கண்ணீரின் வலிகள்




அதிகாலை 5.00 மணி கடிகாரத்தில் அலாரம் ட்ரிங்…. ட்ரிங் என ஒலித்துக் கொண்டிருந்தது. அலாரத்தின் சத்தத்தைக் கேட்டு வேகமாக எழுந்தாள் நதியா. அதிகாலை எழுந்தது முதல் வாசல் தெளித்து கோலம் போட்டு, காபி வைத்து தனது கணவன் ராம்கியை எழுப்பினாள். என்னங்க…. என்னங்க எழுந்திருங்க. இந்தாங்க காபி என்றாள். நதியாவிற்கு இரண்டு பெண் பிள்ளைகள். பெரியவள் தேவி 10 ம் வகுப்பு ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்து வருகிறாள். சிறியவள் தீபா 4 ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளும், அவள் அக்கா படிக்கும் பள்ளியில் தான் படித்து வருகிறாள்.
நதியா கணவனுக்கு காபி கொடுத்து விட்டு, தனது இரு பிள்ளைகளையும் எழுப்பி காபி கொடுத்து எழுப்பி விட்டாள். இருவரும் காபி குடித்து விட்டு மீண்டும் படுத்து விடாமல் எழுந்திருக்கணும். எழுந்து முகத்தை அலப்பி விட்டு, படிக்க வேண்டும். எங்காவது பெட்டுக்குள் நுழைவதை பார்த்தேன் தொலைந்து விடுவேன் என்றாள் கண்டிப்பான குரலுடன் .
நதியா சமையல் கட்டுக்குள் நுழைந்து ஜலதாரையில் கழுவ வேண்டிய பாத்திரங்களையெல்லாம் எடுத்துப்போட்டு, கழுவி எடுத்து அலமாரியில் அடுக்கி வைத்து, காய்கறிகளை நறுக்கி சமையலுக்கு ரெடி பண்ணி, மற்றொரு பக்கம் கிரைண்டரில் போட்ட மாவு அரைத்ததா என்று பார்த்துக் கொண்டு சமையல் வேலையில் காலை நேரத்தில் மும்மரமாக மூழ்கி இருந்தாள்.
சமையல் வேலைகளை முடித்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி, தனது கணவன் ராம்கியை அலுவலகத்திற்க்கு அனுப்ப வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து ஓரு வழியாக அனைவரையும் பள்ளிக்கும், அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்து விட்டு அப்பாடா… என்று டி.வி.யை ஆன் செய்து கட்டிலில் அமர்ந்தாள். திடீரென்று கரெண்ட் கட் ஆகவே. ச்சீ………. இந்த கரண்ட் வேற . இந்த கரண்ட கட் ஆவதற்கு மட்டும் ஓரு அளவே இல்ல என்று புலம்பி விட்டு கட்டிலில் அமர்ந்தவள் ஓயாத பணியின் காரணமாக சற்று ஓய்வதற்க்கு கண்ணயர்ந்தாள் நதியா.
நதியாவிற்க்கு அப்படியே தன் இளமை வாழ்க்கை நினைவிற்கு வருகிறது. நதியா தனலட்சுமிக்கும், சுப்பிரமணிக்கும் மகளாகப் பிறந்தவள். தனலட்சுமிக்கும், சுப்பிரமணிக்கும் திருமணமாகி 8 வருடம் குழந்தை பாக்கியமே இல்லாமல் தவமாய் தவமிருந்து பெற்றவள் தான் இந்த நதியா. ஆதனால் நதியாவிற்க்கு அவர்கள் வீட்டில் அப்பா, அம்மா, உறவினர்கள் என எல்லோரிடமும் செல்லம் தான். அனைவருக்கும் செல்லப்பிள்ளை அவள். பார்ப்போர் கவரும் வண்ணம் ‘தலுக்” ‘மொலுக்” என கொழு பொம்மையைப் போல இருப்பாள். பார்ப்பவரெல்லாம் எடுத்துக் கொஞ்சும் அழகு குட்டிச் செல்லம் அவள். இவளுக்குப் பின் 6 வருடம் கழித்து ராதா பிறந்தாள். நதியா நல்ல கலர் என்றால் ராதா அவளுக்கு நேர் நல்ல கருப்பு. அதனாலேயே ராதாவுக்கு நதியாவைக் கண்டாலே ஒரு வித பொறாமை உணர்வு பிறவி முதலே தொற்றிக் கொண்டது.
நதியாவின் தந்தை சுப்பிரமணி போட்டோகிராபர் பணி மற்றும் கேரளாவில் விவசாயப்பணி. கேரளாவில் விவசாயம் அவர்களின் பூர்வீக சொத்து. இரண்டையும் தொய்வின்றி கவனித்துக் கொள்வார். ஓய்வின்றி உழைப்பவர். நதியாவின் தாயார் தனலட்சுமி தனது கணவர் சுப்பிரமணிக்கு போட்டோ கிராபர் பணியில் உதவியாகவும், உறுதுiணாகவும் இருப்பார்.
