிஜாதம்’ என்ன ஆனாள்?’ என்று வறண்ட குரலில் கேட்டார்).
என்ன ஆனாள்? சிறிது காலம் புது வெள்ளத்தின் சுழலையும், பேரொலியையும் கண்டு கேட்டு பேயடித்தவள் போல் கரையிலேயே காலங் கழித்தாள்.
புது வெள்ளம் வடிந்தது. மனித சுபாவம்தானே? அவள் என்ன ஆனாள்? காவிரியில் குதித்து மாண்டாளா? அல்லது வருத்தம் மாறினாளா? எனக்குத் தெரியாது. இது கதை இல்லை. உண்மைச் சம்பவம், பொய் எழுதக் கூடாது. வேறு யாராவது அறிந்திருந்தால் சொல்லுங்கள்.
– 1948, சுதேசமித்திரன்.
– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.