ஒரு குற்றம் தற்கொலை செய்து கொள்கிறது..!!!
ஆஆஆஆ…..
பயங்கர அலறல் அந்த அமைதி பள்ளத்தாக்கின் நாலா பக்கமும் எதிரொலித்து பீதியைக் கிளப்பியது !
என் கையில் இருந்த Cannon கேமராவை நழுவ விடாமல் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டேன்! உடலெல்லாம் வேர்த்துக் கொட்டியது!
‘ அடப் பாவி! இதற்குத்தான் அந்த கொஞ்சல் கொஞ்சினாயா???? ‘
மறுபடியும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு view finder வழியாகப் பார்த்தேன்!
ஒரே கூட்டம் கூடி விட்டது! ஒன்றும் தெளிவாகத் தெரியவில்லை!
என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை! கால்கள் நடுங்கின!
பில்லர் ராக்ஸ் மேலிருந்து கீழே இறங்கி வந்து ஒரு பாறையின் மேல் உட்கார்ந்து கொண்டேன்!
திரும்பவும் கேமராவை எடுத்து பார்க்கலாமா என்று தோன்றியது!
‘வேண்டாம்! யாராவது பார்த்தால் தொலைந்தேன்!!!
மெதுவாக நடந்து நான் தங்கியிருக்கும் அறையை அடைந்து விட்டேன்!
குளிர்ந்த தண்ணீரில் ஒரு குளியல் போட்ட பின் படபடப்பு கொஞ்சம் அடங்கியது!
இப்போது உங்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள நான் தீர்மானம் செய்து விட்டேன்!!!!
நான் குணசீலன்! 27 வயது!
அநாதை இல்லத்தில் வளர்ந்தவன்!!!!!!!
குப்பைத் தொட்டியில் கிடந்தேனோ இல்லை , ஆசிரமம் வாசலில் விட்டு விட்டு போனாளோ அது ஒன்றுமே எனக்கு முக்கியமில்லை!
பல பேர் கையில் வளர்ந்து நானும் ஒரு ஆளாகி நிற்கிறேன் அதுதான் முக்கியம்!!
தன்னம்பிக்கையும், தைரியமும், விடா முயற்சியும், கூடவே ஒரு அலட்சியமும் சேர்ந்து வளர்ந்தது இயற்கையாக அமைந்த ஒன்று!!!
நன்றாகப் படித்து I. T. யில் நாலு வருஷம் கை நிறைய சம்பாதித்த பின் கம்ப்யூட்டரிடம் சண்டை போட்டுக் கொண்டு விலகி விட்டேன்!
சின்ன வயசில் சினிமா நிறைய பார்ப்பேன்! அதுவும் ஆங்கில துப்பறியும் படங்கள்!!!!!!!
அப்புறம் தமிழில் பாலு மகேந்திரா என்றால் உயிர்!! புகைப்பட பைத்தியம் பிடித்து விட்டது!
முதலில் ஒரு Sony pocket camera வாங்கினேன்! இப்போது Canon!
விலை 40000!!!! Freelance photographer!
நிறைய பாராட்டுகள்! ‘ பாதிப் பாதி’ படத்தில் உதவி காமிராமேன்! படம் ஒரு வாரம் கூட ஓடவில்லை!
ஆனால் ‘ யார் கேமரா?’ என்று கேட்க வைத்து விட்டது!!!
இதெல்லாம் பழங்கதை! இப்போது நடந்ததைப் பார்ப்போம்!
நான் சில சமயம் ஒரு பொழுதுபோக்குக்காக மலை பிரதேசங்களில் கேமராவும் கையுமாய் திரிந்து கொண்டிருப்பேன்!!!
மலைகளின் ராணியான கொடைக்கானல் மேல் காதல் கொண்டு விட்டேன்! கூடிய மட்டும் சீசன் போது வரமாட்டேன்!
ஒன்று , கூட்டம் இருக்காது! இரண்டு, பனிமூட்டத்தில் படங்கள் அற்புதமாய் அமைந்து விடும்!
பேரிஜம் ஏரியைத்தாண்டி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டேஜ் ஒன்றில் தங்கியிருக்கிறேன்.
அங்குதான் முந்தாநாள் அந்த ஜோடியைப் பார்த்தேன்!!!!!
பார்த்தவுடன் பச்சென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் ஜோடி! கொஞ்சலோ கொஞ்சல்!
அவன் நல்ல திடகாத்திரமாய் விஜய் சேதுபதியை அவ்வப்போது நினைவூட்டினான்!!
அவள் முகத்தைத்தான் சரியாகப் பார்க்க முடியவில்லை!! முகத்தின் மீது வந்து விழும் முடியும், கறுப்பு கண்ணாடியும்(வெயிலே இல்லை), தலையைச் சுற்றிய scarfம்!!! அவள் முகம் எப்படி இருக்கும்????
அடுத்த நாளும் அந்த ஜோடியைப் பார்க்கும் அதிர்ஷ்டம்!! இன்றைக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில்!!!
இருவரும் அன்றுதான் திருமணம் ஆன ஜோடி போல் வேட்டி சேலையில் , கழுத்தில் சினிமாவில் வருவது போல் காட்டுப்பூக்களால் ஆன மாலையுடன் ரதியும் மன்மதனும் போல் இடைவிடாத சிரிப்புடன்!!
இன்று அவள் முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது! முகம் முழுதும் கண்கள்!! பேரழகி தான்! அவர்கள் பார்க்காத போது கேமராவில் எடுத்து போட்டுக் கொண்டேன்!!
இன்று காலையிலிருந்து அவர்கள் அறையை விட்டு வெளியே வரவேயில்லை! நானும் லேட்டாகத்தான் எழுந்திருந்தேன்!
இரண்டு ஆம்லெட்டும் காப்பியும் சாப்பிட்டு கிளம்பி விட்டேன்!
அருமையான பருவநிலை…’ புதிய வானம்! புதிய பூமி!!’ என்று M. G. R. Styleல் பாடிக் கொண்டு கேமராவும் கையுமாய் புறப்பட்டேன்!
மாலை மூன்று மணி இருக்கும்! பில்லர் ராக்ஸ் மேலிருந்து காட்சி…
விவரிக்கமுடியாத அற்புதம்..
கேமரா வழியாக Moir Point அற்புதம்!
கேமரா சமர்த்தாய் அதன் வேலையை செய்து கொண்டிருந்தது!
‘ ஒரு வினாடி அப்படியே இருங்கள்………!!!!!
‘அவர்கள்…….. அந்த சிட்டுக்குருவிகள்!!!! அந்த காதலர்கள் தானே’.!!
நன்றாக ஜும் பண்ணி பார்த்தேன் ! அவர்களேதான்……
ஒருவரையொருவர் கட்டி அணைத்தபடி…… முத்தமிட்டுக் கொண்டு…..
‘ சே!!!! பனிமூட்டம் அவர்களைப் போர்த்தி விட்டது…..
அதிர்ஷ்டம் என் பக்கம்!!
‘ ஐயோ! அந்த பெண் மலை உச்சியின் ஓரத்தில்! இங்கிருந்து கத்தலாம் போல ஒரு வெறி!!!!
அதற்குள்…. அதற்குள்….!!!!!
‘ அடப் பாவி!!!!!!
‘ ஆஆஆஆஆஆ!!!!!!!!!என்ற அலறல்!!!!
மலைகளின் நாலா பக்கமும் முட்டி மோதி அமைதி பள்ளத்தாக்கையே கிடுகிடுக்க வைத்தது!
என் அறைக்கு எப்படி வந்து சேர்ந்தேன் .எனக்கே புரியவில்லை…..
பத்து நிமிடம் கண்ணை மூடிப் படுத்திருந்தேன்!
பின்னிக்கொண்டிருந்த நரம்புகள் எல்லாம் ஒருவழியாக பிரிந்து நேரானது!! கேமராவிலிருந்து சிப்பை எடுத்து மடிக்கணினியில் பதிவு பண்ணினேன்!!!
ஒவ்வொரு காட்சியாய் விரியத் தொடங்கின…
‘பச்சை கம்பளம் விரித்த மலைகள்……. பனிமூட்டம்…… பால் குடிக்கும் குரங்குக் குட்டி…… கையில் வாளுடன் அய்யனார்.. .. குட்டிப் பையன் குதிரை சவாரி…… என்று ஒவ்வொரு காட்சியும் அற்புத அனுபவ சாட்சிகள்…………………
இதோ நமது காதல் பைங்கிளிகள்! குறிஞ்சி ஆண்டவர் கோயில் முன்னால் மாலையுடன்……!!!!!!
நன்றாக பெரிது பண்ணி பார்த்தேன்! வெட்டப் பட்ட தலைமுடி! கொஞ்சம் செம்பட்டையாய், சுருள் சுருளாய்! மிகப்பெரிய கண்கள்! நல்ல உயரம்!
அவனுக்கு அந்த குறுந்தாடி அவளைப் போலவே கச்சிதமான பொருத்தம்!
எனக்கு திக் திக்கென்று அடித்துக் கொண்டது! இருவரும், நீல நிற ஜீன்ஸ்…. கருப்பு டீ ஷர்ட்….சில வேளை யார் யாரென்று தெரியாதபடி !!!!
மாறி மாறி அவர்களுடன் பனியும் கண்ணாமூச்சி விளையாடியது ! அவள் அவன் கையிலிருந்த மொபைலைப் பிடுங்குகிறாள்!
மலையின் முகட்டில் நின்று படம் பிடிக்கத் தொடங்குகிறாள் !
என்ன இது ???? அவன் பின்னாலிருந்து அவளை ……..
ஆஆஆஆ!!
நன்றாக ஜும் பண்ணி பார்க்கிறேன் !!!!
‘ கொலைகாரப்பாவி ” ……!!!!!
அவன்தான் …. சந்தேகமேயில்லை !!
