ஒளவையார் கூறிய முடிபு
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 10
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருநாள் ஔவையார் ஓர் ஊர் வழியாகச் சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் பலர்கூடிக் கடுமையாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் எதைக் குறித்துச் சொற்போரிடுகிறார்கள் என்று ஒளவையார் கருத்துடன் கேட்டார்.
அவர்களில் ஒருவர் சொன்னார் : திருக்குறள் தான் நூல்களிலே சிறந்தது. திருக்குறளுக்கு ஒப்பாக வேறொருநூலும் இல்லை.” என்று. இதனைக் கேட்டு வேறொருவர், “அப்படிச் சொல்லாதீர்கள். இப்பொழு துள்ள நூல்களிலே சிறந்தது உபநிடதங்கள் தாம்,” என்றார். இன்னொருவர், “அப்படியன்று; மறை நூலின் கருத்துகளைக்கொண்டு விளங்குகின்ற மூவர் தேவார முந்தான் மிக உயர்ந்தவை,” என்றார்.
மற்றொருவர், “உங்களுடைய கருத்துகள் சிறந் தனவாக எனக்குத் தெரியவில்லை, திருவாதவூரடிகள் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகமும் திருக்கோவை யாரும் இருக்கும்பொழுது அவற்றை மறந்துவிட்டு இப்படிப் பேசலாமா?” என்றார். இன்னொருவரோ, 4.நீங்கள் எவ்வாறு வேண்டுமானாலுஞ் சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். திருமூலநாயனார் அருளிச்செய்த திருமந்திரத்தைத்தான் நான் பெரிதும் பாராட்டிப் போற்றுகிறேன்,” என்றார்.
இவ்வுரையாடலைக் கேட்ட ஔவையார் அவர் களைப் பார்த்து, “நீங்கள் வீணாகச் சொற்போரிட வேண்டாம். நீங்கள் குறிப்பிட்ட திருக்குறள், உபநிட தங்கள், மூவர் தேவாரம். திருவாசகம், திருக்கோவையார், திருமந்திரம் ஆகியவையெல்லாம் ஒரே தன்மையான பெருமையுடையவை தாம்,” என்று முடிவாகக் கூறினார். சொற்போரிட்டவர்கள் ஒளவை யாருடைய அறிவுத் திறமையைக் கண்டு பெரிதும் வியப்படைந்து போற்றினார்கள்.
“தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவரும் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.”
(உரை) தேவர் குறளும் – திருவள்ளுவ நாயனாருடைய திருக்குறளும், திருநான்மறைமுடிவும் சிறப்புப் – பொருந்திய நான்மறைகளின் முடிவாகிய உபகிடதங்களும், மூவர் தமிழும் மூவர் தேவாரமும், முனிமொழியும் கோவை திருவாசகமும் – மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருக்கோவையார் ஆகிய வையும், திருமூலர் சொல்லும் – திருமந்திரமும், ஒரு வாசகம் என்று உணர் – ஒரு பொருளையே குறிப்பன என்று உணர்ந்து கொள்வாயாக.
(கருத்து.) திருக்குறள், திருநான்மறை, தேவாரம், திருக் கோவையார், திருமந்திரம் ஆகியவை ஒரே தன்மையான சிறப்புடையவை.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026