சில அனுபவங்கள். சில கேள்விகள், சில தரிசனங்கள்




(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அனுபவம்

என் எல்லாப் படைப்பிலேயும் personal experience உட்பொருளாக ஊடுருவிக்கிடக்கும். நான் அதைச் சேகரித்து elaborate ஆக்கி, literary expression கொடுக்கிறேன். இதை மட்டுமே நான் conscious ஆகச் செய்கிறேன்னு சொல்லலாம்.
Mystricism. Mystic nature எல்லாம் என் கதையிலே இருக்குங்கிறதை நான் ஒத்துக்கிறேன். ஒத்துக்கறேன்கறதுக் காக defend பண்ணறேன்னு அர்த்தம் இல்லே.
நம்பிக்கை
‘idol’ மட்டுமே faithஐ evoking – ஒன்றைத் தொட்டு ன்று… உண்டாக்கிட முடியாது. முதல்ல invoke பண்ண றோம். அதுதான் அதுல முக்கியம். பின்னால் faith உண்டா னால், image உருவாறது.நம்ம level of senses rise (ஆகும் போது) ஆக ஆக, imageஐ feel பண்ணமுடியறது. எல்லாமே மனசோட, evolutionary conditionஐப் பொறுத்தது.
எனக்குச் சில நம்பிக்கைகள் உண்டு. ஏன் அந்த நம்பிக்கைங்கற கேள்வியே அர்த்தமில்லாதது. I want to believe. so believe. Ultimate realisation வந்த பிறகுதான் நம் நம்பிக்கைளின் அர்த்தங்கள் நமக்குத் தெரியவரும். “Beauty” என்பதே அந்த “ultimate reality” யை teach பண்ணறதுதானே!
என் பாத்திரங்களின் ஆதாரசுருதி
என்னோட பெரும்பான்மையான பாத்திரங்களின் ஆதார சுருதியே வைராக்கியம். இந்த current of pride இருக்கே, அது என் தைகள் வம்சாவளியாக் கொண்டு வர்றது.
இந்த ‘pride’னாலேயே, அவாளுக்கு Courage without hopeங்கற நிலைமை சாத்தியமா இருந்தது. அதுதான் greatest quality of Man என்று என்னோட கணிப்பு.
என்னோட எழுத்தில் நான் பேசுவதாக நானும். நினைப்பதில்லை. மூதாதைகள் என் மூலமாய் — என் எழுத்து மூலமாய் – என் எழுத்து மூலமாய் அவர்களே – என் மூதாதைகளே – பேசுகிறார்கள். நான் அல்ல.
Acceptence of Reality’-ன்னு ஒரு நிலையை அடையறதுகூட Surrender of hopeங்றதும் சாத்தியமாறபோது தான்.
என்னையே நான் சில விஷயங்கள்ல, நிமிஷங்கள்ல, கைவிட்டிருக்கேன். அதுதான் Courage without hopeன்னு நான் நினைக்கிறேன்.
வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன?
‘What is the meaning of my self?’ இந்தக் கேள்வியை பல் கேள்விகள்ல ஒரு கேள்வின்னு என்னால நினைக்க முடியல. இதுவே கேள்வியா இருக்கு எனக்கு
என் தாகம், தவிப்பு, புதிர்,தெளிவு. எல்லாமே இந்தக் கேள்வியிலேர்ந்துதான் உற்பத்தியாறது.
“Life”க்கு மீனிங், ‘living’ என்பது இல்லை நெனச்சும் பார்த்தா,- lifeக்குன்னு தனியா மீனிங் ஒண்ணும் கிடை யாது. எல்லாமே நம்ம attribute பண்ணறதுதான்.
நன்னா அனுபவிச்சுப் பாத்த, எந்த ஒரு நிமிஷத்தையும் சாரமில்லாத நிமிஷம்னு ஒதுக்கமுடியாதுன்னு நமக்குத் Osfujú. All small moments are parts of supreme moments.
எண்ணிக்கையில் என்ன இருக்கு? Entire Universe is tear drop of eternity.’ இது eternityங்கிறது. natureனு மட்டும் அர்த்தம் இல்ல… இயற்கையையும் தாண்டி து மிஞ்சுகிறது, அதுதான் eternity.
நல்ல படைப்பு
கலைப்படைப்பு ஒரு நல்ல creationல் மூன்று முக்கிய மான அம்சங்கள் படிஞ்சுருக்கும் Cunning in structute, sincerity in, intent, integrity of contents இதெல்லாமே.
என் படைப்புகள் சம்பந்தப்பட்டமட்டில், சொல்றேன் – வார்த்தைகள் எதுவுமே நம்மோடதுன்னு தனியா இல்ல. Words ஐ வச்சு Mischiet பண்ண முடியாது. கூடாது. அமைகிற விதத்தில் வார்த்தைகள் அமையற structure இருக்கே, it adds to the beauty, because beauty is the deepest cunning! of creation.
TRUTH
Truth is not the exclusive property of any one. ஆனாலும் சில இதயங்களின் மூலம் அது கொஞ்சம் அழகாகத் தன்னை – தன் இருப்பை வெளிப்படுத்திக்கொள் கிறது. தைரியம், நேர்மை, துணிச்சல், வீரம் இதெல்லாமே. சத்தியத்தின் பல்வேறு நாமாவளிகள்.
இன்னொன்று Truth may be common. But it is also particular சில நேரங்கள்ல, சத்தியத்தோடு இழைந்த அனுபவங்களை வார்த்தைகள்ல communfcate பண்ண போதில்.
அதுனோட பவித்ரம் கெட்டுப் போயிடறாப்பல நேக்குத் தோண்றது.
Memory
நம் மனம், சில சம்பவங்களை, முகங்களை, காட்சிகளை அப்படியே freeze பண்ணி வச்சுடும், அந்தக் கட்டம், பல வருஷங்களைத் தாண்டி வந்தப்புறம்கூட அப்படியே நின்னுண்டுருக்கும். பதமாக உறைஞ்சுருக்கும் அதைத்தான் Memory’ ன்னு சொல்றோம்.
‘Memory அற்புதமான சக்தி வாய்ந்தது. அது poetic qualityGur ஒரு லேசான பொய்மையும் கலந்துருக்கு. நாம் நினைவு கூரும்போது, அது சத்யபிம்பங்களோடு, நிழல் களையும் சுமந்து தன்னோடு இழுத்து வந்து கொட்டும்.
குறியீடுகள்
சில உணர்ச்சிகளுக்குச் சமதையான வார்த்தைகளை நான் காத்திருந்து. கஷ்டப்பட்டுத் தேர்ந்தெடுத்திருக் கிறேன். அப்பட்டமான அர்த்த வெளியீடுகளைவிட, எனக்கு குறியீடுகளில் ஒரு அசாத்தியமான ஈடுபாடு, சிறு அசைவினாலேகூட பெருவிளைவுகளை உண்டுபண்ண ஓடியும். புருவத் தூக்கலிலே நான் communicate பண்ணி விடணும்னு ஆசைப்படறேன்.
இதையும் தவிர, ஒரு மௌனமான communicationல் என் நடவடிக்கைகள் இருக்கணும்னு ஒரு ஆசை. Personality யோட, ‘ full projection அதுலதான் இருக்கு. ஒவ்வொரு வெளியீடும் நேர்கிற சமயத்துல என்னுள் ஒரு excitement உண்டாறது. சொல்லிச் சொல்லி தெரியப்படுத்தறதைவிட சொல்லாமல் உணர்த்துவதுதான் நளினம்னு நெனக்கிறவன் நான்.
ஜன்னல்
பெருவாரியான ஜனங்களுக்கு இப்படிப்பட்ட மொழி நடை, முழுக்க communicate பண்ண முடியாததால்தான் நான் புரியாத எழுத்தாளனாப் போயிட்டேன்.
என் நடைமொழியின் நோக்கமே மெளனம்தான். Religious கண்ணோட்டத்துல சொல்லலை. இதை இந்த மெளனமே, என் artistic achievement ஆக இருக்கணும்.
