துன்பம் துடைக்கும் குடை
கதையாசிரியர்: முல்லை பி.எல்.முத்தையா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,237
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,237
“உச்சி வானத்தில் முழு நிலவு ஊர்கிறது. பாணன் காண்கிறான். விறலிக்கு காட்டுகிறான். விறலியோ களிப்பு மிகுதியால் காட்டு மயில்போல் ஆடுகிறாள். ஆகா என்ன அழகு. நீலக் கடல் நடுவே நெருப்புப் பந்து மிதப்பது போல் காட்சியளிக்கிறதே
பாணனும் ஆனந்தக் கூத்தாடுகிறான்.
ஒருகணம் கழிகிறது. இருவரும் முழு நிலவை கை தொழுகின்றனர். ஏன்?
வண்ண நிலவல்ல அது, மாவளவன் வெண் கொற்றக் குடை துன்பம் துடைக்கும் குடை துயர் நீக்கும் நற்குடை எல்லையிலா இன்பம் பயக்கும் எழில் குடை என்று வாழ்த்துகின்றனர்.
– மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – முதற்பதிப்பு : ஆகஸ்ட் 2002 – முல்லை பதிப்பகம்