ஒரு சந்தோஷமும், ஒருபாடு சந்தேகமும்!





டாக்டரின் மருத்துவ மனைக்குள் நுழைந்தான். அப்போது மணி, இரவு பத்து பத்தரை இருக்கலாம்.
டாக்டர் கேட்டார்…

‘உங்களுக்குக் கடைசியாக எப்போது ஃபிட்ஸ் (வலிப்பு) வந்தது?’ என்றார்.
‘சமீபமாய் வரவில்லை. வந்து ஒரு இரண்டு மாதமிருக்கலாம்” என்றான்.
அப்படீன்னா ஒரு ‘டெஸ்ட்’ எடுக்கணுமே! என்றார். அவர் அப்படிச் சொன்னது
அவனுக்கு சந்தேகமாக இருந்தது.
‘என்னடா இது வலிப்பு வரவில்லை என்றால் எதுக்கு டெஸ்ட்?’
வலிப்பு வருகிறது என்றால் டெஸ்ட் எடுத்தால் சரி. வராத ஒன்றுக்கு எதுக்கு டெஸ்ட்?
கடவுளுக்கே வெளிச்சம்.
ஒருவேளை வலிப்பு வராமை ஏன்? என்று கண்டு பிடிக்கப் போகிறாரோ?
வந்த பேஷண்டும் குணமாகிட்டானா?
இனி இங்கு வராமல் போய்விட்டால் நம் வருமானத்துக்கு என்ன செய்வது என்று நினைத்தாரோ?
வரவில்லையே வலிப்பு என்று சந்தோஷப்பட்டால், வராமைக்கான காரணம் கண்டுபிடிக்க ஓராயிரம் துக்கப்பட வேண்டி இருக்கே?
கடவுள் ஏன்தான் நம்மை இப்படிச் சோதிக்கிறானோ?
பல்வேறு கேள்விகள் மனதுள் எழ தீர்மானமாய் ஒரு முடிவுக்கு வந்தான்.
இப்போது எடுக்கச் சொன்ன ‘டெஸ்ட்’ ஏன் எதற்கு என்று குழம்பி மறுபடியும் வராத வலிப்பை வரவைப்பதைவிட டெஸ்ட ரிப்போர்ட் வரட்டும், அதில் என்ன வருகிறது பார்ப்போம் என்று அமைதியானான்.