சுகமான அனுபவம்… – ஒரு பக்க கதை





‘’என்னடி…எதுவுமே சொல்ல மாட்டேங்கிறே?’’
‘’எதைடி சொல்லச் சொல்றே?’’
‘’எனக்குக் கிடைக்காத அனுபவம் உனக்குக் கிடைச்சிருக்குல்லே? எப்படி இருந்துச்சுன்னூ சொல்லு. நான் கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்.’’
‘’ஒரு மணி நேரம்…ரொம்ப ஜாலியா இருந்துச்சு. இதுதான் எனக்கு முதல் தடவைங்கறதுனாலே ஒரு இனம் புரியாத சந்தோசம் இருந்துச்சு.’’
‘’ஒரு மணி நேரமா? ஆரம்பத்திலேர்ந்து விவரமா சொல்லேன்’’
‘’அதெல்லாம் சொன்னா புரியாது, அனுபவிச்சாதான் தெரியும்’’
‘’ம்…கொடுத்து வச்சவ…நல்லா அனுபவிக்கறே, பணம் எவ்வளவு?’’
‘’மூவாயிரத்து ஐநூறு ரூவா’
‘’அவ்வளவா?’’
‘’ஃப்ளைட்லே மதுரையிலேர்ந்து சென்னைக்கு சொகுசா வர்றதுன்னா சும்மாவா?’’
– பட்டுக்கோட்டை ராஜேஸ் (20-10-10)