‘என்” Religionக்கும் ‘என் artக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லே. Religionல் rituals இருக்கு. Ritualsல் ஒருவிதமான சௌந்தர்ய உபாசனையைப் பார்க்கமுடியும். ‘Art’ம் அதன் மூலமாக கலா சௌந்தர்யத்தைக் காணமுடியும். இப்படி ஒண்ணை ஒண்ணு overlap ஆக வாய்ப்பு இருக்கிறதல்லவா? அந்த united நிலையை எட்டுவதே என் நடைமொழியின் லட்சியமாவும் இருக்கிறது.
நாஸ்தீகக் கலைஞனுக்கும் கூட சௌந்தர்ய உபாசனா உணர்வு எப்போதும் இருக்கும். ‘சாமீ’ பூதம்னு சொல்ல வரலை நான். சௌந்தர்ய உபாசனை எப்படி Religion ஐயும் art ஐயும் link பண்றதுன்னு சொல்ல வந்தேன்.
MUSICAL EXPERIANCE
எனக்கு ரொம்பச் சின்ன வயசிலிருந்தே சங்கீதத்தில் ஈடுபாடு உண்டு – பட்டணத்திலே நான் வேலை பாத்துண்டு ருந்தப்போ. அலையோரமா, பாடிண்டே நடந்து போவேன். பாடறதுன்னா ராகம் மட்டுமே இல்லை. ஆலாபனையும் தான். ராக ஆலாபனை எதுக்கும் கட்டுப்படாதது. உடம்பில் தெம்பு இருந்தால் 3 நாள் கூடப் பாடலாம். ஈடுபாட்டுக்குத் தகுந்த மாதிரி நம்பளை இழுத்துண்டு போற சக்தி ஆலாபனைக்கு உண்டு.
அப்படி ஆலாபனை பண்ற சமயத்துல அதில் உண்டாகிற வண்ணக் குழைவுகள் எனக்குள்ளும் உண்டாகிண்டே இருக்கும். உன் பார்வையால் அதைப் பாக்க முடியுமான்னு கேட்டால் என்னால் பாக்க முடியறதுன்னு சொல்ல நான் தயார்.
இந்த Musical effectஐ, ஏன் என் எழுத்தில் கொண்டு வர முடியாதான்னு நான் அப்பவே யோசிப்பேன்.
வார்த்தைகளை உச்சரிக்கும் ஓசைக்கும் Musical effect. உண்டு. வார்த்தைகள் ஒன்றோட ஒண்ணு குழையறபோது ஒரு நெகிழ்ச்சி உண்டாகும். அதே மாதிரி, Sound ஐ break பண்ணினா எல்லாமே ஸ்வரங்கள். அந்த ஸ்வரங்களின்இ ழைவுக்கு ஏத்தா மாதிரி ராகங்கள் பிடிபடும். “ஸ்வரங்கள்”ங்கறது என்ன? ஓசையின் ஒழுங்குபடுத்திய arrange ments… ஏற்பாடுகள் வார்த்தைகளையும் பிசிறு எடுத்து regulate corI CAÊÌ CUT (T À) ஏன் Musical effect உண்டாக்க முடியாது. Music sound’ எல்லாம் மூல ஆதாரத்தை (ஆதி மூலத்தை) நோக்கமாகக் கொண்டது. They are all aiming at the original source.
Musicஇல் ஆழ்ந்தால் எனக்கு சில pictures கிடைக்கத் தொடங்கினது. ஒருமுறை மதுரை சோமு, சிந்து பைரவியில் பாடிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். பிர்க்காக்களாக அடுக்கிக்கொண்டே இருந்தார். ஏதோ ஒரு இடத்தில் அவரோட குரல் உடைஞ்சது. அபசுரமா உடையலை உடைஞ்சதிலேயே ஒரு அனுசுரம் இருந்தது. அந்த கணத்தில் என் நெஞ்சுல சின்ன வெள்ளைக்கல் வந்து மோதினாப்பல இருந்தது. 21 மணி நேரம் அந்த வலி எனக்கு இருந்தது
சாமா ராகம் சாந்தமுலேகாவைக் கேட்டுண்டிருந்தேன். கேக்கக் கேக்க, என்னைச் சுத்தி ஒரே ப்ளூவா (ப்ளூவாட்டர் இல்லே)இருக்கற மாதிரியும் நான் ஒரு white fishஆ ஆயிட்ட மாதிரியும் ஒரு சுகமான உணர்வு உண்டானது. MUSICAL PICTURES, நெறைய கிடைச்சுருக்கு நேக்கு.
இதனாலேயே, ராகங்களுக்கு சொரூபம் இருக்குன்னு நான் உறுதியா நம்புவேன். நம்பறேன்.
வார்த்தைகளும் படைப்பும்
வார்த்தைகளுக்கு நான் அடிமை இல்லை. ஏன்னா, ஒரு artist. வார்த்தைகளுக்கு அடிமை ஆகக்கூடாது.
Artistக்கு ஒரு இரக்கமற்ற தன்மை வேணும். வார்த்தை கள் ரொம்ப அழகா வந்துவிழும்.
வந்துவிழும். ஆனா அந்த வார்த்தை அந்த இடத்துக்குப் பொருத்தமா இருக்காதுன்னு தீர்மானம் பண்ணிட்டா. இரக்கமில்லாமல் வெட்டிடணும்.’ஐயோ பாவம்’ இவ்வளவு அழகா இருக்கே அந்த வார்த்தை ” ன்னு கருணை காட்ட முடியாது.
அப்படி வெட்டறதுனால், அந்த வார்த்தை வீணாப் போறது இல்ல! மன அலமாரியிலே இருக்கிற அடுக்குத் தட்டுகள்ல, அது போய்ப் பதுங்கிண்டிடும். இதனாலயே, நான் டயரிலே எதையும் குறிச்சுவச்சுக் காப்பாத்தறது இல்லை.
என் கதைக்கான வார்த்தைகள் எல்லாமே என்னோட துன்னு சொந்தம் கொண்டாடறதுக்கு இல்லை. சில நேரம் சுவரின் கிறுக்கல் தெருவிலே அகஸ்மாத்தாய்க் காதுல விழும் சம்பாஷணை இவையெல்லாம்கூட, என் கதையில் வார்த் தைகளா வந்து அமஞ்சிருக்கு!
‘ஜனணியில்’ கணுக்கள்னு ஒரு கதை, நாசூக்காகப் பேசிப் பேசி காரியத்தைச் சாதிக்கிற ஒரு பெண்ணின் பாத்திரம் வருது அதுல. அவளது அந்த சுபாவத்தைச் சித்தரிக்க, எனக்குச் சரியான உவமை கிடைக்காமல் கதையை நிறுத் திட்டுக் கண்ணசந்துட்டேன். அப்போ, ஒரு வெறுஞ் சுவர். அதுல ஒரு கரிக்கட்டிதானே “மாம்பூவைக் காம்பாய்ந்தாற் போல்…னு எழுதறது. இந்த உவமை ரொம்பப் பொருத்தமா இருக்கும்னு தோணினதாலே அப்படியே போட்டேன்.
‘மாம்பூ’ எவ்வளவு நளினமானது, அதுல காம்பாய்றது எவ்வளவு பெரிய சமாசாரம்கறதே பின்னால்தான் தெரிஞ்சுண்டேன்.
ஒரு படைப்புக்கான வார்த்தைகள் ஒவ்வொண்ணிலயும் ஜீவனைத் தக்கவச்சுப் பண்ணனும். ஊஞ்சல் சங்கிலி மாதிரி ஒண்ணோட ஒண்ணு கோத்துண்டு வார்த்தைகள் அமையனும். வார்த்தைகள், பொருளை அமுக்காதபடிக்கு பொருளை – அர்த்தத்தை project பண்றா மாதிரி அது அமையணும்.
நான் இப்படியே கற்பனை பண்றேன். ‘வார்த்தைகள் P இப்படிக் குறுகிக் குறுகி ஒருநாள் வார்த்தைகளே இல்லாமல் ஒழிஞ்சுபோயிடணும்… எனக்கு நன்னாத் தெரியும், இது துர் ஆசை. நிறைவேறாதுன்னு?
வார்த்தைகளை விரயம் பண்ணவே கூடாது; சிக்கனம் ஒரு நல்ல படைப்பின் வீர்யத்துக்கு அடிப்படை, பின்ன ஏன் உங்க கதை 4.5 பக்கத்துக்கு வர்றதுன்னு கேக்கலாம். பேசற பொருள் பெரிசா இருக்கறதுதான் அதுக்குக் காரணம்.
சொல்லைக் குறுக்கக் குறுக்க, அதுக்கு ஒரு அசாத்ய ப்ரஷர் ஏற்படும். அந்த சொல்லைப் பிரயோகம் பண்ணும் போது பட்டாசு மாதிரி படார்னு” வெடிக்கும். பட்டாசு சிதைஞ்சு போயிடும்… போகட்டும் து உண்டாக்கற வெடிப்பு இருக்கே அதுதான் முக்கியம்.
கவிதை
கவிதைக்கு அப்படிப்பட்ட வார்த்தைகள் தேவை ஆனாலும் கவிதைங்கிறது வெறும் வார்த்தையில் கவிதை என்பது ஜீவனில் உறைவது.
கவிதையோ வசனமோ, உக்கிரம் வேணும். என் கதையில் உக்ரம் இருக்கிற இடத்தைக் ‘கவிதை’ என்று நீங்கள் அழைத்தால் நான் பொறுப்பில்லை. தனிப்பட்ட முறையில் வசனத்துக்கும் கவிதைக்கும் வித்தியாசம் இருக்கிறதா நான் நெனக்கலே…
“Basic emotions ஒரு சரியான கணத்தில், அடிவயிற்றி லிருந்தோ, முதுகுத்தண்டிலிருந்தோ உக்ரம் ததும்ப எழும்பித் தன் முகம் காட்டும். உக்ரத்தால் எழுச்சி. எழுச்சி தானே கவிதை!
சில கேள்விகள்… சில பதில்கள்
கே: அபிதா நாவலில், அபிதா அபிதா ஒரு chief character @chief ல்லை. கதையின் பிற்பாகத்தில்தான் அபிதாவே வருகிறாள். அப்படி இருக்கும்போது, ஏன் கதைத் தலைப்பை “அபிதா” என்று வைத்தீர்கள்?
ப: Attain பண்ணமுடியாத ஒரு stateசின் உருவகம்தான் அபிதா. That state may be a thing or a person.
Sometimes, it acts as a catalystic elemeat. Though it has no involvement it will influence others heavily. ‘அபிதா’ அவளது நிலையில் அப்படியே இருந்தாலும், இவனை ரொம்ப பாதிக்கிறா.
சகுந்தலைமூலம் பூரணமடையாத தனது காதலை பூரண மாக்கிப் பூர்த்தி செய்துகொள்ள, அவன் விரும்புகிறான்.
அபிதா அதிலே முழுக்க develop ஆகலே. அபிதா யாரு? சகுந்தலையின் second edition தானே?
PERSONAL EXPERIENCE
என் அனுபவத்தில் மோதாத எதையும் நான் கதையாக் என் personal experience! மனசிலே ஆழ உழுது இருக்கும் வாழ்க்கையிலே போய்ச் சோர்ந்து, பிரிக்கமுடியாதபடி வாழ்வோடு இழைஞ்சுபோய் அடி மனசிலே தங்கிக் கிடக்கும், அது என்னிக்காவது கூக்குரலிட்டுக்கொண்டு வெளிக் கிளம்பறபோது நான் பாத்திருக்கி றேன். பார்ப்பேன், பார்க்கிறேன். நினைவில் தேய்ந்து, வருடக்கணக்கில் அனுபவத்தின் மெய்ப்பொருளாக, ஒருவித மான அலாதியான காவிய சோகத்தோடு வெளிக்கிளம்பும் அந்தத் தருணத்திலே நான்கூட அது என்னோடதுன்னு சொந்தம் கொண்டாட முடியாது. என்னோடது ல்லைன் னும் மறுக்கறதுக்கு இல்லை.