சுப்பிரமணி எங்கு சென்றாலும் தனது மகள் நதியாவை உடன் அழைத்துச் செல்வார். எந்த தொழிலைச் செய்வதாகட்டும், பணியை செய்வதாகட்டும் மகள் நதியாவின் கையில் கொடுத்து வாங்கி அதைத் செயல்படுத்துவது அவரது வேலையாக இருக்கும் மகள் நதியா கையில் கொடுத்து வாங்கி செய்யும் காரியம் ஆசிர்வாதமாக இருக்கும் என்று சென்டீமெண்டாக பீல்…. பண்ணும் அப்பா.
நதியா சிறுவயதிலிருந்து 10 ம் வகுப்பு படிக்கும் ஓரு நடுத்தர வயது பெண்ணாகிறாள். பள்ளியில் படிக்கும் பசங்க மற்றும் ஸ்டுடியோவுக்கு வரும் பசங்க எனும் யார் வந்தாலும் பிள்ளையை பொத்தி வளர்க்கும், கண்டித்து கண்காணித்து வளர்க்கும் அப்பா சுப்பிரமணி.
மகள் நதியா பள்ளிக்கு சென்று படிக்கும் போது பள்ளியில் அல்லது பள்ளியை விட்டு வீட்டிற்கு வரும் வழியில் ரோட்டில் யாராவது கிண்டல் செய்தால் உடனே வந்து தனது அப்பாவிடம் போட்டுக் கொடுத்து விடுவாள். உடனே அவள் அப்பா அவனை உண்டு, இல்லை என்று ஓரு கை பார்த்து விடுவார்.
எனவே மகள் பள்ளிக்கு சென்று திரும்பி வரும் வரை கண்காணித்துக் கொண்டே இருப்பார். யாரும் இவளிடம் பேசக்கூடாது. பேசினால் அவ்வளவு தான்..இப்படியே நாட்கள் நகர்கின்றன. ஓரு நாள் நதியாவின் தூரத்து உறவினர் ராம்கி இவர்களது வீட்டிற்கு வருகிறான். ராம்கியின் தந்தையார் இறந்ததினால் அவரது போட்டோவை பெரிது படுத்தி, பிரேம் போட்டு கலர் லைட்டு போட்டு கொடுக்க வேண்டும் என்று சொல்லி நதியாவின் அப்பாவைப் பார்க்க காத்துக்கொண்டிருக்கிறான்.
ராம்கி நதியாவின் தூரத்து உறவினர் என்பதால் நதியாவின் அப்பாவைத் தவிர மற்றவர்களுக்கு யாருக்கும் ராம்கி பரிச்சையம் இல்லாதவன். அதனால் தனலட்சுமி அவனை வீட்டிற்குள்ளே அனுமதிக்காமல் கடையில் வெளியிலேயே உட்கார வைத்து விட்டு சென்று விட்டார். அரைமணி நேரம் கழித்து வெறும் ‘டீ” மட்டும் கிடைக்கின்றது ராம்கிக்கு அதுவும் வேண்டா வெறுப்பாக.
ராம்கி அவர்கள் ஸ்டுடியோவில் அமர்ந்து அவனது தந்தையார் இறந்த துக்கத்தோடு,மன அமைதியின்றி,சஞ்சலத்தோடும் கவலை தோய்ந்த முகத்துடனும் அமர்ந்திருந்தான்.
ஸ்டுடியோவில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த போட்டோக்களையெல்லாம் அப்படியே பார்வையிடுகிறான். அனைத்து போட்டோக்களையும் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்களில் அந்த அழகு தேவதையின் முகம் தென்படுகிறது. புகைப்படத்தில் மற்ற போட்டோக்கள் எல்லாம் கலரில் இருக்க நதியாவின் போட்டோ மட்டும் கருப்பு வெள்ளையில் தலை முடியை விரித்து அப்படியே கருப்புக் கலர் பாவாடை, சட்டையில் அழகாக காட்சியளித்தாள் நதியா.
அந்த போட்டோவை பார்த்தவுடன் ராம்கிக்கு ஒரு இனம் புரியாத சந்தோசம். அந்த போட்டோவை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றுகின்றது. அப்பொழுது ராம்கியின் மனதிற்குள் ஓரு எண்ணம் தோன்றுகிறது. இவளைப் போன்று ஒரு பெண் தனக்கு மனைவியாகத் கிடைத்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டிருக்கிறான்.
சும்மாவா சொன்னார்கள் பழமொழி. கடவுள் ஒரு வாசல் மூடினால் மறுவாசல் திறப்பார் என்று. அது ராம்கியின் வாழ்வில் உண்மையானது. ராம்கிக்கு எல்லாமே அவன் அப்பா தான். அவன் அப்பா அவனுக்கு நண்பன் மாதிரி. எல்லா வகையிலும் அவனுக்கு உற்ற தோழனாய் இருந்தவர். திடீரென மாரடைப்பில் இறந்து விட ராம்கி மிகவும் மனசொடிந்து போனான்.
அவனுக்கு ஆறுதலாக அமைந்தவள் தான் இந்த நதியா. அந்தப் போட்டோவில் வெறைக்க வெறைக்க வெச்ச கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பெண் வேறு யாருமல்ல சாட்ச்; சாத் நதியா தான்! ராம்கிக்கு என்ன பண்ணுவதென்றே தெரியவில்லை. கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் இருந்தது அவனுக்கு. இந்த சூழ்நிலையில் தான் ராம்கி அடிக்கடி தனது மாமன் மகள் நதியாவை பார்ப்பதற்காக அடிக்கடி வீட்டிற்கு வரப்போக இருந்தான். இதில் ராம்கிக்கும், நதியாவிற்க்கும் ஏற்பட்ட பழக்கம்இபந்தம், பாசம் அப்படியே காதலாக உருவெடுக்கிறது. இது எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் ஏற்படுகிறது.
இந்த சூழலில் தான் விதி ராம்கியின் தாயார் ரூபத்தில் விளையாடுகிறது. ராம்கி அவனது தந்தையார் அரசு பணியில் இருந்து, பணியில் இருக்கும் போது இறந்ததால், அந்த வேலை இவனுக்கு கிடைத்தது. இவனுக்கு அரசுப்பணி என்பதால் நதியாவின் வீட்டில் அவர்களும் இவர்கள் இருவரின் விருப்பத்திற்கு தடை விதிக்கவில்லை.
ஆனால் ராம்கியின் தாயார் ஜெயாவிற்கு இந்த விசயம் தெரிய வர, ராம்கி நதியாவின் வீட்டிற்கு செல்வதற்கு தடை விதிக்கிறார். எவ்வளவு தடைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி வருவது தானே காதல். ராம்கியின் தாயார் ஜெயா தடை போட, தடை போட மடை திறந்த வெள்ளமாக, காதல் பலமாக, ஆணி வேராக இருவர் மனதிலும் அச்சாரமாய் பதிந்து விடுகிறது.
இது ராம்கியின் தாயார் மனதில் நஞ்சாய் உருவெடுக்கிறது. விளைவு ராம்கியின் செயல்பாடுகள் என்னவென்றாலும், எதைச் செய்தாலும் அதில் குறை கண்டு பிடித்து ‘ உனக்கு புத்தியெல்லாம் அங்கிருக்கும் போது இங்க எங்க மேலெல்லாம் அக்கறையும், கவனிப்பும் எப்படி வரும்” என குத்தூசி வார்த்தையால் ராம்கியை துளைத்தெடுத்தார் அவன் தாய் ஜெயா. இதற்கு அவன் சகோதரிகளும் ஒத்தூதல் வேறு. ஆமாம்மா. இவன் முன்பு போல் இல்லை. அப்பா இறந்ததும் இவன் இவனது இஷ்டத்திற்கு ஆடறான் என்று இவர்களும், தனது பங்கிற்கு வசையிட ஆரம்பித்தனர்.
இதனால் ராம்கி எதற்கு வம்பு என்று நதியாவை பார்ப்பதை சிறிது காலம் குறைத்துக் கொண்டேன். இதனால் நதியா பதை பதைக்க ஆரம்பித்தாள். ராம்கியை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, பார்க்க முடியாமல் அவஸ்தை பட ஆரம்பித்தாள். மனம் எதிலும் இருப்பு கொள்ளவில்லை. சரியாக சாப்பிடுவது இல்லை. தூங்குவதும் இல்லை. படிப்பிலும் நாட்டம் செல்லவில்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
நதியாவின் அப்பா சரி கொஞ்சம் பொறு ! நாம் போய் உன் மாமா ராம்கியைப் பார்க்கலாம். நான் தோட்டம் சென்று வந்தவுடன் பிறகு செல்லலாம் என்று சொல்லி விட்டு தோட்டம் சென்று வருவதற்குள் நதியா தனது மாமன் ராம்கி பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்று விடுகிறாள். தனியாக எங்கும் செல்லாதவள் பள்ளிக்கும் ஸ்கூல் பஸ். எங்க செல்வதாய் இருந்தாலும் அவளது தந்தையார் தான் கூட்டிச்செல்வார்.
