ஒரே பிரசவத்தில் மூன்று!





எங்கள் வீட்டிற்கு நேர் பின் பக்கத்து வீட்டுப் பொன்னம்மாவுக்கு நிறைய சிநேகிதிகள். காலையில் இருந்து அவர்கள் வீட்டில் யாராவது வந்து விசாரித்துக் கொண்டே இருந்தார்கள்.
“ எப்ப பிரவம் ஆச்சு?…”
“ இன்று காலையில் தான்!…”
“ ஆச்சரியமா இருக்கே…. ஒரே பிரசவத்தில் மூன்றா?…..”
“ ஆமாம்! தேவி….எல்லாம் சுகப் பிரசவம்….மூன்றும் நல்லா இருக்கு!..”
“எத்தனை ஆண்?..எத்தனை பெண்?…”
“இரண்டு ஆண்!…ஒரு பெண்!…”
“ கொஞ்ச நாளைக்கு நிறைய பால் கொடுங்க!..”
“நீங்க சொல்லனுமா அக்கா!………….தேவையான அளவு கொடுத்துக் கொண்டுதானிருக்கிறேன்!…”
“ நிம்மிக்கு ஒரே பிரசவத்தில் மூன்று…..அதுவும் சுகப் பிரசவம் என்று கேட்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு!…”
“இதென்ன தேவி அதிசயம்?….எங்க பெரியப்பா வீட்டு ‘அம்மு’வுக்கு ஒரே பிரசவத்தில் ஐந்தாக்கும்!..”
அந்த நேரம் பார்த்து ‘வள்..வள்’ ‘கீச்…கீச்’ என்று சத்தம் வந்தது!
அப்பொழுது தான் பொன்னம்மா வீட்டு நாயை அவர்கள் ‘நிம்மி’ என்று கூப்பிடுவது என் நினைவுக்கு வந்தது!
– மார்ச் 2015