நல்லவர்களை கடவுள் காப்பான்!




குருசேத்திரப் போரில் அர்ச்சுனனின் அம்புகளினால் அடிபட்டுக் கீழே கிடந்தார் பிதாமகர் பீஷ்மர். அவரைச் சுற்றி கவுரவர்கள் நின்றனர். அவர்கள் பேசி விட்டு விடைபெற்றுச் சென்றவுடன் பாண்டவர்கள் வந்து அவரைச் சுற்றி நின்றனர்.
அப்போது பீஷ்மரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இதைக் கவனித்தான் அர்ஜுனன். “பிதாமகரே! நீங்கள் கண்ணீர் வடிக்கக் காரணம் என்ன?” என்று ஆத்திரத்துடன் கேட்டான் அவன்.
http://www.dinamalar.com/siruvarmala…es/Smr-1-5.jpg
“பாண்டவர்களாகிய நீங்கள் நல்லவர்கள் என்பதை நான் அறிவேன்! நீங்கள் இதுவரை பட்ட சிரமங்களும், துன்பங்களும், அடைந்த துயரங்களும் என் கண் முன் இப்போது நிழலாடுகின்றன. அதனால் என்னை அறியாமல் என் கண்கள் கண்ணீரைப் பொழிவிக்கின்றன. அதே சமயத்தில் இன்னொரு நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. நல்லவர்களுக்குத் துணையார் தெரியுமா? கடவுள் தான்! அவன் எப்போதும் அவர்களை நீங்காமல் காப்பான்.
“அந்த நல்லவர்கள் பதவி ஆசையில்லாமல், பணத்தின் மேல் எந்தவித மோகமும் இல்லாமல் வாழ்ந்து வரும் போது, வாழ்க்கையின் நன்மைகளைக் கடவுள் அவர்களுக்கு முடிவிலே கொண்டு வந்து கொடுப்பான். இதை இந்த வேளையில் நான் பார்க்கிறேன், உணர்கிறேன். கெட்டவர்களை நிச்சயம் அழிப்பார். நல்லவர்களை வாழ வைப்பார் என்று எண்ணிய போது என் கண்களில் நீர் சுரந்தது!” என்றார் அவர். இதைக் கேட்டதும் பாண்டவர்கள் மிகவும் நெகிழ்ந்து போயினர்.