ஞாபக கிடங்கு
கதையாசிரியர்: பே.செல்வ கணேஷ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: May 22, 2026
பார்வையிட்டோர்: 2,444

நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன்!
பளீரென்று என் முகத்தில் வெளிச்சம் அடித்தது!கண்களையே திறக்க முடியவில்லை!
கஷ்டப்பட்டு திறந்ததும் அந்த வெளிச்சமானது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது!
முழுவதும் குறைந்ததும் தான் அது கிடங்கு என்று புரிந்தது.
நடுவீட்டில் கிடங்கா? என்னடா இது? கிடங்கு போல்தான் இருந்தது!
அருகில் பயத்துடன் சென்றேன், நான் மிக அருகினில் சென்றதும்,அதிலிருந்து திடீரென்று தோன்றிய ஒளியானது என்னை உள்ளே இழுத்துச் சென்றது.
மிக ஆழமான கிடங்கு அது! ஒரு நிமிடமாக கீழே நோக்கி விழுந்துக் கொண்டிருந்தேன், தரையை நோக்கி போய்க் கொண்டிருந்தேன்!
அவ்வளவுதான் தலை சிதறியது!
நினைத்துக் கொண்டிருக்கையில் ஏதோ ஒன்று என்னை பற்றி இழுத்துச் சென்றது!
என்னவென்று தெரியவில்லை!
அந்த கிடங்கினுள்ளேயே நான் அந்தரத்தில் பறந்துக்கொண்டிருந்தேன்!
அப்போது எதிரில் தோன்றிய ஒளியில் எனது நினைவுகளைக் கண்டதும் உறைந்திருந்தேன்!
எனது ஏழு வயதில் பெற்ற தாயின் மீது கொள்ளி வைத்தது!
தாயை இழந்த எனக்கு அப்பாதான் எல்லாம் என்று நினைத்த எனது ஆசையை சுக்கு நூறூக உடைத்து,அம்மாவிடத்தில் வேறு ஒரு பெண்ணை கூட்டி வந்தார்.
வழக்கமான சித்தி கொடுமைகள்!
அன்பும்,அரவணைப்புமில்லாமல் தனித்து விடப்பட்ட எனக்கு தனது அன்பை பகிர்ந்தார் தமிழ் டீச்சர்!
அவரது அரவணைப்பில் நான் நிம்மதியடைவதோடு,மகிழ்ச்சியாகவும் இருந்தேன்!
அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை அந்த விஷயம் தெரிகிற வரையில்!
எனது தாய் மாரடைப்பால் உயிரிழந்ததாக நினைத்துக்கொண்டிருந்தேன்,ஆனால் எனது பதினைந்தாவது வயதில் தான் தெரிந்தது அது திட்டமிடப்பட்ட கொலை என்று!அதுவும் எனது தந்தையால் அது தீட்டப்பட்டது என்று தெரிந்ததும் கொதித்துப் போனேன்!
கொலை செய்யும் அளவிற்கு வெறி வந்தது!
அந்த வெறியை தனது அன்பால் தணிக்கச் செய்து,”அது உனது பாதையில்லை!இதுவே உனக்கான பாதை” என்று ஒரு புதிய பாதையைக் காட்டினார் எனது தமிழ் ஆசிரியை.
தனது சொந்த செலவில் படிக்க வைத்தார்!
அவர் என்னிடம் காட்டிய அன்பையும்,ஆதரவையும் எனது நண்பன் மிதுனிடமும், தோழி வைஷ்ணவியிடமும் கண்டேன்.
அவர்கள் என்னுடன் பள்ளியில் தொடங்கி கல்லூரி வரையிலுமே பயணித்தார்கள்!
கல்லூரி முடித்ததும் ஒரு நிறுவனத்தில் எனக்கு வேலையும் கிடைத்தது!
அங்குதான் நான் உத்ராவை கண்டேன்!எங்களிருவருக்குள்ளும் காதல் வந்தது!
முதல் மாத சம்பளம் வாங்குவதற்கு இரு நாட்களுக்கு முன் கணவனை இழந்த எனது தமிழ் ஆசிரியை அவரது ஆறு வயது மகளை தனியே விட்டுவிட்டு தெய்வத்திடம் சென்றடைந்தார்!
இனி அந்த ஆறு வயது சிறுமியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கிருந்தது!
ஆனால் அந்த பொறுப்பினாலேயே எனது காதலும் ஒருக்கட்டத்தில் முடிவடைந்தது!
அதுவும் எனது இருபத்தொன்பதாவது வயதில்!
இப்போது எனக்கு ஐம்பத்தைந்து வயது!
இப்போதும் அவளுடைய நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறேன்!
ஆறு வயதில் நான் எடுத்து வளர்த்தவள் இருபத்திரெண்டாவது வயதில் தனது காதலனை மணமுடித்துக் கொண்டு இவ்வீட்டிலிருந்து கிளம்பினாள்!
இவ்வளவையும் கண்முன் காட்டிவிட்டு அந்த ஒளி மறைந்துப்போனது!
திடுக்கென்று தூக்கத்திலிருந்து விழித்தேன்!
அதே கட்டிலில் படுத்திருந்தேன்!
எதிரில் பார்த்தேன், எந்த கிடங்கும் இல்லை!
அது கனவு என்று தெரிந்துக்கொள்ள சிறிது நேரம் பிடித்தது!
ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது, அந்த கிடங்கு மட்டுமே கனவு!
அதில் உள்ள நினைவுகள் அனைத்தும் நிஜம் என்று!
தொடர்புள்ள சிறுகதைகள்
எதிர் காணல்
பொ.நாகேந்திரன்
August 22, 2026
வெம்மை நிமிடங்கள்
விமலன்
August 22, 2026
நலம் தரும் நட்பு
அல்போன்ஸ் மோசஸ்
August 19, 2026