கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 69 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பலநூல் – பல நல்ல புத்தகங்களை, கல் – படிப்பாயாக.

ஓர் ஊரில் முத்தையன் என்று ஒரு பையன் இருந்தான். அவன் ஆத்தி சூடி; கொன்றை வேந்தன் என்னும் இரண்டு புத்தகங்களையும் நன்றாகப் படித்திருந்தான். அதோடு பள்ளிக்கூடத்தை விட்டு நின்றுவிட்டான். தான் எல்லாப் புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டதாக எண்ணி இறுமாப்பு அடைந்தான். 

ஒருநாள் முத்தையன் தன் மாமன் ஊருக்குச் சென்றான். அங்கே மாமனுக்கு மதி என்று ஒரு சிறியமகள் இருந்தாள். அவள் விடாமல் பள்ளிக்கூடம் போய் வருவாள். ஒரு நாள் மாமன் முத்தையனையும், மதியையும் பார்த்து, உங்களுள் படிப்பில் கெட்டிக்காரர் யார்? என்று கேட்டார். உடனே முத்தையன் நான்தான் என்றான், எப்படி என்று மாமன் கேட்டார். அதற்கு முத்தையன், ஆத்திசூடி,கொன்றைவேந்தன் முழுவதையும் நான் பாராமல் ஒப்பிப்பேன்; மதிக்குத் தெரியுமா? என்று கேட்டான். 

உடனே மதி, ஆத்திசூடி. கொன்றைவேந்தன் முழுவதையும் பாராமல் ஒப்பித்தாள். அதற்குமேலும், வாக்குண்டாம், நல்வழி, நன்னெறி முழுவதும் பாராமல் ஒப்பித்தாள். உடனே மாமன் முத்தையனைப் பார்த்து; உனக்கு வாக்குண்டாம் முதலியவைகள் தெரியுமா? என்று கேட்டார்; முத்தையன் தெரியாது என்று பேந்தப் பேந்த விழித்தான். அவனுக்கு மதியைப் பார்க்க வெட்கமாய்ப் போய்விட்டது. பல புத்தகங்களையும் படிக்காததால் ஒரு பெண்ணுக்குத் தோற்றுவிட்டோமே என்று வருந்தினான். (ஆகையால்) 

பல நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும். 

– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி. 

சுந்தர சண்முகனார் பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *