செல்வனும் புலவனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 11 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு வீட்டிலே திருமணம் நடைபெற்றது. அழைப்புப் பெற்றிருந்தவர்கள் யாவரும் அத் திருமணத்திற்குச் சென்றனர். வீட்டிற்குரியவன் எல்லாரையும் வரவேற்றுப் போற்றிக் கொண்டிருந் தான். 

நன்கு கல்வி கற்றுத்தேறிய புலவர் ஒருவர் தாமும் அழைப்புப் பெற்றிருந்தபடியால் திருமணத்திற்குச் சென்றார். இவரை யாரும் ‘வருக’ என்று கூடச் சொல்லவில்லை. பேசாமல் ஒரு மூலையிற் போய் உட்கார்ந்தார். சிறிதுநேரம் சென்றது. செல்வன் ஒருவன் வந்தான். அவனைக் கண்டதும் வீட்டுக்குரியவன் விழுந்தடித்து ஓடினான். “வாருங்கள் வாருங்கள், தங்களுடைய வருகையைத்தான் எல்லாரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம்” என்று கூறி வரவேற்ற துடன் சந்தனம் பன்னீர் முதலியவற்றைப் பூசி வெற்றிலை பாக்குக் கொடுத்துப் பலவாறு போற் றினான். மற்றும் பலவாறு இது வேண்டுமா அது வேண்டுமா என்று கேட்டுக்கொண்டும், கேட்ட வற்றைக் கொடுத்துக்கொண்டும் இருந்தான். 

இதனைப் பார்த்த புலவர், “கல்வியுடைமை பொருள் உடைமை என்று இரண்டு செல்வமும் செல்வம் எனப்படும்,” என்று பெரியோர்கள் கூறி யிருக்கிறார்கள். அவ்வாறாகவும், நம்மைத் திரும்பிப் பார்க்க ஒருவரையுங் காணோமே என்று எண்ணமிட்டுக் கொண்டு மேலுஞ் சிறிதுநேரம் இருந்துவிட்டு அவ் விடத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். உலகத்தாரும் உற்றார் உறவினரும் மற்றவர்களும் பொருளுடையவ னைத்தான் போற்றுவார்களேயன்றிப் பொருள் அற்ற வறியவனை யாருந் திரும்பிப் பார்க்கமாட்டார்கள். 

”கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின் 
எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் – இல்லானை
இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல். 

(உரை ) கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று  உண்டாயின் ஒருவன் நூல்களைப் படியாதவனே யானாலும் அவன் கையில் பொருள் மட்டும் இருக்குமாயின், எல்லாரும் சென்று எதிர் கொள்வர் – அவனை யாவரும் போய் எதிர்கொண்டு போற்றுவார்கள், இல்லானை இல்லாளும் வேண்டாள் (பொருளற்றவன் படித்தவனாக இருந்தாலும்) அவனை அவனுடைய மனைவியும் விரும்பமாட்டாள், ஈன்று எடுத்த தாய் வேண்டாள் – அவனைப் பெற்று வளர்த்த தாயும் விரும்ப மாட்டாள், அவன்வாயில் சொல் செல்லாது – அவன் வாயிற் பிறக்குஞ் சொல்லானது பயன்படமாட்டாது. 

(கருத்து.) அறிவற்றவனாக இருந்தாலும் டையவனைத்தான் இவ் வுலகத்தினர் போற்றுவர். 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *