புகழ் மூடும் தாழி
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,858
வளவன் இறந்து பட்டான் அவன் பூதவுடலைத் தாழியுள் வைத்து மூடினர். ஐயூர் முடவனார் இதை நேரிற் கண்டார். அவர், தாழி செய்து கொடுத்த குயவனைக்
கூப்பிட்டார்.
“கலஞ் செய்வோனே! வளவன் பூதவுடம்பை மறைக்கும் தாழியைச் செய்துவிட்டாய். ஆனால், அவன் புகழ் உம்பை மூடும் தாழியைச் செய்ய உன்னால் இயலுமோ ?
அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
உலகையே திகிரியாக்கி, மலையையே களிமண்ணாக்கி குழைத்து, ஒரு தாழி செய்ய வேண்டும். முடியுமா உன்னால்” என்று கேட்டார் ஐயூர் முடவனார்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்