கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 92 
 
 

(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு பெண் தனக்குக் கொடுத்த சிலுவையைச் சுமக்க மறுத்து முணுமுணுத்துக் கொண்டே இருந் தாள். சர்வ சதா வெறுப்பின் முறுமுறுப்புக் கொண் டாள். ஒருநாள் இரவு தன்னை ஓர் தேவ தூதன் அழ கான சிலுவைகள் நிறைந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றதாகச் சொப்பனம் கண்டாள்.

“உனக்குப் பிரியமான சிலுவையை எடுத்துக் கொண்டு, உன் சிலுவையைப் போட்டுவிடு” என்றான் தூதன். பேராசையுடன் தங்கச் சிலுவை ஒன்றைத் தூக்கினாள். சூடு தாங்க முடியாமல் கீழே போட்டு விட்டாள். பேராவலுடன் புஷ்பச் சிலுவை ஒன்றை எடுத்தாள். முட்கள் குத்தினதால் போட்டு விட்டாள். பின்பு ஒவ்வொன்றாய் எடுத்துச் சோதித்தாள். அனைத் தும் தன் சிலுவையைக் காட்டிலும் பாரம் மிகுந்ததாகவே இருந்தன.

இறுதியாகத் தன் சிலுவையையே எடுத்துக்கொண் டாள். கடவுள் தம்முடைய பிள்ளைகளுக்கு ஏற்ற சிலுவையையே தருகிறார். அதைப் பொறுமையோடு சகிக்கவும் – சுமக்கவும் வேண்டும்.

“நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது” [சங்கீதம் 119:71]

”ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு என்னைப் பின்பற்றக் கடவன்” [லூக்கா 9:23]

– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.

ஆர்.எஸ்.ஜேக்கப் பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *