ஒற்றாடல்




(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
திருக்குறள் கதைகள்
பிறரிடம் நிகழ்வனவற்றை மறைவாக அறிந்து சொல்லும் ஒற்றரை ஆளுதல்.
இளந்தத்தன் என்ற புலவன் உறையூரைக் காணச்சென்றான். தனது வருகையை விசாரித்த வரிடம், “தான் சோழன் நலங்கிள்ளி ஆளும் ஆவூரில் இருந்துவருகிறேன்” என்றான். இதைக்கேட்டு விசாரித்தவர்கள் இவன், நலங்கிள்ளியிடம் இருந்து ஒற்றுவந்தான்” என்று நெடுங்கிள்ளி இடம் விட் டார்கள். நெடுங்கிள்ளியும் அவ்விதமே ஒற்றனாக எண்ணிக் கொலை செய்ய உத்தரவளித்தான். இதைக் கேட்ட கோவூர்கிழார். சோழ அரசனிடம் சென்று அரசே! இவன் ஒற்றன் அல்லன்; ஒற்றர் இலக்கணம், பிறர் சந்தேகம் கொள்ளாத வடிவம் பொருந்தி, மற்றவர் தம்மைக் கோபித்துப் பார்த் தாலும் அவர்பார்வைக்குப் பயப்படாமல் உறுதி யாய் நின்று மற்றவர் எவரிடத்தும் தன் மனதில் உள்ளவற்றை வெளிப்படுத்தாமல் இருக்கும் தன் மை ஆகும். இவ்விலக்கணத்தில் ஒன்றும் அறியாத இவனை ஒற்றன் என்று கொல்வது பழி ஆகும் என்றார். இவர் சொல்லைக் கேட்டு இளந்தத்தனைக் கொல்லாது விட்டான். வள்ளுவரும், குறளில் இக் கருத்தைக்கூறியுள்ளனர்.
கடா அ உருவொடு கண்ணஞ்சா தியாண்டும்
உகா அமை வல்லநே ஒற்று. (43)
கடா = (கண்டவர்கள்) சந்தேகப்படாத
உருவொடு = வடிவோடு பொருந்தி
கண் அஞ்சாது = அவர் சந்தேகித்து அறியத் தொடங்கினால் கோபித்துப் பார்க்கின்ற அவர்) கண்ணிற்குப் பயப்படாமல் நின்று
யாண்டும் = சாம, பேத, தான, தண்டம், ஆகிய நான்கு உபாயங்களும் செய்தாலும்
உகாமை = மனதில் உள்ளவைகளை வெளிப்படுத்தாமையில்
வல்லது = வல்லவனே
ஒற்று = ஒற்றனாவான்.
கருத்து: பிறர் சந்தேகப்படாத வடிவத்தோடு கூடி அஞ்சாமல் பிறர் என்ன செய்தாலும் தன் மனதில் உள்ள வைகளைச் சொல்லாதவனே ஒற்றன் ஆவான்.
கேள்வி: சிறந்த ஒற்றனுக்கு அமைய வேண்டிய குணங்கள் எவை?
இலக்கணம்: கடாஅ – உகா.அ – உயிரளபெடை.
– திருக்குறள் கதைகள் – 28-1-1949 – நான்காம் உயர்வகுப்புக்குரியது (IV Form) – அரசியலார் வகுத்த புதிய பாடத்திட்டப்படி எழுதியது – இந்நூல் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் இருபத்தைந்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுள்ளப்பாங்கின்படி சிதம்பரம், வித்துவான் திரு.ச.சேதுசுப்பிரமணிய பிள்ளை அவர்களால் எழுதப்பெற்றது.