நடுநிசி நாய்கள்..!

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 21, 2020
பார்வையிட்டோர்: 46,744 
 
 

இரவு பனிரெண்டு தாண்டி இரண்டு மூன்று நிமிடங்கள் இருக்கும்…!

வழக்கம் போல மொபைலை நோண்டிக்கொண்டிருந்தான் சுரேஷ்..! வாட்ஸப்.. ஃபேஸ்புக் குனு நண்பர்களுடன் ஒரே பிசி..!

எப்பவுமே தூங்கரதுக்கு பதினொன்னு பதினொன்னரை ஆகும்.. ஆனா இப்பல்லாம் லீவு ஆனதால தூக்கமே வரதில்ல..! ரெண்டரை மூனு மணி ஆகுது ஃபோனை மூடி வைக்க..! என்ன பண்ரது..?! இன்டர்நெட்டும் ஃபோனும் இல்லன்னா.. நாட்களைத் தள்ரது கொடுமையான விஷயமாத்தான் ஆயிருக்கும் இப்பல்லாம்..!

” லொள்..லொள்..லொள்.. கர். வவ்வூவூவூ…!! ”

திடீரென நாய் குலைப்பு சத்தம் கேக்க ஆரம்பிச்சிது… ! தெருவில நாய்கள் தொல்லை அதிகமாப் போச்சு இப்பல்லாம்..! அதுவும் கரெக்டா நைட்டு பனிரெண்டு பனிரெண்டே காலுக்கெல்லாம் கர்ண கடூரமா குலைக்க ஆரம்பிச்சிடராங்க எல்லாரும்..?! எப்படி இது கரெக்டா டைம் மெய்ன்டெய்ண் பண்ணி கூட்டமா குலைக்கரா்கன்னுதான் புரியல.?

இது இங்க மட்டும் இல்ல..! எல்லா ஊர்லயும் நடக்கிற விஷயம்தான்.! சில நண்பர்கள் கிட்ட கேட்டா பூமி.. எலக்ட்ரோமேக்னடிஸம் னு ஏதேதோ விளக்கம் சொல்லுவாங்க..! சுரேஷ்க்கு அதெல்லாம் புரியர்தில்ல.. காமர்ஸ் க்ரூப்புதானே..?!

சுரேஷ்க்கு ரொம்ப ஆசை..! ஒரு நாளாவது கடவுள்கிட்ட பேசி .. இந்த நாய்ங்க பேசரது புரிஞ்சிக்கிற மாதிரி வரம் வாங்கிடணும்னு ! இதுங்க என்ன பேசிக்கும்னு தெரிஞ்சிக்கணும்னு சுரேஷூக்கு ரொம்ப நாளா ஆசை…!

நினைக்க நினைக்கும்போதே…!

“டேய்..!கம்மனாட்டி!” னு ஒரு குரல்.. !

ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான் சுரேஷ்…!

“டேய்.! கம்மனாட்டி உன்னத்தான்டா.! மணி என்ன தெரியுமா.. ? ஒரு மணி ஆகப் போகுது..! இன்னும் தூங்காம லைட்டப் போட்டுகிட்டு என்னடா பண்ர.!?”

அந்த ப்ரௌன் கலர் குட்டி நாய்தான்…! இவன் இருக்கும் ஜன்னலைப் பார்த்துத்தான் கத்திக் கொண்டிருக்கிறது..!

அட தனக்கு நாய் பாஷை புரிய ஆரம்பிச்சிருச்சே ன்னு ஆச்சர்யப் பட வேண்டிய அதே நேரத்துல.. அந்த குட்டி நாய் தன்னப் பாத்து கம்மனாட்டி என்று கூப்பிட்டதை நினைத்து ரொம்ப அவமானமா போச்சு சுரேஷூக்கு..!

இருந்தாலும் முகத்தைத் துடைத்துக் கொண்டு , அந்த குட்டி நாய் என்ன பேசுதுனு கவனிக்க ஆரம்பிச்சான்..!

“டேய் கண்ணு..! சும்மா கத்தாம வந்து படு.. நேரமாவுதில்ல..!” கூப்பிட்டது கருப்பு கலர் அம்மா நாய்..!

“இல்லம்மா .!” உனக்கு ஒன்னும் தெரியாது..! அந்தக் கம்மனாட்டி் பயகிட்ட டெய்லி சொன்னாலும் தெனம் ..தெனம்..நைட்டு ஒரு மணி..ரெண்டு மணி வரைக்கும் லைட் ஆஃப் பண்ண மாட்ரானுக..கண்ணு கூசுது ..! தூக்கம் வர மாட்டேங்குது..!ரொம்ப தொல்லையா இருக்கில்ல..?! ”

“அவங்க அப்படித்தான்டா கண்ணு.. யார் பேச்சையும் கேக்க மாட்டாங்க.! நீ வா..! வாலால மூஞ்ச மூடிகிட்டு தூங்கு..!”

ரொம்ப அவமானமாப் போச்சு சுரேஷக்கு..!

” டேய் ..லைட்ட ஆஃப் பண்ரியா இல்லியா நீ.! காலைல இந்தப் பக்கம் வந்தப்பவே உன் கால கடிச்சு உட்ருப்பேன். போனா போவுது நம்ம தெரு ஆளாச்சேன்னு விட்டு வெச்சிருக்கோம்..! ”

“உனக்கென்னப்பா..! மூனு வேளையும் காலாட்டிகிட்டே திம்ப..! ஆனா நாங்கல்லாம் வால ஆட்டிகிட்டே நாலு தெருவில்ல..!! நாப்பது தெரு சுத்தினாத்தான் ஒரு வேளை சோறாவது கெடைக்கும்..! ஆஞ்சு.. ஓஞ்சு தூங்கலாம்னு வந்தா.. லைட்ட ஆஃப் பண்ரானா பாரு..?! நாங்கல்லாம் நல்லா தூங்கி , காலைல சீக்கிரமா எழுந்துக்கத் தேவையில்லையா.? லைட்ட ஆஃப் பண்ரா டேய்..?!” அன்பாகச் சொன்னது குட்டி நாய்…!

” த்த.. ! தூங்கரத பாரு வாயப் பொளந்துகிட்டு..! டேய்..சுரேஷூ.! என்னடா லைட்ட கூட அணைக்காம இப்படி தூங்கற.! ஃபோன் வேற நெஞ்சு மேலயே கெடக்கு.! ” தட்டி எழுப்பினாள் அம்மா..!

பேந்த பேந்த விழித்தான் சுரேஷ்.! அப்படியே தூங்கிவிட்டோம் எனப் புரிஞ்சிது.!

” லொள்..லொள்.. கர்….! ” ஜன்னல் வழியே சத்தம்..!

“அம்மா.. அம்மா.! அந்த நாய்ங்கல்லாம்…!! ”

“அத விடுடா.! லைட்ட ஆஃப் பண்ணிட்டு படு.. தெருநாய்லாம் நடுராத்திரி ல இப்படித்தான் தூங்க விடாதுங்க..” ன்னு சொல்லிட்டு தன் ரூமிற்கு போனாங்க அம்மா.!

” நைட்ல யாரு , யாரத் தூங்க விடாம தொந்திரவு செய்யராங்க.?!” ன்னு.. குழப்பத்தில் யோசிச்சுகிட்டே லைட்ட ஆஃப் பண்ணினான் ரவி..!

இனிமே பத்தரைக்கெல்லாம் லைட் ட ஆஃப் பண்ணிரனும், நாய்கிட்டலாம் அவமானப் பட முடியாதுன்னு மனசுக்குள்ள நெனச்சிகிட்டு படுத்தான்..!

கெண்டக்கால் சதை முக்கியம் சுரேரேரேஷூஷூ….!!

2 thoughts on “நடுநிசி நாய்கள்..!

  1. Arumaiyana kadhai sir. Migavum arpudhamaga sindhithu ulleergal. Melum pala kadhaigal pugazhpera enadhu vaazhyhukkal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *