திருட்டு மாங்காய்




(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ரங்கன், பஸ்ஸிலிருந்து இறங்குவதைப் பார்த்ததுமே என்னும் ‘குப்’பென வெறுப்பு கிளம்பியது. ‘இங்கேயார் இருக்கிறாரென்று மாதத்திற்கு இருமுறை இவன் இல்வூர் மண் மிதிக்கிறான்!’

ஐந்து வருடங்களாக அவன் இவ்வூரில் லூட்டி அடித்துத் திரிந்தது சரி. அப்போது அவன் அப்பாவின் குடும்பம் இங்குதான், இப்போது இங்கு யாருமில்லை. திருமணமான இவனுடைய குடித்தனம் மதுரையில், முருங்கையை விடாத வேதாளமாய்… இன்னும் என்ன?
ரங்கள் வேதாளம் தான்-
திருட்டு வேதாளம்,
மூன்று வருடங்களாய் என் ேெநகிதி ரமணியின் மானத அலைக்கழித்து ஆக்ரமித்திருக்கும் பிசாசு இவன்,
மறுநாள் ஞாயிறாயிருக்க, அம்மாவிற்குச் சமையலில் உதவி செய்துவிட்டு ரமணியின் வீட்டிற்குக் கிளம்பினேன். அம்மாவிடம் அங்கு போவதாகச் சொல்லவில்லை.
‘பெரியவங்க பேச்சுக் கேக்காத அழிஞ்சு போற அவனைப் போயி நீ ஏள் பாக்கோணும்? உனக்கு மாசியிலே கலியாண நாள்: குறிச்சாச்சு. அவ காத்தும் படாத மாதிரி கிட’ என்று வைவார்கள். அதனால்தான் அம்மாவிடம் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றேன்.
‘எனக்கு இனி கல்யாணம்? எம்மனக பூரா ரங்கந்தான் வேறொருத்தன் தாலிக்குக் கழுத்து நீட்ட முடியுமா?’ என்று ‘டயலாக்’ பேசிக் கிடந்த ரமணியை ஊரே பழித்தது.
என்னைப் பார்த்ததும் ஓடி வத்து கட்டிக் கொண்டாள்.
“நீயாவது என்னை ஞாபகம் வச்சு வந்தியே”
“மாசத்துக்கு ரெண்டு, மூணு தடவை ரங்கனும் வராருல்ல?”
“ம்..நேத்திக்கும் வந்தாரு.” தலைகுனிந்து சொன்னாள். முகத்தில் வெட்கமா, வருத்தமா என்பது தெரியமில்லை.
“பார்த்தேன், உங்கிட்டப் போதும்.”
“இந்த விஷயமா ஒண்ணுமில்லையே?”
“வேறென்ன? ரங்கனுக்குக் கல்யாணம் முடிஞ்ச பின்னும் இங்கென்ன போக்குவரத்து?“ பதிலில்லை.
“இது காதலில்லை ரமணி, வேஷம். ரெண்டு பெண்ணுங்களை ஏமாத்தி சுகம்காணுற அல்பத்தனம்.”
“எங்க பிரியமும் பாடும் உனக்குப் புரியாது, ரெண்டு வார்த்தை பேசிக்க நாங்கப் படற கஷ்டம்.” என்றாள். நான் சிரித்து விட்டேன்.
“எதுக்கித்த பாடு? இன்னொருத்தி புருஷனை ‘என்னைய வாரத் தவறாம வந்துபாரு’ன்னு பாடுபட்டுப் பல்லைக் காட்டி ஏன் கூப்பிடற? அது திருட்டுத்தனம்.”
“வேற வார்த்தை எது வேணா பேசு.”
“தரங்கெட்டுப் பேச வரலை உன் வாழ்க்கை பாழாயிடக் கூடாதேங்கற ஆதங்கந்தாண்டி ரமணி.”
“என்னால அவரை… மறக்க முடியல்…”
“‘இதை அவரு கலியாணத்துக்கு முள்ளே சொல்லியிருந்தா – சரி. எனக்கு அவருதான்னு போராடியிருந்தா பாராட்டுவேன். இது பிறத்தியார் பொருளைத் தட்டிப் பிடுங்கற கள்ளத்தனம்.”
“பிறவால் வந்த அவதான் கள்ளி…”
“வீட்டோட வளர்ந்த பொண்ணு அவ. உங்க லீலை எப்படித் தெரியும்? அவளைப் பொண்ணு பார்க்கப் போயி இனிப்பும், உறப்புமா விழுங்கிச் சம்மதம் சொன்னவரு ரங்கதுரை.”
“அவங்கப்பாரு மிரட்டினாரு, தங்கச்சி கலியாணத்துக்கு அவ நீட்டின பரிசுப் பணம் வச்சு…”
“அதுக்குப் பிச்சையெடுக்கலாம். ரெண்டு வருஷம் நீ காத்திருக்க மாட்ட? சம்பாரிச்சு தங்கை கல்யாணத்தை முடிச்சு உனக்கு முணு முடிக்கப் போடறது?”
“நீ காதலிச்சதில்லை.’ ‘- நீண்டதாய் பெருமூச்சு விட்டாள் ரமணி!
“பரவாயில்ல – மாசி கழிஞ்சு எனக்கு வர்றவரை காதலிச்சுட்டாப் போச்சு, உன்னோடது ஏமாத்து, குழப்பம்….”
“அவரு புலம்பறாரே…?”
“காது கொடுக்காத. பணங்காசு தந்து குடித்தனம் பண்ண ஒருத்தி, வந்து ஏமாத்தி இழைச்சுக்க இன்னொருத்தியா? திருட்டு மாங்காயா தித்திக்கறேடி ரமணி நீ – அவ்வளவுதான். அந்தாளு பேர், குழந்தைங்க, ஆஸ்தி எல்லாம் அவளுக்குத்தான்.”
“மனசு?” பாதி சந்தேகமாய்க் கேள்வி வந்தது.
“அது உங்கிட்ட இருந்திருந்தா, உன்னை கௌமா வாழ வச்சிருப்பான். அவகிட்ட கொடுத்திருந்தா அவளை ஏமாத்தாம இருந்திருப்பாள். தன் சந்தோஷத்தில் மட்டும் நிலைச்சுட்ட மனசு அவனுக்கு – அது யாருக்குமில்லை – புரியுதா?”- நிதானமாய்ச் சொன்னேன்.
“அப்பாருக்கும் சுவலை,”
“அவருக்கு சீக்கு வந்ததே உங் கவலையில் தான். இரண்டு வருஷமா வீட்டோட, வாசலைப் பார்த்துக் கிடந்ததை விடு. நாளைக்கு எங்க தையல் கிளாசுக்கு வாயேன்.”
”நீ டீச்சர் உத்தியோகமில்ல பாக்குற?”
”காலையில் மட்டும்தான். சாயங்காலம் தையல் டீச்சருக்கு ஒத்தாசையாயிருக்கேன். கட்டிங் இப்ப சுத்தமா வருது. ”
“ம்…”
அடுத்தநாள் ரமணி ரவிக்கைத் துணி தைக்கக் கொடுப்பவள் போல வந்து சேர்ந்தாள். தினம் தையல் படிக்க வந்தாள்.
இரண்டு வாரங்கள் கழித்து வந்த ரங்கன், வந்த சுருக்கிலேயே முகம் கறுத்துத் திரும்புவதைப் பார்த்த எனக்குத் திருப்தியாய் இருந்தது. போனமுறை அவன் ஊருக்குள் நுழைகையில் என்னுள் சீறி எழும்பிய கோபம் வீணாகவில்லை. ரமணியின் வாழ்வும் வீணாகவில்லை என்ற நிம்மதியில் புன்னகைத்தேன்.
– முல்லைச்சரம், டிசம்பர் 1994.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.