சுமைத் தாங்கி
துரையும்,மணியும் ஒன்றாக தனியார் பேரூந்தில் வேலைபார்க்கும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர், நண்பர்கள் இருவரும் ஒரே பகுதியில் வசித்தும் வருகின்றனர். இதில் மணி துரையை விட 5 வயது மூத்தவர், இருவரும் ஒன்றாக தினமும் வேலைக்குச் சென்று திரும்புவர், இவர்களுக்குள் நேற்று வரை ஒரு பிரச்சனையும் இல்லை, துரைக்கு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் ஒரே மகள், மணிக்கு ஒரே மகன், இன்ஜி. முடித்து ஒரு வருடமாக வேலை பார்த்து வருகிறான்.
பேரூந்து நிலையம்.
மணி, ரிவர்ஸ் பாரு!
நேரமாயிட்டு,போகலாமா?
இரு,அவசரப்படாதே!
டிக்கெட் வருது,துரை,
போலாம்,ரைட், வண்டி புறப்பட்டது, இறுதி பயணம் என அறியாமல்.
அடுத்த பேரூந்து நிலையத்தில் வண்டி நிற்க,
என்ன துரை காலை முதலே பார்க்கிறேன், சோகமா இருக்கே! மணி கேட்டான்.
தீபாவளி வருது ,கையிலே காசு இல்லேன்னு கேவலமா பேசிட்டாடா! என்றார் துரை.
இதெல்லாம் சகஜம்யா, இதுக்கு போய் இப்படி மனசு உடையலாமா? இதோ, போனஸ் வந்தா நிலை மாறிடப் போகுது, எல்லா செலவுகளையும் பார்த்துக்கலாம், இப்ப கவலைப் படாம, சாப்பிடலாம்,வா, எனக் கூப்பிட்டான் மணி, இல்லப்பா, நான் கொண்டு வரலை, நீ போய் சாப்பிடு,
வா,வா, இரண்டு பேருக்கும் தான் என்கிட்ட இருக்கு, என உரிமையாய் அழைத்தான். இருவரும் சாப்பிட,அமர்ந்தனர்,
நாம என்ன நிரந்தர வேலைலயா இருக்கோம், எல்லா வசதிகளும் இருக்க, நாம வேலைக்கு போய் திரும்ப வீடு பேறதே நிச்சயமில்லை, அதை பற்றி அவளுக்கு கவலை இல்லை, பணம், பணம், மகளின் கல்யாணம்,சொந்த வீடு, இதுதான் அவளின் வாழ்க்கை.எனப் புலம்பி தீர்த்தான்,துரை.
மணி் துரையின் மனைவி பற்றி நன்கு அறிந்தவன், படிப்பு இல்லாததால் கொஞ்சம் வெளி உலகம் தெரியதவள், என அறிவான். ஆனாலும் அவர்கள் வீட்டு சொந்த விஷயங்களில் தலையிடமாட்டான்,
பொதுவாக ,மனைவிகள்னா அப்படித்தான் இருப்பாங்க,எல்லார் வீட்லேயும் இப்படித்தான் இருக்கும். விடு,எல்லாம் சரி ஆகிடும் என தெம்பூட்டி வண்டியை எடுக்கச் செய்தான்.
ஏன்டா மணி், நீயும், என் மனைவியும் ஒரே நாள்லதான் பிறந்தீங்க, ஒரே நட்சத்திரம்,ராசி, ஆனா நீ எப்படி இருக்கே, அவ எப்படி இருக்கா? என அங்கலாய்த்தான்,
துரை, இப்ப கவலை எல்லாம் விடு, நம்மள நம்பி பேரூந்துல 60 உயிர் இருக்கு, அவங்க பத்திரமா ஊர் போய் சேரனும், அதுதான் நமது இன்றைய பணி,எனக்கூறி ,டிக்கெட் போட உள்ளே சென்றான்.
ஒரு திருப்பத்தில் , இரு சக்கர வாகனம்,கணவன்,மனைவி, முன்னே ஒரு குழந்தையுடன் எதிரே வர ,அவர்களை காப்பாற்ற இவன் பேரூந்தை இடது புறம் நன்கு ஒடித்து திருப்ப,அது கவிழும் படி போக, வண்டியை கஷ்டப்பட்டு நிலை நிறுத்திவிட்டான், அனைவரும் இறங்கி இரு சக்ர வாகன ஓட்டியை திட்ட ஆரம்பித்தனர், மணியோ, துரையைத் திட்ட ஆரம்பித்தான்,
என்னய்யா, எவ்வளவோ சொன்னேனே, கேட்டியா, நினைப்பெல்லாம் வீட்ல வச்சுக்கிட்டு, எனத் திட்டியபடியே பார்த்தான், துரையோ நெஞ்சை பிடித்துக் கொண்டப் படி இருக்கையில் இருந்த துரை உடம்பு வியர்த்து இருந்தான்,
என்னை திட்டாதே மணி, அவங்க தப்புதான்டா, நான் கவனமாக ஓட்டியதால் தான் அவங்க உட்பட உங்கள் எல்லா உயிரையும் காப்பாத்திட்டேன், இல்லைனா வண்டியே கவிழ்ந்திருக்கும், எனக் கூறியவாறே இவன் மடியில் விழுந்தான், அனைவரும் சகஜ நிலைக்கு திரும்பினர், துரையைத் தவிர,
மணி..மணி.. முடியலைடா,நெஞ்சுல ஸ்டைரிங் அடிச்சிடுச்சுய்யா, வீட்ல,என் பொன்னு, எனக் கூற முயன்று, கண்கள் மூடினான். இவன் மடியிலேயே விழுந்து விட்டான்.
ஆறுமாத காலம் ஓடியது,
ஆயுள் காப்பீ்டு இழப்பீட்டுத் தொகை,மற்றும் பல உயிர் காத்தமைக்கான அரசாங்க விருதுகள்,அதற்கான தொகை அனைத்தையும் அலைந்து பெற்றுக்கொடுத்தான்,மணி. அதுவரை துரையின் மனைவியும், மகளும், சகஜ நிலைமைக்கு திரும்ப உதவினான்.
தன் மனைவியிடம் தனது யோசனையாகத் தெரிவித்தான், ஏம்மா, பேசாமா,நம்ம மகன் சூரியவுக்கு துரையின் மகளைக் கேட்க்கலாம்னு நான் நினைக்கிறேன், நீ என்ன நினைக்கிறே? என தன் மனைவியிடம் கேட்டான்,
ஆமங்க, நானே உங்கக் கிட்டே அதைப்பற்றி சொல்லலாம்னு இருந்தேன்,அது மட்டும் இல்லைங்க அவங்க அம்மாவையும் இங்கேயே தங்கச் சொல்லிடுங்க,எனக் கூறினாள்.
இவன் அதிர்ரச்சியடைந்தான், என்ன சொல்ற நீ, ஊர்ல எல்லொரும் பேசறது போறாதுன்னு, நீ வேற என் மேலே சந்தேகப்படறியா? எனக் கேட்க,
இல்லைங்க! உண்மயைத்தான் சொல்றேன், ஊரை விடுங்க! அவங்களுக்கும் அவளின் மகளை விட்டா துணைக்கு யாரு இருக்கா? அவங்களுக்கும் அப்பா,அம்மா யாரும் இல்லை, அதனால்தான் சொல்றேன்ங்க, அவங்களையும் நம்ம கூடவே வைத்து பார்த்துக்கனும்னு தோனுது. அவங்க சம்மதிச்சா! என பெருந்தன்மை காட்டினாள்.
நாம் முதலில் நாளைச் சென்று பெண் கேட்போம் ,எனக் கூறினான்.
நீங்கள் செய்த பலன் எதிர்பாரா உதவிகளுக்கு நான் நிறைய நன்றி கடன் பட்டுள்ளேன், அதுவம் என் பெண்ணை நம்ம சூரியா தம்பிக்கு கொடுக்க எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை, நான் அங்கு வந்து தங்கிக்கொள்ள சொல்றது உங்க பெருந்தன்மையை காட்டுது, ஆனா,என இழுத்தாள், அது நல்லாயிருக்காது, நான் தனியா இங்கேயே இருக்கேன், என்றாள். சம்பந்தி வீட்ல போய் தங்கறது அவ்வளவா நல்லாவா இருக்கும்?
ஆமாம்,சம்பந்தி வீட்ல தங்கக் கூடாதுதான், ஆனா,சகோதரன் வீட்ல தாராளமாக தங்கலாம்,என்ற மணி, ஒரே வயிற்றில் பிறக்கா விட்டாலும், ஒரே நாளில் நாம் பிறந்ததால், நீங்கள் எனக்கு சகோதரிதான் எனச் சொல்லி நீங்கள் அவசியம் வந்து எங்கள் கூட மீதமுள்ள உங்கள் வாழ்க்கையை எங்கள் குடும்பத்தோடு இனைந்து வாழ வேண்டும்,என அன்போடு அழைத்தான். ஒரே நாளில் பிறந்த நாம், பல உயிர் காத்து அவர்களின் குடும்பச் சுமையை பாதுகாத்த அந்த ஓட்டுனர் துரையின் குடும்பச் சுமையைத் தாங்க இவர்கள் தயாரனார்கள்.
Mr. Ayyasamy,friendship knows no bounds.Wife should understand husbands problem as well. well said.