கைவினை கரவேல்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 19, 2026
பார்வையிட்டோர்: 56
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு குக்கிராமத்தின் கணியன், கட்டையன் இரண்டு ஏழை மனிதர்கள் வசித்து வந்தார்கள். அவர்களுக்குப் பொம்மை செய்யத் தெரியும். ஆனால் கட்டையன் கபடு நிறைந்தவன். சோம்பலும் உடையவன். யாராவது பொம்மை செய்து தரச் சொன்னால், எனக்குத் தெரியாது என்று தட்டிக் கழித்து விடுவான். கணியன் அப்படிக் கைத்தொழில மறைக்க மாட்டான். யார் எந்தப் பொம்மை கேட்டலும் அழகாகச் செய்து தருவான்.
ஒருநாள் இருவரும் ஒரு கலியாணத்திற்காக வெளியூருக்குச் சென்றிருந்தார்கள். அங்கே ஒரு பொம்மை வியாபாரி இருந்தார். அவர் முதலில் கட்டையனைப் பார்த்து, பொம்மை செய்து தரும்படிக் கேட்டார். அவன் எனக்குத் தெரியாது என்று ஏமாற்றிவிட்டான். பின்பு கணியனைச் செய்து தரும்படிக் கேட்டார். அவர் கேட்ட பொம்மைகளை யெல்லாம் கணியன் அழகாகச் செய்து கொடுத்தான். பொம்மைகள் வியாபாரிக்கு நன்றாகப் பிடித்துவிட்டன. கணியனுக்கு நல்ல சம்பளம் கொடுத்துத் தம்மிடத்திலேயே வேலைக்கு வைத்துக்கொண்டார். கட்டையன் தனக்குத் தெரிந்த கைத்தொழிலை மறைத்ததால் வேலை கிடைக்கவில்லை. அதனால் வயிற்றுக்குச் சோறு கிடைக்காமல் திண்டாடினான். (ஆகையால்)
தெரிந்த கைத்தொழிலைத் தெரியாது என்று மறைக்கக் கூடாது.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கேள்வி முயல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
கொள்ளை விரும்பேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
நோய்க்கு இடம் கொடேல்
சுந்தர சண்முகனார்
July 19, 2026