சிலந்தி, பண்ணற கட்டடம் முழுக்க அதுக்குள்ள இருக்கிற எச்சிலால்தான் நூற்கிறது.சம்பவம், பாஷை சூழ் நிலை, உணர்வு, மன அவஸ்தைகள் பாவனைகள், பழைய நினைவுகள், தேடிக் கண்ட சுயதர்சனங்கள் இவை எல்லாம் சேர்த்து நான் ஒரு கட்டிடம் கட்டறேன்.
சிலந்தியோட வலை இல்லை அது. கட்டடம். அந்த சமயத்திலே காவிய உரு வலையோட மத்தியில் இருக்கலாம். ஓரத்தில் இருக்கலாம். சில சமயம் சிலந்தி தான் கட்டின வலையிலேயே சிக்கற சமயங்களும் உண்டு!
‘கிரிட்டிக்ஸ்’னு கொல்லற சிலபேருக்கு, இந்தக் கட்டடம், ஒட்டடைன்னு தோணினா, அதுக்கு நான் என்ன பண்ணமுடியும். ஒரு மாதிரியான உருவக பாஷையிலே சொல்றேன், இது புரியறதா?
என் “அபிதா” ஒரு guiding star மாதிரி, துருவ நட்சத்திரம் மாதிரி பெரிய அம்பியை stimulate பண்ணறா. கலா ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அவளது பவித் திரத்தைக் காப்பாத்தறதுக்கு, அவளது மரணத்தைத் தவிர வேற வழி என்ன இருக்கு! நேக்கே வருத்தம்தான் அபிதா அப்படி மறைஞ்சுபோறதல், ஆனா வேறவழி என்ன இருக்கு?
கரடிமலை ஒரு character ஆகும்னு எனக்கு அபிதாவை எழுதறபோது தெரியாது. ஏன், அதுல வர்ற நந்திகூட ஒரு பிரதான பாத்திரமாகி இருக்கிறதே! முதல்ல introduce ஆற நந்தி, அப்புறம் கடைசில. அபிதாவைச் சாகடிக்கற காட்சிலதான் appear ஆறது. அதுனால, பாத்திரப் படைப்பு கள், உயிருள்ள அம்சமாகத்தான் இருக்கணும்னு பாத்திரங் களின் அவசியம் இல்ல… அதேமாதிரி, பிரதானம்கிறதே, அதன் உயிர்ப்பைப் பொறுத்தே இருக்கே தவிர, கதையிலே அதன் வியாபகத்தைப் பொறுத்ததா இருக்கலை.
கே: எல்லாக் கதாநாயகிகளும் மானுஷ்யத் தன்மையை விட. அதீதமான தெய்வீகத்தன்மை பொருந்தியவர்களாக இருக்கிறார்கள்.
ப: தாயின் சொரூபமாக, அம்மனின் சொரூபங்களாகவே எனக்கு என் கதாநாயகிகள் காட்சி அளிக்கிறார்கள். தெய்வீக உருவகம்தானே அம்மா” என்கிறவள்…
ராமகிருஷ்ண பரமஹம்ஸரோட சம்பாஷணைகள், உபதேசங்கள், வாழ்க்கை என்னில் ரொம்ப ஊடுருவி இருக்கறதும் பாத்திரங்களின் தெய்வத்தன்மைக்கு ஒரு காரணமா இருக்கலாம்…
கே: எழுத்து, சங்கீதம் இரண்டுக்கும் ஏதேனும் அடிப்படைக் காரணிகள் உண்டா? உண்டாயின் அவற்றை விளக்க முடியுமா?
எழுத்து. சங்கீதத்துக்கும் அடிப்படை சத்திய வேட்கை. இந்த வேட்கை இல்லாதவன் எழுத்தாளனாகவோ பாடக் னாகவோ இருக்கமுடியாது.
உன்னத நிலை… இரண்டுமே, ‘supremacyஐ reach யண்ற தாகத்தோடு கிளம்புகிறவை பூரணத்துவத்தை விட, பூரணத்தைத் தேடற – தேடிப்போற “தேடல்” இருக்கே அதுக்கே ஆயிரம் அர்த்தங்கள் இருக்கு!
– உண்மையின் தரிசனம், முதற் பதிப்பு: செப்டம்பர் 1990, வானதி பதிப்பகம், சென்னை.