ந.சிதம்பர சுப்பிரமணியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 12, 2025
பார்வையிட்டோர்: 259 
 
 

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் எஸ்.எஸ்.எல்.சி (இன்றைய பத்தாம் வகுப்பு) படித்துக்கொண்டிருந்த சமயம். of GUT சித்தப்பாவுடன் திருவட்டீஸ்வரன் கோவில் குளத்துச் சந்து வடக்கோடி வீட்டில் இருந்தேன். நடு முற்றத்தைச் சுற்றி மூன்று குடித் தனங்கள் (நாங்கள் ஒன்று). மாடியில் தனிக் குடித்தனம். 

சந்து வீடு என்றதும் மூக்குத் தண்டு சுருங்குகிறதா? அப்படி, சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம். 

வாரா வாரம் ஒரு கிழவர் மாடியிலிருந்தவர்களைப் பார்க்க வருவார். மாடியேறிப் போவார். 

“இவாள் யார் தெரியுமா?” சித்தப்பா என்னை உரத்த ரஹஸ்யத்தில் கேட்பார். பெரியவருக்கும், சித்தப்பா நின்று கொண்டிருந்த இடத்துக்கும் யாது சம்பந்தமும் இருக்காது ஆயினுக்கும் அவருக்கு வழி விடுவதுபோல, ஒதுங்குவார். 

விழிப்பேன். 

“யூ ஃபூல், அவர்தான் தக்ஷிணாத்ய கலாநிதி மஹா மஹோபாத்யாய பண்டித உ.வே. சுவாமிநாத ஐயர்டா!” 

அப்பவும் விழிப்பேன். 

என் தமிழ் மணம் அப்படி. 

ஆயினும், ஐயர் வந்து பார்க்கும்படி மாடியில் யார்? போகப் போகத் தெரியவந்தது. ஐயர்வாள் தமிழில் எப்படியோ மாடியில் இருப்பவர் ஸம்ஸ்கிருதத்தில் அத்தனை புலமை. பெரியவர்கள் பெரிய தடடத்தில், மாடியில் பரிமாறிக்கொள்கிறார்கள் என்பது தவிர என்னால் வேறு என்ன யூஹிக்க முடியும்? வறு என்னதான் எனக்குத் தகுதி? 

மாடியில், தாத்தாவும் பாட்டியும் தவிர யாருமில்லை. ஒரே பையன்.சிம்லாவில் பெரிய உத்யோகம். 

பிறகு, பையனுக்குத் தென்னாட்டுக்கு மாற்றலாகி விட்டதோ, அல்லது பெற்றோர்களைத் தன்னிடமே வரவழைத்துக் கொண்டுவிட்டானோ, அவர்கள் பெயர்ந்து விட்டார்கள் 

நான் எஸ்.எஸ்.எல்.சி தேறி, வலை தேடும் மும்முரத்தில் இறங்கினேன். 

அடுத்து மாடிக்கு ஒரு ஸங்கீத வித்வான் வந்தார். பிரபலமானவராகத் தெரியவில்லை. ஆனால் அவருக்கும் வயதாகவில்லை. சதா, மாடியில், தம்பூர்,ஹார்மோனியம். அவர் சாதகமும்தான். சில சமயங்களில், பக்கவாத்தியங் களுடன் கச்சேரியும் நடைபெறும். கஞ்சீராவும், மிருதங் கமும், அவைகளின் தனி கோதாவும், தாளத்தில் தொடை தட்டலும் மாடி அதிரும். 

சித்தப்பாவுக்கு எரிச்சலாய் வரும். குழந்தைகளுக்கும் படிப்புக் கெடுகின்றது. தவிர, அவர் எண்ணத்தில் ஸங்கீதம் சோம்பேறிப் பிழைப்பு. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. 

மாதம் ஓரிருமுறை, மாலைவேளை மாடியிலிருந்து ஒரு சின்ன ஊர்வலம் கிளம்பும். முன்னால் தம்பூரா, அடுத்து வித்வான், அவர் பின்னால் ஒரு சின்னப் பரிவாரம். 

டோபா மயிரை நெற்றியிலிருந்து பின்னுக்கு அழுந்த வாரி முடிப் பிரிகள் சுருண்டு, பிடரியில் குஞ்சங்களாய்த் தொங்க… 

சித்தப்பா மூக்கைப் பிடித்துக்கொள்வார். அவருக்கு ஜவ்வாது, ஏன், எந்த வாசனையுமே ஆகாது. அது போகட்டும்; வித்வான் ஏன் மையிட்டுக் கொண்டிருக்கிறார்? எனக்கு ஆச்சரியமாயிருக்கும். ஆண்கள்கூடவா? 

அவரும் போய்விட்டார். 

எனக்கு இன்னும் வேலை கிடைத்தபாடில்லை. தட்டெ ழுத்தும் குட்டெழுத்தும் சின்னப் பரீக்ஷை தேறினேன். 

சென்னைப் பல்கலைக்கழக லைப்ரரியில் வாசகர்களின் பெயர்ப் பதிவு ஏட்டில், என் பெயருக்குப்பின் ‘பி.ஏ.’ என்று பொய் சேர்த்துக் கொண்டு உள்ளே சென்று மேனாட்டு இலக்கியங்களைப் படிக்கவில்லை, விழுங்கினேன். உள்ளே பற்றிக்கொண்டுவிட்ட ஆக்கசக்தி வடிகால் தேடித் தவித்தது. நானும் எழுதணும்.எப்படி,என்ன,எதை? தலிப்பே அதுதான். 

மாடி கொஞ்ச நாள் காலியாகக் கிடந்தது. வாடகை சுளையாய் ரூபாய் பதினெட்டுக் கொடுத்துவரச் செயல் வேண்டாமா? 

ஏதேனும் புத்தகத்தை எடுத்துக்கொண்டு மாடியில் தனிமையில் உட்கார்ந்திருப்பேன். புத்தகம் மடியில் விரித்த படி கவிழ்ந்து கிடக்கும். இந்தக் கூடத்தில், பாண்டித்யமும் ஸங்கீதமும் நடமாடியிருந்திருக்கின்றன என்கிற எண்ணத் திலேயே மர்மமான கவர்ச்சி தெரிந்தது. 

“அப்பா உப்பரிகையிலிருந்து இறங்கி வரையா? அட்வான்ஸ் வாங்கியாச்சு.” 

இளஞ்ஜோடி! அம்மா. 

அம்மாவுக்கும் வயதாகவில்லை. 

வசதியான குடும்பம். நிறைய நிலபுலன் (மன்னார்குடிப் பக்கம்?) சொத்து இருக்கும்போல் தெரிகிறது. ஒரே பையன் சி.ஏ வுக்குப் படித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு குறை. கலியாணமாகி நாளாகிறது. இன்னும் புத்ரப்ராப்தி யில்லை. 

(இது பற்றிச் சிதம்பர சுப்பிரமணியம் பின்னால் என்னிடம் தமாஷாக: அம்மா அவசரப்பட்டுவிட்டாள். கொஞ்சம் பொறுத்திருந்தால் அந்தக் கவலையைப் பட்டிருக்க வேண்டாம்!”) 

-நான் இன்னும் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். என்னைவிடப் பெரியவன் கலியாணமாகி இன்னும் படித்துக் கொண்டிருக்கும் சௌகரியம் – புரியவில்லை. புழுக்கம்தான் தெரிகிறது. 

முதல் சிறுகதை 

சில மாதங்களுக்குப் பிறகு. இன்னொரு சித்தப்பாவுக்கு அவர் ஜாகை, திருவல்லிக்கேணி – இடம் மாறினேன். அவருடைய கண்காணிப்பில் வேலை சுருக்கக் கிடைக்கலாம் என்று பெரியவர்களின் முடிவு. 

அங்கேயும் வேலைவாய்ப்பு நிலைமை மாறிவிடவில்லை. ஆனால், வேறு வாய்ப்புகள் தாமாகவே முளைத்தன. 

எதிர் வீட்டில் கல்லூரி மாணவன் சகவாசம் கிடைத்தது. 

அவன் வீட்டில் உத்தமமான புத்தகங்கள், சஞ்சிகைகள் படிக்க முடிந்தது. என் இலக்கியப் ப்ரக்ஞை விரிவடைந்தது. ரஸனை மெருகேறிற்று. அறிவுபூர்வமான சம்பாஷணையில், சர்ச்சையில், விசாரங்களில் திளைத்தேன். 

என் நண்பன் சம்பந்தப்பட்டு, ஆனால் நிச்சயமாக அவன் உதவியால் அல்ல – Short story” எனும் ஆங்கில மாதப் பத்திரிகையில் என் முதல் கதை பிரசுரமாகியது. 

அடுத்தடுத்து என்னுடைய மூன்று கதைகள், மணிக் கொடியில் வந்தன. 

என்னை அறியாமலே என் நடையில் சேவல் புகுந்து கொண்டது. லேசாகத்தான். ஆனால் சேவல். 

பிறகு ஒரு மாலை, 

(ராமாமிருதம், உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ்!”) என் நண்பன், பிரஸிடென்ஸி காலேஜ் மணிக்கூண்டெதிரில் மரீனாவில் கூடிப் பேசும் மணிக்கொடி எழுத்தாளர்கள் குழு வுக்கு அழைத்துச் சென்றான். அதில் குளத்துச் சந்து வீ ட்டு மாடியில் குடியிருக்கும் 

இவர் இங்கே. எப்படி? 

யாரோ : ”இவர்தான் சிதம்பர சுப்பிரமணியம்.

அங்கே விழிமுகம். 

இங்கே அறிமுகம். 

தளதளவென்று று, பூசினாற்போன்ற தேகம். அலைபாயும் மயிர். கதர் அரைக்கைச் சொக்காய் மேல், சவுக்கத்தைச் சால்வை போல் போர்த்தியிருந்தார். 

ஆனால், அவர் என்னை அடையாளம் கண்டுகொள்ள வில்லை. அடையாளம் கண்டுகொள்ள விருப்பப்படவில்லை என்று தோன்றிற்று. சுண்டல்காரப் பையனிடம் எனக்கும் என் நண்பனுக்கும் அளக்கச் சொன்னார். (இதெல்லாம் விஷயமா என்கிறீர்களா? எங்களுக்கு அப்போது – அது பெரிய விஷயமாய்த் தானிருந்தது.) 

என்னை இங்கே இப்படிப் புதுமுகமாகப் பார்ப்பது எனக்கு ஆத்திரமாக வந்தது. ஏன்? நானும் அடியெடுத்துக் கொடுக்கவில்லை. அப்புறம் சித்தப்பா வீட்டுக்கு நான் போசு. நேர்ந்தபோதுகூட அவரைச் சந்திக்கவில்லை. 

[அவர் தாயார்: ஏண்டா பையா, நீ கதை எழுதறியாமே!”] 

நான்: யார் சொன்னது?” (அசட்டுக் கேள்வி. ஆனால் அடக்க முடியாத கேள்வி. பெருமிதம் அப்படி!) 

“என் பிள்ளைதான் சொன்னான். நன்னாவே எழு தறியாமே!] 

ஒ, இவந்தான் சிதம்பர சுப்பிரமணியமா? இத்தனை அருகாமையில், முழு ஆளாய்த்தானிருந்தார். 

அவர் குரலை இன்றுதான் கேட்கிறேன். ஸன்னமான குரல். பேச்சிலேயே சுபாவமான சங்கோஜம் தெரிந்தது. அதிகமாகப் பேசுபவர் இல்லை. பிறர் பேச்சைக் கவனிப்பவர் தான் போலும்! அப்படியும் ‘உம்’மென்று இல்லை. இன்முகம்தான். வாய்விட்டுச் சிரிக்கையில் உடம்பு குலுங்கிற்று. 

இவர் கதைகளை ஏற்கெனவே படித்திருக்கிறேன். அப்போது நான் அவசரமாக மேயும் மாடு. என் பசிக்கு எல்லாமே புதுமை. இப்போது பின்னோக்கில் ந.சி.யின் எழுத்தை எடை போடுகையில் நான் காண்பது ஒரு கலைஞன். அவருடைய கதைக்கருக்கள் மென்மையானவை. பால்மேல் ஏட்டின் நலுங்கல்போல். உடனே ஞாபகத்துக்கு வரும் ஒரு கதையின் சுருக்கம் இங்கே சொல்கிறேன். 

சங்கீதத்தில் ஆர்வமிக்க ஒரு பெண், அவளைப்போலவே கலையார்வம் கொண்ட அவள் கணவனுடைய ஆதரவினால் முறையாக இசைப்பயின்று ஒருநாள் அவளுடைய முதல் மேடையும் ஏறுகிறாள். சபையோருடன் ஒருவனாக அவள் சபையோரிடம் அவன், கணவனும் உட்கார்ந்திருக்கிறான். நியாயமான ஆவலுடன் எதிர்பார்க்கும் ரஸிகத்தன்மைக்குப் பதிலாக அவர்கள் பேச்சில் அவன் கேட்பதென்ன? அவளு டைய ஆடை ஆபரணங்களையும் அங்க நேர்த்திகளையும் ரஸித்துககொண்டிருக்கிறார்கள் கேலியாகவும், கிண்டலாகவும்… குன்றிப் போகிறான். பல வருஷங்களுக்கு முன் படித்தது. இதில் ஆசிரியர் அச்சுறுத்துவது எந்த உயர்ந்த லக்ஷியமோ, அழகோ, எப்பவும் அதைச் சூழ்ந்துகொண் டிருக்கும் ஆபாசம். அவலத்தின் பாதிப்பிலிருந்து முற்றிலும் தப்பமுடியாது. அப்படித்தான் கதையை நான் காண்கிறேன். 

ந. சி.யின் தமிழ்நடை தெளிந்த நீரோடை போன்றது. எளிமையான சொற்கள், ஸ்படிகச் சிதர்கள் போல். 

தி.ஜ.ர. ஒரு தடவை சொன்னார். இன்னும் மறக்க வில்லை: ஓ அவருக்கென்ன, மனுஷன் எப்பவும் இசை, இலக்கியம். கலை என்கிற சூழ்நிலையிலேயே உழல்கிறார். அதையே சுவாசிக்கிறார். அவர் நன்றாக எழுதுவதற்குக் கேட்கணுமா? 

இதய நாதம் (பேரே பாருங்கள், அதிர்வுகள் கேட்க வில்லை?). தமிழ் நாவல் இலக்கியத்தில் ஒரு மைல்கல். அதில் அவருடைய கலையின் செழிப்பு, முழுக்கத் தெரிகிறது. அது தோன்றியதும் அதன் பரபரப்பும், சக்தியும், மக்கள் நினைவில் வெகுநாள் தங்கியிருந்தது. அதன் கிண் கிண் இன்றும்கூடச் செல்லுபடிதான். 

தன்னுடைய கலையை அவர் கறிவேப்பிலைக் கன்றைப் போல் பராமரித்து வளர்த்தவர். வளர்த்தவர்களுக்குத்தான் கன்றின் அருமை தெரியும். ஆதர்சக் கலைஞன் அப்படித்தான் இருப்பான். 

பாராட்டுதலிலும் அவர் மனத்தாராளம் மிக்கவர், “ராமாமிருதம், மணிக்கொடியில் மூன்று கதைகள் அடுத் தடுத்து உங்களுடையது வந்தனவே- புலியும் முயலும், ‘புலி ஆடு’, ‘பசி’ – All truly superb-mature works. Perfect short stories. A.E. Coppard, Arthur Calder Marshall f யில் – இந்தப் பேர்களே இங்கு யாருக்குத் தெரிந்திருக்கப் போகிறது? – ஒரு மூடை (mood) அதன் r தருணத்தை அப்படியே உறைய வைத்துக் காட்டியிருக்கிறீர்கள். Situation கதை கதைன்னு அடிச்சுக்கறான்கள். இந்தச் சங்கிலியை என்னிக்கு அறுக்கறோமோ, அப்பத்தான் நம் எழுத்துக்கே விடுதலை.” 

இரண்டாவது உலக மஹாயுத்தம். 

கூடவே நாட்டின் விடுதலைப் போராட்டம்.

தவிர, அவரவரின் சொந்தப் பிரச்சினைகள். 

மெரீனாவில் மணிக்கொடி எழுத்தாளர் கூடிப் பேசின பேச்செனும் பெயரில் நேர்ந்த உறவின் ஸ்ருதி, நினைப்போடு சரி. நாங்கள் கலைந்து போனோம். 

ஒருமுறை விசாரித்துக்கொண்டு- அப்போது அவர் கோடம்பாக்கத்தில் குடியிருந்தார். வாஹினி பிக்சர்ஸ் லிமிட்டெட் – மானேஜராக வேலை பார்த்து வந்தார். அவர் வீட்டுக்குப் போனேன். இருவருக்கும் காணாததைக் கண்ட மாதிரிதான். அளாவி மகிழ்ந்துகொண்டிருந்த சமயத்தில், நான் வந்த காரியத்தை அவிழ்த்துவிட்டேன். நான் வங்கியில் இருந்தேன். சூழ்நிலை சரியில்லாமல் எனக்கு என் வேலை மீது வெறுப்பு. வாஹினியில் வேலை போட்டுத் தரும்படி கேட்டேன். 

வந்ததே அவருக்கு ஒரு கோபம்! அதுமாதிரி அவரை தான் பார்த்ததேயில்லை. சற்று மிரண்டுபோனேன். 

‘Don’t be a fool. நீங்கள் இப்போது இருக்கும் இடம் உங்களுக்குக் கிள்ளுக் கீரையா? அவசரப்பட்டுப் பைத்தியக் காரத்தனம் ஏதேனும் பண்ணிவிடாதீர்கள். உங்கள் அசட்டுத் தனத்துக்கு யார் மேலேனும் பழியைப் போடத் தேடா தீர்கள். 

‘நீங்கள் வாஹனியில்தானே இருக்கிறீர்கள். அப்போ அது சோடையா?’ என்று முனகினேன். 

“இதோ பாருங்கள் ராமாமிருதம், என் காரணங்கள் சூழ்நிலை வேறு, B.N.-உம் நானும் காலேஜில் ஒரு வகுப்பில் ருந்தோம். ‘சும்மாத்தானே இருக்கே, வாயேன்” என்று அழைத்தான். தவிர, பெரியவர்கள் வைத்துவிட்டுப் போயி ருக்கிறார்கள் என்று நானும் சும்மா இருக்கலாமா? நம்மு டைய சமூகத்தின் set-up இல், உத்தியோகம் கௌரவச் சின்னம் மட்டுமல்ல, வயிற்றுப் பிழைப்பே அதுதானய்யா!” அவர் புத்திமதியைக் கேட்டேனோ, பிழைத்தேன். 

அவருடைய அந்திம நாள்களில் அவருக்குக் காலம் சரியாயில்லை. பல சோதனைகள் நடுவில் உடம்புக்கு வந்து விட்டது. கேள்விப்பட்டு அவர் வீட்டுக்குப் போனேன். மாமி ஏதோ மென்று விழுங்கினாளே ஒழிய, அவர் உடல் நிலையைச் சரியாகச் சொல்லவில்லை. ஆனால்,நான் தெரிந்துகொண்டது அவருக்கு ‘ஸ்ட்ரோக்’ *நடமாடறார். தன் காரியத்தைத் தானே பார்த்துக்கறார், ஆனால்-“

ஆனால் பேச்சு சரியாக வரவில்லை. 

ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசாமலும் இல்லை. ஆனால் அனேசுமாக ஜாடைதான் காட்டினார். கண்கள். சற்றுச் சிறியவைதான் — அசாதாரணமாகப் பேசின. பள பளத்தன. எனக்கு அவர் நிலைமை கெடுபிடியாகத் தோன்ற வில்லை. 
ஆனால், நான் பார்த்து வந்த ஒரு மாதத்துக்குள், ஒரு நாள் காலை ‘ஹிந்து’வை நடுப்பக்கத்தில் பிரித்ததும் அவருடைய மரணச் செய்திதான் கண்ணில் முதன் முதல் பட்ட து. கொஞ்சம் அதிர்ச்சிதான். உடனேயே மனதில் ஒரு வாக்கியம் தோன்றிற்று. 

“சாவே, கர்வம் கொள்ளாதே.” 

சுவடுகள் அழியலாம். ஆனால், ரேகைகளை அழிக்க முடியாது. 

– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *