தற்கொலைத்தனம்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: January 8, 2026
பார்வையிட்டோர்: 3,394
(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இளைஞன் ஒருவனுக்கு இங்கிலாந்து செல்லும் வாய்ப்பு கிட்டியது.
சாப்பாட்டு வேளையின்போது கப்பல் பணியாளர்கள் இளைஞனை சாப்பிட அழைத்தார்கள்.
வந்துகொண்டிருந்த வகைவகையான உணவுப் பதார்த்தங்களைப் பார்த்து இளைஞன் பயந்தே போனான்.
பின்வாங்கி வந்து கப்பல் பணியாளர்களிடம் சொன்னான்:
“ஐயா, எனக்கு அந்தக் கொழுத்த ஆகாரம் ஒத்துக் கொள்ளாது” என்றான்.
மற்றவர்கள் மிகுந்த மணத்தோடு தயாரித்த முழுக் கோழியை விழுங்கிக்கொண்டிருந்தார்கள். வாலிபனோ மூன்று முறுக்கைக் கடித்து பச்சைத் தண்ணீரைக் குடித்துப் பெருமூச்சுவிட்டான். “நமக்கு இப்படிக் கொடுத்து வைக்க வில்லையே” என்று ஏங்கினான்.
இங்கிலாந்து வந்த போது பணியாளர்களில் ஒருவர் அவனைப் பார்த்துச் சொன்னார்:
“சகோதரனே, உன் கப்பல் டிக்கெட்டின் பின்பக்கம் என்ன எழுதி இருக்கிறதென்று படித்துப் பார்த்தாயா?, கப்பலில் பயணம் செய்யும் அனைத்து நாட்களுக்கும் உரிய உணவுக் கட்டணம் வாங்கப்பட்டுள்ளது. எனவே கப்பலில் சாப்பாடு இலவசம்” என்றார்.
இந்திய இளைஞன் ஆதி வயிற்றைப் பிடித்துக்கொண்டு “இதை முன்பே சொல்லி இருக்கக் கூடாதா?” என்று கூறி மனம் மிக நொந்தான்.
இயேசு கிறிஸ்து நம் இரத்தத்தினால் சம்பாதித்து இருக்கிறாரே “இரட்சிப்பு இலவசம்” என்பதை நம்மில் அநேகர் புரிந்து கொள்கிறதேயில்லை.
தங்களைத் தாங்களே கெடுத்துக்கொள்ளும் தற்கொலைப் படையினர் நாட்டில் ஏராளம் உள்ளனர்.
“இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.” – [எபிரெயர் 2:4]
– எழுச்சியூட்டும் எழுபது கதைகள், சிரிப்புக் கதைகள், முதற் பதிப்பு: ஜூலை 1989, ஜெயா பப்பிளிகேஷன்ஸ், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
