பம்பரம்!






சின்னச் சின்ன பம்பரம்
சிறிய எனது பம்பரம்
மண்ணில் ஆடும் பம்பரம்
|மரத்தி லான பம்பரம்
காலி லாணி இருப்பினும்
கவலைப் படாத பம்பரம்
வாழும் வாழ்வி லாயிரம்
வலிகள் வந்து போகலாம்
வருந்தி டாது வாழ்கையை
வாழ்ந்து காட்டும் உறுதியை
உரைக்கும் எளது பம்பரம்
உவகை கொடுக்கும் பம்பரம்
பாரிலிந்த வாழ்க்கையும்
பம்பரத்தைப் போலத்தான்
கயிறைச் சுற்றி ஆட்டிய
கடவு ளெங்கோ இருக்கிறான்
ஆடும் வரை ஆட்டத்தை
ஆட விட்டுப்பார்க்கிறான்
|ஆட்ட மடங்கிப் போனதும்
கைகள் கொட்டிச் சிரிக்கிறான்!
ஆடி அடங்கிச் சாய்வதெல்லாம்
அவன் வகுத்த கணக்கிலே
வாடியென்ன வதங்கியென்ன
வாழும் இந்த ஜெகத்திலே!!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |