கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 80 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பரவோகத்தில் பிரம்மாண்டமான ஒரு மணி இருக்கிறதாம். ஜெபமானது மணிக்கயிற்றைக் கீழே இழுக்கிறதாம். அப்பொழுது ஆண்டவருடைய காது களில் மணிச்சத்தம் ஒலிக்கிறதாம்.

சிலர் கடமைக்காக-வழக்கமாக ஆலி அனலற்று ஜெபிக்கிறார்களாம். பெரிய மணி அசைகிறதாம். அவ்வளவுதான். மணிச்சத்தம் இல்லை.

சிலர் என்றைக்காவது ஒரு நாள் கயிற்றை ஒரே இழுப்பு இழுத்து விட்டு விடுகிறர்களாம். ஒரே ஒரு தொனிதான் ஒலிக்கும். விட்டு விட்டு ஒரு மணி அடிப்பது துக்க அறிகுறி.

இன்னும் சிலரோ கயிற்றை இடைவிடாமல் பலங் கொண்ட மட்டும் இழுத்துக் கொண்டே இருக்கிறார்களாம். மணி ஓயாது ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

இடைவிடாது வேண்டுதல் செய்யும் அவர்களுக்கும் கடவுள் பதிலளித்துக் கொண்டிருக்கிறார் என்று ஸ்பர்ஜன் ஐயர் கூறுகிறார்.

“நீ இடைவிடாமல் வழிபடுகிற உன் கடவுள் உன்னைக் காப்பாராக” கத்– [தானியேல் 6:16]

“கடவுள் தம்மால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் தம்மை நோக்கி இரவும் பகலும் கதறும் போது அவர்களுக்குப் பொறுமையோடு செவி சாய்த்து நியாயம் வழங்காமலிருப்பாரா?” [லூக்கா 18:7]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *