ஞானோதயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 28, 2025
பார்வையிட்டோர்: 2,258 
 
 

வெள்ளரசு மரத்தின் கீழே புத்தபிரானுக்கு ஞானம் வந்ததாக, கேள்வி ஞானமாகவே மல்லி அறிந்திருந்தாள். அவளின் உண்மை பெயர் சர்மிளா. அது இந்தக் காலத்து நவீன உலகின் ஒரு மங்கிய உயிர்வார்ப்பு பெயருக்கு ஏற்ற வாழ்வதென்றால் முந்திய தலைமுறையிலே அது ஒரு தெய்வீக அடையாளம். இப்போது, தெய்வம் இருக்கிறதென்று, கேட்டால் வெறும் கேள்வி தான் மிஞ்சும் நவீன நாகரீக உலகத்தில் மாயையின் விளிம்பு நிலையிலேயே அனைவரும் வாழ்ந்து கொண்டிருப்பதாக, நினைக்கும் போது மனம் வலிக்கிறது.

மல்லி அது தான் சர்மிளா ஒரு விளையாட்டுப் பிள்ளை மாதிரி, கண்களில் கனவு மிதக்கிறமிகச் சாதாரணமான பெண். அவளுக்கு நேரே மூத்தவளாக இருக்கிற சுந்தரி இதற்கு எதிர் மறை. அதர்மத்தைக் கண்டாலே, சினம் சீறிக் கொண்டு வரும்.

அப்பொழுதான் அவள் எஸ் எஸ்ஸி படித்து முடித்திருந்தாள். ஓரளவு தேறியிருந்தாலும், மேலே படிக்க மனமின்றி பொழுது போக சதா ரேடியோவும் கையமகத் தான் அவளைத் தரிசனம் காணலாம். இலங்கை வர்த்தக சேவை என்றால் உயிர் மாதிரி. அதில் பழைய பாடலெல்லாம் வரும், அதைக் கேட்கும் நேரங்களில் அவளுக்கு இந்த உலகமே மறந்து விடும்.

சின்னக்கா சரசுவின் கணவர் கோபால் வீட்டில் ஒரு சாமத்திய சடங்கு எனச் சொல்லி அவளும் ஒரு சமயம் போக நேர்ந்தது. அங்கே பெரும் கூட்டம். அவர்களின் பக்கத்து வீட்டின் உறவுக்காரியான சுதாவின் அம்மாவின் ஒன்ற விட்ட அண்ணாவான சோமு அங்கு தான் இருந்தார். அவருக்கு பத்து பிள்ளைகள். ஏதோ தேனீர்கடை வைத்து பிழைத்துக் கொண்டிருந்தவர், அதுவும் நஷ்டத்தில் போய் விடவே .குடும்பபாரம், கருதி யாசகம் பெற, அவ்வப்பொது அம்மாவிடம் வந்து போவதை சுகிர்தம் என்கிற சுகி உடன் இருந்து பார்த்திருக்கிறாள். இது ஒரு வெற்றுச் சங்கதி. அம்மா தாராள மனதுடன் எவ்வளவு தான் அள்ளிக் கொடுத்தாலும் அந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் பெயர் எடுபடாமல் எவர் கண்ணிலும் படாமல், கரும் புள்ளி நிழலாய் அவள் மறைந்து போனது ஒரு தனிக் கதை.

அந்த பூப்புனித நீராட்டு விழாவுக்கு, மல்லியும் சுந்தரியுடன் கூடவே போயிருந்தாள். சோமு மாமாவின் இரண்டாவது மகள் திலகா மண முடித்தது கோண்டாவிலில் என்பதால், அங்கிருந்து நிறைய சனம் வந்தது. திலகாவின் புருஷன் தியாகுவின் தங்கை மகள் என ஒருத்தி பாவாடை சட்டை இந்தியன் கவுசாரி அணிந்து அமர்க்களமாக வலம் வந்த போது சுந்தரியின் அபிரிதமான பேரழகு கண்ணில் இடறவே, அடுத்த கணமே அவள் முடிவு செய்து விடாள், வீரகேசரி பத்திரிகையில் முக்கிய பணியில் இருக்கும் என் அண்ணன் பாஸ்கருக்கு இந்த ரதி தான். பாஸ்கருக்கு இதைக் கேட்ட நாளிலிருந்து புல்லரிப்புத் தான்.

தான் ஓர் அழகு தேவதையை மண்முடிபதென்றால் சும்மாவா? வானத்தில் தேரோடுகிற கதை தான் பூமியே நழுவிப் போக, இந்கக் கால்கள் அங்கு தான் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கும் அதுவும் தேரேறி. ஓர் உலக அழகியே வீட்டிற்கு வரப் போகிறாள். அவன் பூச்செண்டு ஏந்திக் காத்திருக்கும் போது தான் அந்த விபரீதம் நடந்தது.

செக்கச் செவேலென்று ஆகானுபாகுவான ஒருவர், தான் அந்த செய்தியைக் கொண்டு வந்தார். அவருக்கு வடிவேலு என்று பெயர் அவனுக்கு மாமா முறை கொழும்பில் தான் இந்தக் கதை நடந்தது. அப்போது அவனைப் பார்த்து அவர் சொன்னார்.

யாழிலை பஸ்ஸிலை வரேக்கை சுமியின் அம்மாவைப் பார்த்தனான்.

ஊரிலை ஒரு கதை நடக்குது உனக்குக் கல்யாண்மென்று உன்ரை தங்கச்சி உனக்குப் பார்த்து வைச்சிருக்கிற பொம்பிளை ஆக்களோடை அந்தக் காலத்திலையிருந்தே நாங்கள் செருறேலை. அந்தப் பொம்பிளை உனக்கு சரிவராதடா.

அதைக் கேட்டு அவனுக்கு இடி விழுந்த மாதிரி, துண்டு துண்டாய் அவன் சிதறிப் போனான். என்னதான் பெரிய அழகு ராணியாய் இருக்கட்டும். எனக்கு இது வேண்டாமென்று தோன்றியது. உடனேயே தங்கச்சி மாலாவாய் போனிலேயே அழைத்து தன் முடிவை சொல்லி விட்டான்.

இனி மாலாவின் கதை கந்தல் தான் சுந்தரியைப் பார்த்து உருகி உருகி கதை சொல்லி விட்டேனே. இனி அவள் முகத்தில் விழிக்க இயலுமே ? சுமியின் அம்மா அக்கரையில் அவள் தலையிலை இடி விழட்டும் நாசமாய் போவாள்.

போனை எடுத்து சுந்தரியிடம் விஷத்தையே கக்கினாள். ஊரில் அது பெருந்தீயாய் பரவி சுமியின் வீட்டையே கொளூத்து விட்டது. ஓர் அதர்மம் நடந்தததற்காக, பொறுக்க முடியாமல், காளி அவதரமே எடுத்து விட்டாள் சுந்தரி.

ஒரு நாள் மிகச் சாதுவாக, ஒன்றுமே அறியாத அப்பாவியாய் வயலினூடாக முருகன் கோவிலுக்குப் போய் முகம் குளிர்ந்த ஒரு தேவதையாக , திரும்பி வரும் போது வீட்டு வாசலுக்கு முன்னால், ஒரு நெருப்பு எரிமலையையே அவள் எதிர் கொள்ள நேர்ந்தது. அப்படி வந்து அவளை வழி மறித்தது வேறுயாருமில்லை. உலக அழகிக்குச் சமமான, சுந்தரிதான் அவ்வாறு நின்றிருந்தாள்.

அவள் குரலில் கோபம் கொந்தளிக்க குரலை உயர்த்திக் கேட்டாள்.

ஏய் கிழவி இது தான் உனக்கு வேலையா? கோள் மூட்டுற வேலை உன்னாலை என்ரை கல்யாணம் நின்று விட்டது, உனக்கு பெரிய சந்தோஷம் தானே? வடிவேலு என்ற அந்தப் பெரிய மனிஷனை ஊரிலை கண்டு விட்டு நீ சொன்னியாமே? எனக்கும் பாஸ்ககுக்ம் கல்யாணம் சரிவந்திட்டுதென்று. ஏனென்றால், உனக்கு வயித்தெரிச்சல், உன்ரை சுமி இருக்கேக்கை நான் செய்யப் போறனெண்டு பொல்லாத வயித்தெரிச்சல் உனக்கு. அப்படித் தானே?. அதைக் கேட்டு விட்டு வடிவேலு என்ன சொன்னான் தெரியுமே? பாஸ்கரிடம் தாங்கள் எங்களோடு சேருறதில்லையாம். அதோடு என்ரை கல்யாணமே நின்று போச்சு. கல்யாணத்தை குழப்பி விட்ட பாவம் உன்னைச் சும்மா விடாது. துரத்தி துரத்தி அடிக்கும். நான் அதைப் பார்க்கத் தான் போறன்.

நீதி தேவியே நேரில் வந்து பிரசன்னமாகி கர்ச்சிப்ப்பது போல் அப்போது அம்மாவின் கண்களுக்கு சுந்தரி தோன்றினாள். அம்மா அதைக் கேட்டு ஆடிப் போனாள். வாழ்க்கையில் தன் முன்னால் பல பல விடங்களில், தர்மம் அடி சறுக்கி, அன்பு விட்டுப் போய் வெறுமை சூழ்ந்த போதெல்லாம் அப்படி நடந்தவர்கள் முன், ஒரு வார்த்தை கூடத் தட்டிக் கேட்காமல், அதர்மமே அங்கு கோலோச்ச நான் அங்கு மெளன தேவதையாய் தெய்வீகப் பிறவியாய் வாழ்ந்து காட்டியதெல்லாம் கனவாகி விட்டது போலவே இந்த நிகழ்ச்சி.

நான் இப்படி வருமென்று தெரியாமல் உண்மையை சொன்னதற்காகவா இன்று எனக்கு இந்தத் தண்டனை? இப்ப சுந்தரி என்னை வெட்டி சாய்க்காத குறை தான் நான் இப்படி இவள் போல் எல்லோருமே அதர்மத்தை எதிர்த்து வெட்டி சாய்க்கப் புறப்பட்டால், எனனாவாகும்? ஒரே ரத்தக் களரி. தான் சண்டை தான். ஒரு சின்ன விடயத்துக்கே உண்மை அறியாமல் வரிந்து கட்டிக் கொண்டு போர் செய்து விட்டுப் போகிற சுந்தரியை நினைச்சால் பாவமாகத் தான் இருக்கு. ஆனால் நான்….?

கோவில் தொண்டும் வழிபாடுமாக வாழ்ந்து காட்டுகிற, என்னை சேற்றில் தள்ளி விட இது போதும். இப்போது சுந்தரி எறிந்து விட்டுப்ப் போகிற கல்லெறி எனக்கு மட்டுமல்ல. ஒரு சமூகத்தையே வெட்டிச் சாய்த்த மாதிரி அவள் கொண்டு வந்த கோலம் எடுத்து நின்ற, காளி அவதாரம் எல்லாம் இதனால் வருகிற படிப்பினை கூட எனக்கல்ல. ஒரு சமூகமே தலை நிமிரத் தான் இந்த சவுக்கடியும் நீதி மொழி வார்த்தைகளும்.

எனக்கென்ன வந்தது? ஞானம் பெற்ற புத்தரைப் போல நான், புதர்மண்டிக் கிடக்கிற காடாய் எல்லாம் வெறிச்சோடிப் போன பின் இது கூட அப்படித் தான் என்று அவள் சமாதானம் கொள்ளும் வேளையில் கிழக்கு வெளூத்ததைத் தான் கண் குளிரத் தரிசிக்க முடிந்தது.

இருள் மூடிய அந்த மேகம், காணாமலே போயிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *