பிடிக்காத மாப்பிள்ளை!





(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“இந்த மாப்பிள்ளை உங்கள் பெண்ணுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் சார்” என்றார் தரகர்.

“என்ன பண்ணுகிறார்?” என்று கேட்டார் ராஜசேகர். பெண்ணின் அப்பா.
“ஒரு தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை செய்கிறார். ஒரு பீடி சிகரெட் கிடை யாது. வெத்தலை பாக்குப் பழக்கம் கிடையாது.
தண்ணி அடிக்கிற பழக்கமும் கிடையாது. பார்ட்டிக்களுக்குப் போனால் கூட வெறும் கூல்டிரிங்க்ஸ் தான் குடிப்பார்.
காதல் கீதல் மற்றும் பெண் சகவாசம் கிடையாது. பார்க்கிறதுக்கும் அழகாக இருப்பார்.” என்றார் தரகர்.
“மல்லிகா உன் விருப்பம் என்னம்மா? என்ன தான் இருந்தாலும் நீ கல்யாணமாகி மாப்பிள்ளை வீட்டுக்குப் போகிறவள்” என்று தன் மகளிடம் கேட்டார் ராஜசேகர்.
“இந்த மாப்பிள்ளை வேண்டாம்பா”
“ஏம்மா?”
“சிகரெட் குடி எந்தப் பழக்கமும் கொஞ்சம் கூட தெரியாமல் வளர்ந்திருக்கிறார். வாழ்க்கையைக் கொஞ்சம் கூட அனுபவிக்க தெரியாத இந்த மனுசனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டால் எப்படி இவரால் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்த முடியும் வேறு மாப்பிள்ளை பாருங்கள் அப்பா” என்றாள் மல்லிகா. ராஜசேகரும், தரகரும் மலைத்துப்போய் நின்றனர்.
– இலக்கியம் பேசுகிறது, ஜூலை – ஆகஸ்ட், 1998.