பிறன்மனை விரும்பிய பேதை
கதையாசிரியர்: க.இனியன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்: 9
(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாண்டவர்கள் இவ்வுலகில் வாழ்ந்திருந்த காலத் திலே கீசகன் என்னும் பெயருடையவன் ஒருவன் இருந் தான். அவன் அறிவற்றவன்; முரடன். அவனுக்கு யாராவது அறிவுரை கூறினாலும் தெரியாது. அவன் பாண்டவர்களுடைய மனைவியாகிய திரௌபதியைக் கண்டு அவள்மீது கடுமையான காதல் கொண்டான். பலவாறு முயற்சி செய்தான்.
இச் செய்தி வீமனுக்குத் தெரிந்தது. அவன் ஒரு.. நாள் இரவு மிகு சூழ்ச்சியாகக் கீசகனை அழைத்து அவனோடு மற்போரிட்டான். அடிமேல் அடி அடித் தான். நன்றாகக் குத்திக் குமைத்தான். வீமன் பெரிய முரடனாகையால் அவனுக்கு ஒப்பாக நின்று போரிடக் கீசகனால் முடியவில்லை. வெகு விரைவாக மாண்டு தொலைந்து முடிந்து போனான். அந்தக் கீசகன் பிறனுடைய மனைவியை விரும்பியபடியால் இவ்வாறு வீணாக மாண்டு தொலைந்தானே என்று பலரும் வருந்தினர்.
“நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலத்தில்
கொண்ட கருவளிக்குங் கொள்கைபோல் -ஒண்டொடீ
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலம்அயல்
மாதர்மேல் வைப்பார் மனம்.”
(உரை.) ஒண்தொடீ – ஒள்ளிய வளையலை அணிந்தவளே !, கண்டு சிப்பி வேய்கதலி – நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழை யும், நாசம் உறும் காலத்தில் – தாம் அழிவை – அடையுங் காலத்திலே, கொண்ட கரு அளிக்கும் கொள்கைபோல் – முறையே, குஞ்சு, முத்து. அரிசி, காய்க்குலை ஆகியவற்றை வெளிப்படுத்துகிற தன்மையைப் போல மனிதர்கள், போதம் தனம் கல்வி பென் ற வரும் காலம் – ஞானமும் செல்வமும் வித்தையும் அழிய வருங் காலத்திலே, அயல் மாதர்மேல் மனம் வைப்பார் – பீற மகளிர்மேல் மனம் வைப்பார்கள்.
(கருத்து.) அழிவு நேரக் கூடிய காலத்திலேதான், பிறன் மனையை விரும்பும் தீய எண்ணமும் உண்டாகும்.
– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
வாணிகஞ் செய்த வல்லாளன்
க.இனியன்
August 3, 2026
ஒளவையாரும் ஆராய்ச்சியாளர்களும்
க.இனியன்
August 3, 2026