புது ப்ராஜக்ட் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 2,479 
 
 

“உங்களையெல்லாம் நான் எதுக்கு கான்ஃப்ரன்ஸ் ரூமுக்கு கூப்டிருக்கன்னா, ஒரு புது ப்ராஜக்ட் வருது, ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான ப்ராஜக்ட், டெக்னிகலி சேலஞ்சிங்..

அதுக்காக கம்பெனியில இருக்குற உங்களை மாதிரி திறமையான ஆளுங்களை எல்லாம் அசைன் பண்ண சொல்லி மேலிடத்துல இருந்து ஆர்டர். உங்களுக்கெல்லாம் சந்தோசம்ன்றது உங்க முகத்துல இருந்தே தெரியுது..

பல‌ வருசம் போகபோற இந்த ப்ராஜக்டுக்கு வருசத்துக்கு 10 மில்லியன் டாலர்னு கான்ட்ராக்ட் சைன் ஆகியிருக்கு..

சொல்றேன்..சொல்றேன்.. நம்ப மாட்டீங்க.. இந்த ப்ராஜக்ட் சித்திரகுப்தனோட பிரம்மச்சுவடிய மேனேஜ் பண்ண வேண்டிய ‘சொர்க்கலோகம் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்’ ப்ராஜக்ட்தான். நேத்துதான் சித்திரகுப்தன் வந்து நம்ம மார்க்கெட்டிங் ஹெட் கூட பேசி ஆர்டர் கன்ஃபர்ம் பண்ணிட்டு போயிருக்காரு..

குட்.. ரொம்பவும் ரியல் டைம் டேட்டா இருக்கப்போறதால செக்யூர்டாவும் அதே நேரம் டைம் கிரிட்டிகலா இருக்கறதுனால பெர்ஃபார்மென்ஸும் நல்லா இருக்கணும்…

ஓகே.. இப்ப ரொம்ப முக்கியமான விசயம்.. போன அப்ரைசல்ல யாரெல்லாம் ஆன்சைட் வேணும்னு கேட்டீங்க?”

– ஜூலை 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *