பழைய கதை புதிய கதைப் பாடல்!
(ராபர் புரூஸ் கதையை இன்றைய சேம்பியன்ஷிப் கிரிக்கெட் ஆட்டத்தோடு இணைத்தொரு கதைப் பாடல்)

ராபர்ட் புருஸ் என்பவன்
ஸ்காட் லாந்து மன்னனாம்
இங்கி லாந்து நாட்டினால்
தோற் கடிக்கப் பட்டவன்!
காட்டிலொரு சிலந்தியாம்
மாறி மாறிக் கட்டிய
கூட்டைக் கண்டு மனதிலே
போட்டி உரத்தைப் பெற்றனன்
இங்கிலாந்தை வென்றவன்
இனிய வெற்றி பெற்றதும்
உலக அரங்கில் உன்னத
பெயரைப் பெற்று உயர்ந்ததும்
அன்று நடந்த கதையல
இன்றும் கூட அப்படி
இதய உரத்தின் வெற்றியை
சேம்பியன் ஷிப்காட் டிச்சாம்!
உலக நாடு யாவையும்
வென்று வாகை சூடிய
இங்கி லாந்தை வெல்வதை
இலட்சியமாய்க் கொண்டுமே
ஆஸ்தி ரிலேயா நாடுமே
ஆங்கி லேய நாட்டினர்
அடித்த அதிக ரன்களை
எடுத்து வெற்றி பெற்றனர்
உலக கதை ஒருவரின்
உயர்வு பெற உதவுமேல்
உனக்கும் எனக்கும் அக்கதை
உதவி செய்யக் கூடுமே!
கற்ற கதைகள் என்றைக்கும்
கைகொடுக்கும் என்பதைக்
கதையின் மூலம் அறிந்துகொள்!
கருதிநீயும் உயர்வு கொள்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |