சுருட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 10, 2012
பார்வையிட்டோர்: 7,739 
 
 

சுருட்டுச் சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க, நீண்டவரிசை யில் ஆர்வலர்கள் காத்திருந்தார்கள். முத்துராமனுக்கு தான் வந்திருந்த நோக்கம் குறித்து சிறிது வெட்கமாகஇருந்தது.

சி.பி.சி.ஐ.டி-யில் அவர் இன்ஸ்பெக்டர். திறமையானவர். 6 வருடங்களுக்கு முன் சேலத்தில் நடந்த ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகள் மூவர் என கண்டுபிடிக்கப்பட்டும் அகப்படாமல் போக, கொலையுண்டவரின் மனைவி கோர்ட்டுக்குப் போனாள். சி.பி.சி.ஐ.டி. விசாரணை. அவர் தனிஅதிகாரி, அவருக்குக் கீழே சிலர். கேஸில் ஏதும் புரிபடவில்லை. எந்தப் பக்கம் விசாரிக்கலாம் என்று அவர் திணறிக்கொண்டு இருந்தபோது, அவர் மனைவி அந்த ரகசியத்தைச் சொன்னாள்.

“நம்ம ஊருக்கு சுருட்டு சாமியார்னு ஒருத்தர் வந்திருக்கார். ஒரு கட்டு சுருட்டு வாங்கிட்டுப் போய் பார்த்தா நம்ம பிரச்னைக்குத் தீர்வு சொல்றாராம்.’’

குழப்பத்தில் இருந்த முத்துராமன் வேறு வழியின்றி சுருட்டு சாமியாரைப் பார்க்கப் போனார். முத்துராமன் வாங்கிச் சென்ற சுருட்டை முகர்ந்துபார்த்துக்-கொண்டே, முத்து-ராமன் கூறியதை பொறுமை-யாகக் கேட்ட சாமியார், நிதானமாகப் பேசினார்.

“நீ தேடும் ஆளு கிடாரங்கொண்டான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளிய டீக் கடை வெச்சிருக்கான். போய் புடிச்-சிக்கோ.’’
இரவோடு இரவாக ஜீப்பில் கிளம்பி, கிடாரங்கொண்டான் வந்து குறிப்பிட்ட அந்த டீக் கடையில் இருந்த-வனைப் பார்த்துத் திடுக்கிட்டார். பையில் இருந்த புகைப் படத்தை எடுத்து உற்றுப்பார்த்து… அதே அவனே!

லபக் என்று அவனை இழுத்துச் சென்று ஜீப்பில் ஏற்றினார்.

ஒருவன் ஓ.கே., சம்பந்தப்பட்ட இன்னும் இரண்டு பேர் எங்கே?

அந்த இரண்டு பேரைத் தேடித்தான் மறுபடியும் இப்போது சுருட்டு சாமியார் முன் நின்றார் முத்துராமன்.

சாமியார் எதிரே முத்துராமன் தவிப்புடன் காத்திருக்க… சுருட்டை முகர்ந்து பார்த்த சாமியார் கண் மூடி யோசித்து, “கீவளூர்ல அயர்ன் பண்ற இடங்கள்ல போய் பாரு… ஒருத்தன் கிடைப்பான்’’ என்றார்.

கீவளூரில் சலவைக் கடை ஒன்றில் துணி தேய்த்துக்கொண்டு இருந்த-வனைக் கொத்தாக அள்ளி வந்தார்.

மீண்டும் சுருட்டுச் சாமியார் முன் முத்து ராமன்.

“நீ தேடுற மூணாவது ஆள் அநேகமாக இறந்திருக்கலாம்.’’

“இல்லை… உயிரோடுத்தான் இருக் கான்.’’

“எங்கே?’’

“இங்கேதான்’’ என்றபடி சாமியாரின் தாடியைக் கொத்தாகப் பிடித்தார். .

“எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க?’’ சக அதிகாரிகள் கேட்டனர்.

“ரெண்டு பேரையும் விசாரிச்சதுல மூணாவது ஆள் ராஜபட்சிங்கற சுருட்டுதான் விரும்பிக் குடிப்பான்னு சொ-ன்னாங்க… எனக்குச் சுரீர்னுச்சு. சாமி-யாரைப் பார்க்கப் போன ரெண்டு தடவையும் வேற வேற சுருட்டை வாங்கிட்டுப் போயிருந்தேன். இந்தத் தடவை ராஜ-பட்சி சுருட்டை வாங்கிட்டுப் போனேன். சுருட்டை மோந்து பார்த்துட்டுத் தூக்கிப் போட்டவன், இந்தத் தடவை ஆசையா பத்தவெச்சான். அது போதாதா? அங்கேயே வெச்சு ரெண்டு போடு போட்-டேன். எல்லாத்தையும் ஒப்புக்கிட்டான்’’ என்றார்.

– 05th நவம்பர் 2008

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *