பிடிவாதக்காரன்






(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
மனிதாபிமானம், தன்மானம், ஏழைமை இவை ஒருவனிடத் திற் சங்கமிக்கும் பொழுது அவன் எவ்வாறு நடந்து கொள் வான்? இந்தக் கதையிலே கந்த வனத்தை இதற்கு விடையாக நம்முன் நிறுத்துகிறார். கதைஞர் அன்ரனி மனோகரன். இவர் கதையிலே பிரச்சினையை அணு கும் முறை கவர்ச்சியாக இருக்கிறது…..
‘வரும்போது தனியாக வரவும்.’ – இது கதையின் நடு முடிச்சு!
“டாங்… டாங்… டாங்..” கோயில் மணி ஒலித்து மாலை ஆறு மணியாகிவிட்டதை அறிவித்துக்கொண்டிருந் தது தபாற்பெட்டிச் சந்தியிலுள்ள கடைகளில் பொருட் களை வாங்கிக்கொண்டு வீடுநோக்கிச் செல்கிறார்கள், தொழிலாளர்கள்.
தபாற்பெட்டிச் சந்தி அது வவுனியாவிலிருந்து ஒரு மைல் தூரத்தில் ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ளது. அச்சந்தியில் சிவப்புத் தபாற்பெட்டி ஒன்று உண்டு. அது தான் அச்சந்தியின் பெயருக்குக் காரணி அச்சந்தியில் மூன்று நான்கு பலசரக்குக் கடைகள். சங்கக்கடை ஒன்று ஒரு லோன்றி. சலூன். நெல் குற்றும் பெரிய ஆலைகள் நாலைந்து. இன்னும் பல. இறம்பைக்குளத்தையும் சின்னப் அவ்விரு அதுதான். புதுக்குளத்தையும் பிரிக்கும் சந்தி ஊர்களிலும் உள்ள மக்கள் அச்சந்தியை நாடி வருவதால் அது எப்போதும் கலகலப்பாக இருக்கும்.
கந்தவனத்தாரும் சமையல் சாப்பாட்டுக்குத் தேவையான சாமான்களை வாங்கிக்கொண்டு கடையை விட்டு வெளியேறுகிறார்.
“என்னண்ணை ரவுணுக்குப் போகேல்லையா?” வாயில் பீடியுடன் நின்ற சுப்பையா கேட்டான்
“இல்லை சுப்பையா; வீட்டுக்குத்தான் போகிறேன்…” என்று கூறிவிட்டு வேகமாக நடக்கிறார், கந்தவனம்.
சுப்பையா கேள்வி கேட்டதன் நோக்கம் அவருக்குப் புரியாமல் இல்லை. மனதில் சிரித்துக்கொண்டார். கந்தவனத்தார் வழக்கமாகத் தன் வேலை முடிந்ததும் வவுனியா ரவுணுக்குப் போய் ஒரு அரையோ, காலோ அடித்துவிட்டுத்தான் வருவார். வீட்டில் ஒருவரும் அதைத் தடுப்பதில்லை ‘பாவம்! நாள் முழுவதாகக் கஷ்டப்பட்டு உழைக்கிறார். அவர் குடித்தால்தான் என்ன?…” என்று கந் தவனத்தாரின் மனைவி சொல்லிக்கொள்வாள், ஆனால் கந்த வனத்தார் இப்போது குடிக்கப் போவதில்லை. “ஏன் ஐந்தாறு ரூபாயை அநியாயமாகச் செலவழிப்பான்; பிள்ளைகள் சாப்பிட்டாலும் பரவாயில்லை” என்று மனதில் எண்ணி தானாக நிறுத்திக் கொண்டார். பிள்ளைகள் வளரவளரத் தான் அவர் தன் வீட்டுத் தேவைகள் கூடுவதை உணர்ந்து கொண்டார். மூத்தன் முரளி அட்வான்ஸ் லெவல் வரை படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறான். மற்றவள் புஷ்பா பத்தாம் வகுப்புவரை படித்துப்போட்டு வீட்டில் இருக்கிறாள். இளையவன் படித்துக் கொண்டிருக்கிறான்.
அவர் தன் வாழ்க்கையை எண்ணிப்பார்த்துக்கொண் டார். அவரும் கனகம்மாவும் வவுனியாவுக்கு வந்தபோது இருந்ததும் இப்போது இருப்பதும் எவ்வளவு மாறுதல்! கனகம்மா முன்பு எவ்வளவு அழகு.. இப்போது மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகி, நொய்ந்துபோய் இருக்கிறாள். அவளின் அழகு, இளமை எல்லாம் எங்கேயோ போய் விட்டன. ஆம்; அழகு நிலையற்றது என்பதை அவர் எண்ணிக்கொண்டார்.
அச்சுவேலியில் விவசாயம் செய்து, சொந்த ஊரில் வாழ வேண்டியவர் இன்று வவுனியாவில். அதுவும் மண் வீட்டில் ஏழைத் தொழிலாளியாக வாழ்கிறாரே!… தற்கெல்லாம் காரணம் அவரின் வெறிதானே!… அந்த வெறி இன்று அவரை எவ்வளவு தூரம் பாதித்துவிட்டது! தந்தவனத் தாருக்கு அதை நினைக்கும்போது வெட்கமாக இருந்தது. “சீ! நான் அப்படி நடந்துகொண்டேனோ?…” வீதியோரம் ஓடுவதைப்போல் தோன்றும் மாங்களிடையே அவரின் கடந்தகால நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருந்தன.
கந்தவனத்தார் அச்சுவேலியில் தன் தாய் தந்தையருடன் தோட்டஞ்செய்து வாழ்ந்த காலம்… அரும்பு மீசையும் நிமிர்ந்த மார்பும் அவரின் வாலிபப் பருவத்தை எடுத்தியம்பிய காலம்.
சுனகம்மா! கந்தவனத்தாரின் தோட்டத்தில் கூலிவேலை செய்கிறவள். தாழ்த்கப்பட்டவர்கள் எனக் கணிக்கப்படும் கூலியாட்களில் ஒருத்தி. வறுமைக்குள்ளும் அவளிடம் அழகு மிளிர்ந்து கொண்டுதானிருந்தது! சுருண்ட. நீண்ட தலைமுடி!. மிளகாய்ப்பழம் போன்ற சிவந்த இதழ்! ‘இப்படி ஒரு அழகா!’ என வியக்கக் கூடியவகையில் அவளின் அமைந்திருந்தது. கந்தவனத்காரின் மனம் அவளின் அழகில் ஈடுபாடு கொண்டது. அவளின் அழகில் அவர் மயங்கியது வியப்பில்லைத்தானே!
கூலியாட்களுக்குக் கூலிப் பணத்தைக் கொடுத்துவிட்டு மிளகாய்த் தோட்டத்தை நோட்டமிட்டவண்ணம் வரம்பில் நடந்துகொண்டிருந்தார் கந்தவனம். வரம்பில் நடந்து கொண்டிருந்தவரின் கண்ணுக்கு மிளகாய்ச் செடிக்குள் கனகம்மா நின்று கொண்டிருப்பது தெரிந்தது. “என்ன கனகம்மா எல்லாரும் போயிட்டாங்கள். நீ ஏன் இன்னும் போகல்லை? ” என்று கேட்டார். அவரின் கண்கள் அவளை விழுங்கிக்கொண்டிருந்தன! “புல்லுக் கிண்டியை எங்கேயோ தொலைத்துவிட்டேன் அது தான் தேடிக்கொண்டு இருக்கேன்” என்றாள். கந்தவனத்தாரின் காதுக்குள் கனகம்மாவின் குரல் கேட்டதாகத் தெரியவில்லை. அவர் மனிதராக இருக்கவில்லை ஊணர்ச்சிகள் கொழுந்துவிட்டுக் கொண்டி ருந்த அவரின் மனம் அவரை செயல் வீரனாக்கியது.
“என்னங்க நீங்க இண்டைக்கு இப்படி!” கந்தவன தாரின் பிடிக்குள் சிக்கித் தவித்த கனகம்மாவின் குரல் ஒலித்தது.
கந்தவனத்தார் வரம்பில் நடந்து கொண்டிருந்தார் அவரின் உணர்ச்சிகள் அடங்கியிருந்தன. தான் ரூ மிளகாய் நாற்றின் நுனியைக் கிள்ளிட்டதை இப்போதுதானுணர்ந் கார். அன்றிலிருந்த கந்தவனத்தாரின் மனம் அழுது கொண்டிருந்தது. “நான் கனகம்மாவைக் கெடுத்துவிட் டேன்! அவளின் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டேன்!
நாட்கள் கிழமைகள் ஆகி கிழமைகள் மாகங்களாகி காலம் ஒடிக்கொண்டிருந்தது. சனகம்மா இப்போது எல்லாம் வேலைக்கு வருவதில்லை. கந்தவனத்தாரின் நம்பிக்கை இறுகிக்கொண்டு வந்தது. “அப்படியென்றால் கனகம்மா ஒரு குடும்பப் பெண் அடையும் நிலையை அடைந்துவிட்டாளா?”
தோட்டத்தில் கூலிக்காரப் பெண்கள் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். அவர்களின் பார்வையை அவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. கந்தவனத்தாரின் மனச்சாட்சி அவரையே குத்திக்கொண்டிருந்தது.
இந்த விஷயம் நாளைக்கு ஊருக்குத் தெரியாமலா போகப்போகிறது? கனகம்மாவின் தாய், தகப்பனார் கந்தவனத்தாரின் தகப்பனிடம் நியாயம் கேட்க ஓடி வரு வார்கள். அப்பா அவர்களைக் கேலிசெய்வார். “கீழ்சாதி நாயள்! ஆரோ குடுத்த பிள்ளையை வாங்கிக் கொண்டு என்ர மகனை மாப்பிளை பிடிக்க வருகுதுகள். தூ!… நாயள்! என் று கூறுவாரே தவிர யாரும் கந்தவனத்தில் சிறிதும் ஐயப்படமாட்டார்கள். மகனில் அவ்வளவு நம் பிக்கை. அதன் பிறகென்ன?… ககைம்மா உயிரோட வாழ் வாளா?… அவளுக்கு அதற்குப் பிறகென்ன வாழ்க்கை! எங்கேயும் கிணத்திலை குளத்திலை விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வாள்!.. இதற்கெல்லாம் காரணம் நான்தானே!
இறுதியாக கந்தவனத்தார் ஒரு முடிவுக்கு வந்தார். “எப்படியாவது கனகம்மாவைக் காப்பாற்றியே தீருவேன்!”.
அன்றிரவே கனகம்மாவையும் கூட்டிக்கொண்டு வவுனி யாவுக்குப் புறப்பட்டுவிட்டார். ‘கனகம்மாவை வீட்டுக்குக் கூட்டிச் சென்றால் அப்பா அடித்துத் துரத்துவார். அதைவிட நாங்கள் ஊரை விட்டுப்போய்விட்டால் எவ்வளவு மேல்” அன்று வந்தவர்தான். தொழில் தொடங்குகையில் போதிய அளவு பணமில்லை. பணமில்லாமல் தொடங்கும் தொழில் ஒரே தொழில்தானே – கூலிவேலை! அன்று தொடங்கிய வேலை; இன்றும் அதே தொழில்தான்!
கந்தவனத்தார் அன்று கனகம்மாவைக் கைவிட்டுவிட்டுச் சுகமான வாழ்க்கை வீட்டில் நடத்தியிருக்கலாம்.. ஆனால். அவர் அதை விருப்பவில்லை. தன்னால் கெடுக்கப்பட்ட பெண்ணின் வாழ்வு சீரழிந்து கொண்டிருக்கும்போது, தான் மட்டும் சொகுசான வாழ்க்கை வாழ்வதா.? ‘எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நான் கனகம்மாவைக் காப்பாற்றுவேன்! இதுதான் அவரின் இறுதிமுடிவு.
அன்றிலிருந்து தொடங்கிய வறுமை இன்றும் அவரை விட்டகலவில்லை. அவர் அதைப்பற்றிக் கவலைப்படவுமில்லை. எப்படியோ கனகம்மாவுக்கு வாழ்வு கொடுத்துவிட்டார்.
காலை இதே வழியாகத்தான் வருவார். மாலை வேலை முடிந்ததும் சம்பளத்தை வாங்கி அதனைக் கொண்டு சமையற் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்புவார். அவரின் வறுமை நிறைந்த வாழ்க்கை இப்படி அசைந்து கொண்டு செல்கிறது. இடையே அவர் தமது மூத்த மகளை அட்வாண்ஸ் லெவல் வரை படிப்பித்து விட்டார். இனி அவருக்கு இரண்டே இரண்டு இலட்சியங்கள்தாம். ஒன்று தம் மகனைத் தம்மைப்போல் அல்லாது நல்ல கெளரவமான வேலையில் அமர்த்துவது; மற்றது; இரண்டு குமர்களையும் நல்ல இடத்திற் கரைசேர்ப்பது.
கந்தவனத்தார் படலையைத் திறந்துகொண்டு வளவுக் குள் நுழைந்தார். நிலைப்படியருகில் கனகம்மா கலங்கிய கண்ணுடன் அமர்ந்திருந்தாள். அவளுக்கருகில் புஷ்பா. இரு வரும் அவரின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. ‘பாக்’கை வாசலில் வைத்துவிட்டுத் திண்ணை யில் அமர்ந்தார் முகத்தைத் தோளில் இருந்த துவாயால் துடைத்தவண்ணம் “என்ன கனகு. ஒருமாதிரி இருக்கிறாய்?” என்றார்.
“மாமாவுக்கு வருத்தம் கடுமையாம்” மெதுவாகக் கூறினாள்.
”மாமாவோ! ஆரது?” ஆச்சரியத்துடன் கேட்டார்.
“உங்கட அப்பாதான்!”
அவருக்கு ஆச்சரியம் காங்கமுடியவில்லை. இருபது வரு டத்துக்குப்பின் இன்றுதான் தகப்பனாரைப்பற்றிக் கேள்விப் படுகிறார்!
“என்ன, அப்பாவுக்கோ? உனக்கென்னென்று தெரியும்?”
“உங்கட அம்மா கடிதம் போட்டிருக்கிறா.”
“என்ன கடிதமோ!… இஞ்சை கொண்டா” ஆச்சரியத்துடன் கடிதத்தை வாங்கினார். அவசரமாகப் பிரித்து மங்கலான வெளிச்சத்திற் படித்தார்.
அன்புள்ள மகனுக்கு,
அப்பா இங்கு கடுமையான வருத்தத்தில் இருக் கிறார். ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்குக் கொண்டுபோகச் சொல்லிப்போட்டாங்கள். உன் வரவை எதிர்பார்க்கிறேன். வரும்போது தனியாக வரவும்.
இப்படிக்கு,
உன் அம்மா.
வாசிக்கத் தொடங்கும்போது இருந்த அவசரம் கடைசி வரியைப் படித்ததும் பறந்துவிட்டது. விரக்தியுடன் கடிதத்தைக் கசக்கிப் போட்டுவிட்டு அமர்ந்திருந்தார், சுந்த வனத்தார். கனகம்மா அமைதியைக் கலைத்தாள்.
“எப்ப போகப்போறிங்கள்?”
”எங்கை?…” அலட்சியமாகக் கேட்டார். தான் கேட் டது அவசியமற்ற கேள்வி என்பது அவருக்கே தெரியும்.
“உங்கட அப்பாவைப் பார்க்க அச்சுவேலிக்கு …”
“நான் போகவில்லை..”
கனகம்மா திடுக்கிட்டபடி தலை நிமிர்ந்தாள். தகப்பன் கடுமையான சுகவீனத்தில் இருந்துகொண்டு மகனுடைய வரவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது மகன் இங்கே அலட்சியமாக இருந்தது அவளுக்குத் திகைப்பாக இருந்தது.
“இஞ்சாருங்கோ, வீண் பிடிவாதம் கொள்ளாதையிங்கோ …நாளைக்குப் போயிட்டு வாருங்கோ.”
வானத்தை வெறித்து நோக்கிக் கொண்டிருந்தவர் கன கம்மாவை ஏறெடுத்துப் பார்த்தார். அவரின் முகத்தில் வெறுமை பரவிக்கிடந்தது.
”கனகம்மா, நீ இதே பதிலை அப்பவே சொல்லியிருக்கவேணும். எப்ப தெரியுமா? நானும் நீயும் வவுனியாவுக்கு வெளிக்கிட்ட அன்று, ‘எனக்காக ஏன் வீட்டைவிட்டு கோவிச்சுக்கொண்டு வரப்போறியள் பேசாமல் வீட்டோட இருங்கோ’ என்று நீ சொல்லியிருக்கவேணும்.
அதை விட்டுட்டு இண்டைக்கு நீ சொல்லிப் பிரயோ சனம் இல்லை. இவ்வனவு காலமாக எனக்கொரு மகனிருந் தானே, அவன் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருப்பான் என்று நினைக்காமல், இண்டைக்கு ஏன் நினைச்சவை? ‘சாகப் போறன்; கொள்ளி வை க ஆள் இல்லையே’ என்றுதானே. வையின்ரை கௌரவம் அவைக்குக் கொள்ளிவைக்கட்டும். அவையின்ர குடும்பக் கௌரவம் குறைஞ்சு போயிடும் என்று தானே இவ்வளவு காலமாக என்னைப்பற்றி அக்கறையில் லாமல் இருந்தவை. அந்த அக்கறை ண்டைக்கு ஏன் வந்தது? ‘கொள்ளிவைக்க மகன் வேணுமே’ என்றுதானே! வன் அண்டைக்குச் செத்துப்போயிட்டான்; எங்களுக் கந்தவனம் என்றொரு மகன் இல்லை என்றுதானே தலை முழுகி இருப்பினம். அப்படிப்பட்ட இவனுக்கு இண்டைக்கு எப்படி உயிர் வந்தது? செத்தவன் ஒருநாளும் உயிர்க்க மாட்டான், கனகு”.
“எனக்கும் மானம் மரியாதை இருக்குத்தான். கடைசி நேரத்திலை உன்னையும் என்ர பிள்ளையளையும் குறைஞ்ச சாதி என்று மரியாதை கெடுத்துப் போட்டினம். எப்படித் தெரியுமா? ‘வரும்போது தனியே வா’ என்றல்லவோ கடி தம் போட்டிருக்கினம். அதிலே இருந்து விளங்கேல்லையா? என் குடும்பத்தை மரியாதை கெடுத்தவையின்ரை வீட்டுக்கு நான் போகோணுமோ? எனக்கு என் மனைவி மக்கள் தான் பெரிசு. அப்பா, அம்மாதான் பெரிசெண்டால் நான் உன்னோட அண்டைக்கு வந்திருப்பேனா? நீயே இப்ப சொல்லு கனகம்மா, நான் அங்கை போகத்தான் வேணுமோ?”
கந்தவனத்தார் தன் நீண்ட உரையை முடித்தார். அவ ரின் பேச்சில் அத்தனையும் உண்ை என்பது கனகம்மாவுக் குத் தெரியும். இருந்தாலூம் தகப்பன், மகன் என்ற உறவு இருக்கிறதல்லவா… எப்படியாவது கந்தவனத்தார் அங்கு போகவேணும் என்பது தான் அவளின் விருப்பம். ஆனால் அதை இப்போது சொல்லப்போனால் கந்தவனத்தார் அடிக்கத்தான் வருவார்.
இரவு மெல்ல மெல்ல நகர்ந்தது, பொழுது புலர்கிறது. கந்தவனத்தார் வழக்கம்போல தன் ‘பாக்கை’ எடுத்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பிவிட்டார். கனகம்மா மீண்டு மொருமுறை சொல்லிப் பார்த்தாள். அவரின் மனம் இளகிய தாக இல்லை.
கந்தவனத்தார் படலையைத் திறந்து வீதியில் ஏறும் போது சுந்தசாமி உபாத்தியாயர் விஷயத்தைக் கேள்விப்பட்டு ஓடி வந்துகொண்டிருந்தார். “என்ன கந்தவனம் அச்சுவே லிக்குப் போகவில்லையோ?…” “ஏன் மாஸ்ரர் நான் போ கோணும்?” அலட்சியமாகக் கேட்டார் கந்தவனத்தார்
“கந்தவனத்தார் உதென்ன கேள்வி. பெத்து ஆளாக்கிய தகப்பனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கு. அதைத் தான் செய்யச் சொல்லுகிறன்.”
“உது பிழை மாஸ்ரர். அவர் என்னைப் பெத்து வளர்த் தாரே தவிர, என்னை ஆளாக்கியது நான்தான். மாஸ்ரர், என்ர வீட்டு விலாசம் தெரிந்தளவுக்கு என்னைப்பற்றி முழு விஷயமும் கேள்விப்பட்டிருப்பினம். நான் முதுகிலை மூட்டை சுமந்து கூலிவேலை செய்யிறது எல்லாம் கேள்விப்பட்டிருப் பினம். அப்போது வந்து என்னை எட்டிப் பாக்காதவர்கள், இப்ப ஏன் கடிதம் போடுகினம்? மாஸ்ரர், எனக்குக் குடும்பந்தான் பெரிசு. இண்டைக்கு வேலைக்குப் போகாட்டி நாளைக்கு அடுப்பிலை பூனை படுக்கும். நான் வாறன் மாஸ்ரர்..” கந்தவனத்தார் நடந்துகொண்டிருந்தார்,
மாஸ்ரர் அவரையே பார்த்துக்கொண்டு நின்றார் அவரின் வாய் முணுமுணுத்தது. “கந்தவனம், நீ உண்மை யிலே பிடிவாதக்காரன் தான்!”
தூரத்திலே தந்திப் பியோன் வருவது அவருக்குத் தெரிகிறது. தபாற்காரன் வந்தாலென்ன, தந்திப் பியோன் வந்தாலென்ன பிடிவாதக்காரன் பிடிவாதக்காரன் தான்!
– ஈழநாடு, 1978.
– தகவம் பரிசுக் கதைகள் (தொகுதி-I), முதற் பதிப்பு: ஒக்ரோபர் 1987, தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்), யாழ்ப்பாணம், இலங்கை.
அன்ரனி மனோகரன்
அன்ரனி மனோகரன் வன்னிவள நாட் டைப் பிறப்பிடமாகக் கொண்டவர், தமது பதினாறாவது வயதிலிருந்தே பத்திரிகைகள் சஞ்சிகைகன் என்பனவற்றில் எழுதத் தொடங்கினார். புதிய உலகம் என்னும் சஞ்சிகையிலே 1977 இல் இவரது முதலா வது இலக்கியப் படைப்பு வெளியாயிற்று
அன்ரனி மனோகரன் ஏறக்குறைய இரு பது சிறுகதைகளும் சில கவிதைகளும் எழு தியுள்ளார். இலங்கையில் நடத்தப்பட்ட வெவ்வேறு சிறுகதைப் போட்டிகளில் இவ ரது நான்கு சிறுகதைகள் பரிசுபெற்றன. இங்கு பிரசுரமாகும் சிறுகதை அன்ரனி யின் முதற்படைப்பு; அவர் பொறியியல் மாணவனாக இருக்கும்போது எழுதியது.