இப்படி இருக்கையில் ஸ்டுடியோவில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஆர்வ மிகுதியால் ராம்கியைக் காணச் சென்று விடுகிறாள். திக்கு தெரியாத காட்டில் விட்டது போல அலை மோதி ராம்கியின் அலுவலகம் வந்து அவனைச் சந்திக்கிறாள் கண்ணீருடன். ராம்கிக்கு ஒரு பக்கம் அலாதி சந்தோசம். மற்றொரு பக்கம் இது தெரிந்தால் அம்மாவும், உடன் பிறந்தவர்களும் சண்டை போட்டு விடுவார்களே! என்ற பயம் வேற. ராம்கியை பார்க்காமல் நதியா பித்து பிடித்தவள் போய் ஆகிவிடுகிறாள். கண் மூடித்தனமான காதல். என்ன செய்வதென்று தெரிவதில்லை.
ராம்கி வராத நாட்களில் வேதனையின் விளிம்பில் நதியா குண்டுசியை மெழுகுவர்த்தியில் சூடுபடுத்தி தன் உடலெங்கும் ராம்கி பெயரை பச்சையாக குத்தி வைக்கிறாள். இவள் செய்யும் பைத்தியகாரத்தனம் அனைத்தும் நதியாவின் பெற்றோருக்கு தெரிய வர, இவளை இப்படியே விட்டால் ராம்கி நினைப்பால் இவள் மெண்டல் ஆகி விடுவாள். எனவே வருவது வரட்டும் என்று நதியாவின் அப்பா ராம்கியின் வீட்டிற்கு நதியாவை அழைத்துச் செல்கிறார். அங்க ராம்கியின் தாயார் ஜெயவோ இவர்களைப் பார்த்ததும் வேண்டா வெறுப்பாக வரவேற்கிறார்.
நல்ல உபசரிப்பு இல்லை, மருமகளுக்குரிய வரவேற்பு இல்லை. ராம்கியின் அம்மா, அக்கா, மற்றும் தங்கை ஆகியோர் நதியாவை நடத்திய விதம் மிகவும் வேதனைக்குரியது. ராம்கியின் வீட்டார் நடந்து கொண்டது நதியாவின் அப்பாவிற்கு மிகவும் வேதனையாய் இருந்தது.
எவ்வளவு இரங்கி வந்து பேசினாலும் ராம்கியின் தாயார் பிடி கொடுப்பதாய் இல்லை. கவர்மெண்ட் மாப்பிள்ளை வளைத்து போடலாம்னு பாக்கறையா என்று எடுத்தெறிந்து பேசும் குணம். நதியாவிற்கும், ராம்கிக்கும் கண்ணீரை வரவழைத்தது.
ராம்கிக்கு கோபம் வந்து வீட்டை விட்டு வெளியேறுகிறான். அலுவலகத்தில் தங்குகிறான். நண்பன் வீட்டில் தங்குகிறான். அரவணைக்க யாரும் அற்ற நிலை. இந்த நிலையில் தான் நதியாவின் அப்பா சுப்பிரமணி. தனது வீட்டில் அடைக்கலம் கொடுக்கின்றார் ராம்கிக்கு. இதை அறிந்த ராம்கியின் தாயார் உறவினரோடு வந்து நதியாவின் வீட்டில் மிகவும் வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தி விட்டு சென்று விடுகிறார்.தன்னை வெறுத்து ஓதுக்கினவங்க மத்தியில் நல்ல முறையில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தடன் ஒவ்வொரு காரியத்தையும் கண்ணும் கருத்துமாக செய்ய ஆரம்பித்தாள் நதியா.
இரவு பகல் பாராது டியூசன் எடுப்பதும், ஸ்டுடியோ பணிகள் பார்ப்பதும் காட்டை பராமரிப்பதுமாக முழுக்கவனத்தை செலுத்தி தனது அப்பா வைத்துச் சென்று கடன், வாங்கிய கடன் அனைத்தையும் அடைத்து, சீட்டுப்போட்டு , லோன் போட்டு அப்பா வாங்கி வைத்த இடத்தில் வீட்டைக் கட்டி, அதை மாடி வீடாக்கி, யாரால் விரட்டப்பட்டோமோ! யாரால் புறக்கணிக்கப்பட்N;டாமோ அவர்கள் மத்தியில் நல்ல இருந்து காண்பிப்பதை உறுதி செய்தாள் நதியா.
ஆனாலும் ராம்கியின் பெற்றோர், அப்பா அம்மாவின் உறவினர்கள் செய்த துரோகங்கள், கேவலமான பேச்சுக்கள், நடத்திய விவதாங்கள் அனைத்தும் நீங்காத நினைவுகளால் ‘கண்ணீரின் வலிகளால்” ஆறாத ரணமாய் இப்போதும் அவள் மனதில் நின்று நிழலாடிக் கொண்டிருக்கின்றது.