தன்வினை




அப்பாவின் சடலம் நடுக்கூடத்தில். சடங்குகள் முடிந்து மரப்படுக்கையி லிட்டார். சி(ச)தை எரிந்தது.
அன்றிரவே ஆரம்பமானது சொத்து தகராறு. இரண்டு மகன்கள். ஒரு மகள். அம்மா போய் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. மூத்தவன் வாதம் செய்தான் சொத்தை சமமாக பிரிக்கவேண்டும் என்ற சொன்ன தங்கையிடம்.
எப்போதுமே அவனுக்கு அவளை பிடிக்காது. உனக்கு விமர்சையா கல்யாணம் பண்ணி குடுத்தாச்சு. அம்மாவோட நகை கூட நிறைய நீ தான் அபேஸ் பண்ணிட்டு போய்ட்ட. இப்ப ரூல்ஸ் பேசாத. உனக்கு ஒண்ணும் கிடையாது.
தம்பி.. என்னடா? ஏன் வாய் மூடிக்கிட்டு இருக்க. உனக்கும் சேத்து தான் பேசறேன். இளையவன் வாயில்லா பூச்சி. சூதுவாது தெரியாது. ஆனால் அக்கா மேல அளவு கடந்த பாசம்.
மூத்தவன் வாதத்தை ஒத்துக்கொள்ளவில்லை வந்த உறவினரகள் யாரும். மன உளைச்சலில் தூங்கினான். அனவரும் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறாகள் என்று நினைத்து, தம்பியை எழுப்பினான்.
அடுத்த அறைக்கு அழைத்து வந்து மெதுவாக திட்டத்தை ஓதினான். அண்ணா வேண்டாம் please. பைத்தியக்காரா ரெண்டு பங்கா போடவேண்டியத மூணு பங்கா போட்டுக்க ஆசபடறியா.
அதுக்காக இது சரியில்லண்ணா பேசி பாக்கலாம். நீ வாய மூடிட்டு இரு. நீ தான் செய்யணும். ஏன்னா உன்மேல தான் பாசம் தாஸ்தி அவளுக்கு. ஓகேவா. என்னமோ பண்ணு என்றான். திரும்பி வந்து படுத்தனர். தம்பிக்கு தூக்கமே வரவில்லை.
மறுநாள் காலை. பால் ஊற்ற கிளம்பினர் உறவினர்கள் சுடுகாட்டுக்கு. சாப்பாடு முடிந்து உறவினர்கள் எல்லாரும் கிளம்பினார்கள். மூத்தவனுக்கு அறிவுறையும் கூறினர் சிலர்.
எங்க குடும்ப பிரச்சனைய நாங்க பாத்துக்கறோம் நீங்க கிளம்புங்க. என் தங்கச்சிக்கு என்ன செய்யணும்னு தெரியும். தம்பி சோகமாக அக்காவையே பார்த்து அழுது கொண்டே இருந்தான்.
அக்கா மெதுவாக தம்பியிடம் வந்து அழாத, அப்பா போய்ட்டா என்ன, நானும் அண்ணாவும் இருக்கோம். கண்ண தொடச்சிக்கோ என்றாள் எதற்காக அழுகிறான் என்று புரியாமல்.
வழக்கத்துக்கு மாறாக அண்ணனும் பிரியமாக நடந்து கொண்டான் தங்கையிடம். தங்கச்சி கவல படாத உனக்கு என்ன கிடைக்கணும்னு முடிவு பண்ணிட்டோம் நானும் தம்பியும். இவளும் நம்பினாள்.
அப்பாவுக்கு பிடித்த பால் பாயசம் பண்ணு சாயங்காலம் படையலுக்கு. சரிங்க அண்ணா என்று ஆசை ஆசையா பால் பாயசம் செய்தாள். இரவு அனைவரும் தூங்குவற்க்கு முன்பு ஏற்கனவே பேசி வைத்த படி தம்பி அனைவருக்கும் பால் பாயசம் கொண்டு வந்து கொடுத்தான். மூத்தவன் தம்பியிடம் சிக்னல் செய்ய, தம்பியும் தம்ஸ்அப் காட்டினான்.
மறுநாள் காலை வெகுநேரமாகியும் மூத்தவன் எழுந்திருக்கவில்லை. தம்பி எழுந்திரு சீக்கிரம் ..அண்ணா கண்ணே முழிக்கல என்னன்னு வந்து பாரு. சாரிக்கா. இனிமேல் அண்ணா கண்ணே முழிக்கமாட்டாருக்கா.
உனக்கு நேத்து நைட் என்ன நடந்துதுன்னு தெரியுமா. தெரியும் தம்பி, நான் தூங்கிட்டேன்னு நெனச்சி நீங்க பேசிகிட்ட திட்டத்த கேட்டுட்டுதான் இருந்தேன். ஆனா உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும். எனக்கு எதிரா நீ அந்த மாதிரி பண்ணமாட்டேன்னு. But இப்படி பண்ணுவேன்னு எதிர் பாக்கல.
சொத்துக்காக உன்ன சாகடிக்கணும்னு நெனச்சவரு நாளைக்கு என்னையும் க்ளோஸ் பண்ண எவ்ளோ நேரம் ஆகும்கா. அதான்… விடுக்கா. இப்பகூட அண்ணோவோட ஆசை தான் நிறைவேறிருக்கு.
என்னடா சொல்ற. சொத்தை ரெண்டா பிரிக்கணும்னு தான சொன்னாரு. அத சொல்றேன்.
சாது மிரண்டால் காடு கொள்ளாது..