மெதுவா…! – ஒரு பக்க கதை
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 6,915
இரவு நேரம்…. தூரத்தில் எங்கோ மணி பதினொன்று அடித்து ஓய்ந்தது…
கல்யாணமாகி இருபது வருடம் ஆகிவிட்டது. வியப்புடன் அருகில் படுத்திருந்த மனைவியை பார்த்தான். அவள் கண்களை மூடியபடி படுக்கையில் புரண்டு படுத்தாள்.
திடீரென்று அவனுடைய கை அவளுடைய கழுத்தின் பின்புறம் மெதுவாக தடவியது. என்ன ஆச்சர்யம் அவள் கண்களை திறக்கவில்லை.
அவனுடைய கை கழுத்திலிருந்து இப்போது அவளுடைய முதுகை நோக்கி மெல்ல நகர்ந்தது. அவளுடைய இதயம் சிலிர்த்தது. இருந்தாலும் கண்ணை திறக்கவில்லை.
அவனுடைய கையின் பயணம் இன்னும் நிற்கவில்லை. இடுப்பையும் தாண்டி அவளுடைய முழங்கால்களுக்கு கீழே ஒரு கணம் தயங்கியது. அடுத்த கணம் அவளுடைய பாதங்களுக்கு அடியில் சட்டென்று நகர்ந்தது.
மூடிய இமைகளுக்குள் அவளுடைய கண்கள் படபடத்தன. அந்த நொடியில் தீடீரென்று டி.வி. உயிர் பெற்றது. உலக தொலைக்காட்சிகளில் முதல் முதலாக…
என்னங்க.. என்ன ஆச்சு?
ரிமோட் கிடைச்சிடுச்சி…!
– வலைக்கள்ளன் (29-9-10)
தொடர்புள்ள சிறுகதைகள்
அன்பின் விலை
நிஷாஹந்தினி ஜோன்
July 23, 2026
பூசைக்குள் வரும் பூக்கள்
காரை ஆடலரசன்
July 23, 2026
வேற்றுமையில் ஒற்றுமை
இரா.கலைச்செல்வி
July 23, 2026