நாடு
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/author.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/category.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/date.png)
![](https://www.sirukathaigal.com/wp-content/uploads/2023/03/eye.png)
(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
நாட்டின் அமைப்பு
தமிழ் வேந்தர் மூவேந்தரில் இன்று சேரமன் னர் மட்டும் திருவிதாங்கூரில் வாழ்கிறார். இந்நாட் டில், அரசனுக்கு மாறுபட்ட பல கூட்டத்தார்களும், கூடியிருந்தே நாட்டைப் பாழ்செய்யும் உட்பகை வரும், சமயம் வந்தபோது அரசனைத் துன்புறுத் தும் கொலைத்தொழில் புரியும் குறும்பரும் இல்லா மையால் இன்றும் சித்திரைத் திருநாள் என்பவர் ஆட்சி செய்து வருகின்றார். இவர்கள் இல்லாத நாடே நாடு என்று சிறப்பித்துச் சொல்லப்படும்” என்று வள்ளுவரும் கூறியுள்ளார்.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு. (55)
பல்குழுவும் = (மாறுபட்ட கொள்கையால்) அரசனுக்கு விரோதமாகக் கூடும் பல கூட்டங்களும்
பாழ்செய்யும் = உடனிருந்துகொண்டே அழிவைத் தேடும்
உட்பகையும் = வஞ்சனையோடு உள்ள விரோதியும்
வேந்து அலைக்கும் = சமயம் வந்தால் அரசனைத்துன்புறுத்தும்
கொல்குறும்பும் = கொலைத்தொழில் செய்யும் குறும்பரும்
இல்லது நாடு = இல்லாது இருப்பதே நாடாகும்.
கருத்து: இம்மூவரும் இல்லாது இருக்கும் நாடே சிறந்த நாடாகும்.
கேள்வி: எந்த மூன்று பேர் இல்லாத நாடு நல்ல நாடாகும்?
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.