நோய்க்கு இடம் கொடேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 66 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு விட்டில் பிணியன் என்று ஒரு பையன் இருந்தான். அவன் தன் உடம்பை ஒழுங்காகக் கவனிக்க மாட்டான். அதனால் அடிக்கடி நோய் வரும். கண்ட நேரங்களில் கண்டதைத் தின்பான். அளவு மீறிச் சாப்பிடுவான். வயிறு கழியும். அப்பொழுதும் கண்ட ஓட்டலுக்குள்ளே நுழைத்து காசைச் செலவழிப்பான். சாப்பாட்டில் சரியாக நடந்து கொள்ளாததால் அவனுக்கு வயிற்றுநோய் வந்து வாட்டியது. 

பிணியன் எப்போதும் சிகரெட்டு குடித்துக்கொண்டே யிருப்பான். அதனால் மார்பு நோய் உண்டாயிற்று. சில சமயங்களில் மூச்சு விடமுடியாமல் திணறுவான். 

பிணியன் தினந்தோறும் இரண்டாவது ஆட்டம் சினிமா பார்ப்பான். தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு கண் விழித்ததனால், கண் பார்வை குறைந்து துன்பப்பட்டான். 

பிணியன் தேகப் பயிற்சி செய்வதே யில்லை. அவன் உடம்பு ஊதலாய் இருந்தது. அவனை எல்லோரும் பொத்தல் பூசனிக்காய் என்றும், சோகை என்றும் வயிற்று வலிக்காரன் என்றும் கண் தெரியாதவனே என்றும் தாழ்வாகக் கூப்பிட்டு வந்தார்கள். அந்தம் பெயர்களைக் கேட்கக் கேட்க அவனுக்கு வெட்கமாய் இருந்தது. அவன் நோய்களுக்கு இடம் கொடுத்து வந்ததால் இளம் பிராயத்திலேயே இறந்து போனான். (ஆகையால்) 

நோய் வருவதற்கு இடம் கொடுக்கக் கூடாது.

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *