புதுவாழ்வு வாழ்வோம்
கதையாசிரியர்: அல்போன்ஸ் மோசஸ்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 30, 2025
பார்வையிட்டோர்: 1,507
அமலா நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த இறைவன் மேல் பக்தியுள்ள, அழகாக பெண் பட்டதாரி. ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்து வந்தாள். கை நிறைய சம்பளம். பள்ளியில் படிக்கும் போதே அவள் அழகைக் கண்டு மயங்கிய ஜெகன் அவளை உயிருக்குயிராகக் காதலித்தான். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் ஜாம் ஜாம் என்று நடந்து முடிந்தது.
திருமணம் செய்து பல வருடங்கள் ஆனபோதிலும் குழந்தை பாக்கியம் இல்லாதது இருவரையும் வேதனையில் ஆழ்த்தியது. போதாக்குறைக்கு உற்றார் உறவினரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக நேரிட்டது இருவருக்கும் அதிக வேதனை அளித்தது.
ஜான் வேலை செய்து வந்த நிறுவனமும் பொருளாதார சரிவினால் நலிவடைந்து மூடப்பட்டது ஜகனுக்கு மேலும் வேதனை அளித்தது. குழந்தையில்லாததால் அமலாவை விவாகரத்து செய்து வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாமா என்று நினைத்தும் வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் மனம் உடைந்து போதைக்கு அடிமையானான்.
அவன் இருந்த அந்த ஊரில் பங்குத் திருவிழா முன்னிட்டு தியானத்திற்கும் ஒப்புரவு அருட்சாதனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமலாவிடம், குடிப்பதற்குப் பணம் கேட்டு அவள் தராததால் வாய்ச் சண்டை கைச் சண்டையாக மாறியது. சண்டையின் போது எதேச்சையாக ஜெகன் அமலாவைப் பிடித்துத் தள்ள அவள் நிலை தடுமாறி கீழே விழுந்து பின் மண்டையில் அதிக அடிபட்டு மூச்சு பேச்சின்றி இருந்து பின்னர் இறந்து போனாள். அதைப் பார்த்த ஜெகன் என்ன செய்வதென்றேத் தெரியாமல் நிலை குலைந்து போனான்.
அங்கிருந்து தப்பித்து எங்காவது ஓடி விடலாம் என்று நினைத்த ஜெகன் உடனே அங்கிருந்து வெளியே ஓட அரம்பித்தான். வழியில் இருந்த கோவிலைப் பார்த்ததும் பாவ சங்கீர்த்தனம் செய்து அவளை அடக்கம் செய்வதற்காக வழியைப் பார் என்று உள் மனம் எச்சரித்தது. எப்படியோ மனதைக் கல்லாக்கிக் கொண்டு அங்கு பாவசங்கீர்த்தன தொட்டியில் அமர்ந்திருந்த குருவானவரிடம் சென்று தன் நிலைமைய எடுத்துச் சொல்லி பாவ மன்னிப்புக் கேட்டான்.
அவரும் பதட்டப்படாமல் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதையும் பாவப் பரிகாரத்தையும் சொன்னார். ஆனால் தான் செய்தது பெரிய தவறு என்று நினைத்த ஜெகன் அங்கிருந்து தடுமாறி நடக்கலானான். அப்போது பக்கத்திலிருந்த ரயில்வே நிலையத்தில் தொலை தூரம் செல்லக்கூடிய இரயில் வந்து கொண்டிருந்தது. இதுதான் சமயம் என்று அங்குச் சென்று அந்த ரயிலில் ஏறி அங்கிருந்து தப்பித்தான்.
அமலாவின் அக்கம் பக்கத்து வீட்டார் அமலா வீட்டிற்று வந்து உடனடியாக ஆக வேண்டிய நிகழ்வுகளைச் செய்ய ஆரம்பித்தனர். போலீஸ் தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்தது. பல பேரிடம் விசாரணைகள் மேற்கொண்ட போதிலும் தலை மறைவாக இருந்த ஜானைப் பிடிக்க இயலவில்லை.
மாதங்கள் உருண்டோடின. அமலாவின் உறவினர் போலீஸை நெருங்கி ஜானை சீக்கிரமாகப் பிடித்து அவனுக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்தனர்.
ஜான்தான் அமலாவைக் கொலை செய்து விட்டு தலை மறைவாகி விட்டான் என்பது மட்டும் தெரிய வந்தது. ஆனால் போலீசாருக்கு ஜான் எங்கிருப்பான் என்ற எந்த தடயமும் கிடைக்கவில்லை. இந்த செய்தி அடிக்கடி தினசரி நாளிதழிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் அவ்வப்போது வந்து போனதை ஜான் எப்படியோ அறிந்து வந்தான்.
துப்பு துலக்கிக் கொண்டிருந்த காவல் துறையினர் அன்றைய தினம் ஜானின் நடவடிக்கைகளை ஆங்காங்கே இருந்த சிசி டிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளைப் பார்த்து துப்புத்துலக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் கண்ணில் அன்றைய தினம் ஜான் வீட்டிற்கு வந்த சில மணி நேரங்களில் வேகமாக வெளியே போவது, கோவிலுக்குச் சென்று பாவ சங்கீர்த்தனம் செய்வது, இரயில் நிலையம் சென்று இரயிலில் ஏறுவது போன்ற அனைத்துக் காட்சிகளும் தெரிய ஆரம்பித்தன. விசாரணை தொடர்ந்து கொண்டேயிருந்தது.
ஒரு கட்டத்தில் காவல்துறை அந்த ஆலயத்தில் அன்று பாவசங்கீர்த்தனம் கேட்டுக் கொண்டிருந்த குருவானவரை தங்கள் வலையத்திற்குக் கொண்டு வந்து விசாரிக்க ஆரம்பித்தனர். சாமி உங்களிடம் பாவசங்கீர்த்தனம் செய்ய ஜான் வந்ததை நாங்கள் சிசிடிவி மூலம் பார்த்தோம். அவன் என்ன சொன்னான் என்பதைச் சொல்லுங்கள் என்று வற்புறுத்தினர்.
ஆனால் அவர் எங்கள் மதக் கோட்பாட்டின் படி குருவானவராகிய நான் அதைச் சொல்லக்கூடாது ஆகவே என்னால் அதைச் சொல்ல இயலாது என்று மறுத்து விட்டார். அதனால் விபரீத விளைவுகள் வரும் என்று காவல்துறை எச்சரித்ததை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார். விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குருவானவர் மேல் கேஸ் போடப்பட்டு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அவரைச் சிறையில் அடைத்தனர்.
எங்கிருந்தோ இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட ஜான் மனம் உடைந்து போனான். நாம் செய்த தவறுக்கு அந்த அப்பாவி குருவானவர் ஏன் பலிகெடா ஆக வேண்டும் என்று அவனது ஆழ்மனது அவனை வாட்டி வதைத்தது. உடனே அந்த ஊருக்கு வந்து காவல் நிலையத்தில் சரண்டர் ஆகி முதலில் தான் அந்த குருவானவரைப் பார்த்து அவரிடம் மனதார மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். அவர்களும் அவ்வாறே அனுமதி வழங்கி குருவானவரிடம் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர் பின்னர் அவனுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
ஒருவன் கோவிலுக்குச் சென்று பாவசங்கீர்த்தனம் கேட்டுக் கொண்டிருந்த குருவானவரிடம் சென்று சாமி உடலிச்சைக்காகப் பாவம் செய்தேன் என்றான். குருவானவர் யார் அந்த கோடி வ|Pட்டுக் கோமளாவா என்றார். இல்லை என்றான். கோவில் பக்கத்து வ|Pட்டுக் குப்பம்மாவா என்றார். அவளும் இல்லை சாமி என்றான். பின்ன யாரு கல்லறை மேட்டிலிருக்கும் கண்ணம்மாவா என்றார். இல்லை சாமி என்று எழுந்து போக ஆரம்பித்தான்.
அவனை அழைத்த குரு ஏன் பாவ மன்னிப்புப் பெறாமல் போகிறாய் என்றார். இல்லை சாமி இப்பதான் எனக்கு அந்த மூன்று பேரின் முகவரியும் கிடைத்தது போய்வந்து பாவசங்கீர்த்தனம் செய்து கொள்கிறேன் என்றான் என்று ஒரு காணொலி உலா வருகின்றது.
இது விளையாட்டாக இருந்தாலும் இத்தகைய இழி செயலுக்கு குருவானவர்கள் ஒருநாளும் போக மாட்டார்கள் என்று ஆணித்தரமான நம்பலாம். அதைத்தான் நாம் ஜான் கதையில் பார்த்தோம். எந்தச் சூழலிலும் பாவசங்கீர்த்தனத்தின் போது கேட்கப்படும் செய்திகளை எக்காரணத்தைக் கொண்டும் வெளியே சொல்ல மாட்டேன் என்று குருப்பட்டத்தின் போது இறைவன் முன்னிலையில் ஆயரிடம் கொடுத்த வாக்குறுதியை இன்றளவும் குருவானவர்கள் கடைபிடித்து வாழ்வது போற்றத்தக்கது.
எனவே 2026ம் ஆண்டில் நாம் செய்த பாவங்களை அறிக்கையிட்டு அதற்கான பரிகாரங்களைச் செய்து பிறந்துள்ள புத்தாண்டில் புது வாழ்வு வாழ்வோம்.
| நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக வாரந்தோறும் சிறுகதைகள் எழுதி, புதுச்சேரியிலிருந்து வரும் வார இதழில் வெளியிட்டு வருகிறேன். முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சென்னை மற்றும் மைலாப்பூர் பேராயரிடமிருந்து எழுத்தாளர் விருதைப் பெற்றுள்ளேன். ஆரோவில் ஐடிஐயில் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளேன். தேரி உயர்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…மேலும் படிக்க... |