உடனே சிம் கார்டை எடுத்துக்கொண்டு அமைதிப் பள்ளத்தாக்கின் காவல் நிலையத்திற்கு கிளம்பினேன் !!!
” நோ..நோ… கொஞ்சம் பொறு……………. !!!!
எது என்னைத் தடுத்தது என்று தெரியவில்லை ! காலை வரை பொறுத்திருக்க தீர்மானித்தேன் !
எதிர்பார்த்தபடி அன்று இரவு இரண்டு பேருமே திரும்பவில்லை ! அவளைத்தான் திரும்ப வராத இடத்துக்கு அனுப்பிவிட்டானே !!!
காலை தினசரிகளில் முதல் பக்கம் கொட்டை எழுத்துக்களில்!! ……
இளம் மனைவி பள்ளத்தாக்கில் தவறி விழுந்து பரிதாபமாய் உயிரிழந்தார் ……
காதல் கணவன் கதறி அழுதார் ……
ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் ஐச் சேர்ந்தவர் நரேன் ! இவர் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து வருபவர் !
இவரது இளம் மனைவி மதுமதி !
மலேசியாவின் பெரிய தொழிலதிபர் கதிரேசனின் ஒரே செல்ல மகள் !
இருவருக்கும் திருமணமாகி மூன்று வருஷம் ஆகிறது ! குழந்தைகள் இல்லை !
கடந்த ஒரு வாரமாக கொடைக்கானலில் சுற்றுலா வந்து இடத்தில் நேற்று மதியம் Moir பள்ளத்தாக்கில் இருந்து மதுமதி தவறி விழுந்தார் ……. தினசரியைக் கசக்கி எறிந்தேன் !
என் மனதில் வேறு ஒரு திட்டம் உருவானது !
நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன் ! எனக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி !
சில சமயம் அசட்டு துணிச்சல் என்று கூட சொல்லலாம் ! நானே இவனை ஒரு கை பார்க்கப் போகிறேன் !!!!
எல்லாவற்றையும் பத்திரமாய் பேக் பண்ணினேன் ! சிம் கார்டைத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டேன் !
நிச்சியம் அவன் போலீசாரிடம் கண்ணீர் விட்டு ஏமாற்றி ‘, இந்நேரம் ஜூபிலி ஹில்ஸ் வீட்டில் வோட்காவோ …. விஸ்கியோ……….
ம்….. பார்க்கத்தானே போகிறேன் !!!
அவனைப் பற்றிய தகவல்கள் எல்லாம் சேகரித்து விட்டேன் !
இரண்டு நாள் டைம் எடுத்துக்கொண்டேன்!
ஒரு சனிக்கிழமை இரவு அவன் வீட்டையும் கண்டுபிடித்து விட்டேன்!
ஏழெட்டு கிரவுண்டில் கொஞ்சம் ஒதுக்குப்புறமாய் மயன் மாளிகையாய் ஜோலித்தது!
வீட்டையே மறைத்தது கேட் !
வெளியிலிருந்து அழைப்பு பொத்தானை அமுக்கியதும் இனட்டர்காம் யாரென்று விவரம் கேட்டது !
ஒரு நேபாளி வாட்ச்மேன் என்னுடைய ID ஐ வாங்கிக்கொண்டு ‘ பாஞ்ச் மினிட்’ என்று மறைந்தான்.
சரியாக ஐந்து நிமிடத்தில் கதவு திறந்தது! ஆனால் உள்ளே வீடு தெரிவதற்கே பத்து நிமிடம் நடக்க வேண்டியிருந்தது !
போர்ட்டிகோவில் நாலு வீடு கட்டலாம் !
பத்து நிமிடம் ! நரேன் என்ற நரேந்திரன் தாடியுடன் ஷேவ் பண்ணாத முகத்துடன் !
அவனேதான் ! ஆஹா ! குணா ! நீ கில்லாடிதான் !!
” ஹலோ… நான் நரேன்… ! நீங்கள் குணசீலன் ! சரிதானே..???
” ஆம்.“
‘ என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் ??’
எதுவாயிருந்தாலும் ஒரு வாரத்துக்கு எனக்கு தனிமை தேவை….. நான் ஒருவரிடமும் பேசும் மனநிலையில் இல்லை.”
‘ அது விஷயமாகத்தான் ‘
‘ அது என்றால் ?’
‘ நீங்கள் சொன்ன அந்த ” மனநிலை…….”
ஒரு வினாடி யோசித்தான் !
” தயவுசெய்து உள்ளே வாருங்கள்!”
அதுதான் குணா ! எங்கே அடித்தால் வலிக்கும் என்று தெரியாதா ???
நேராக அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்றான்!
வீட்டைப்பற்றிய
வர்ணனை இப்போது பொருத்தமாய் இருக்காது ! இரண்டு பேருக்குமே mood off !
நான் நினைத்ததைப் போல் அவன் அறையில் விஸ்கியோ..பிராந்தியோ எதுவுமில்லை !
பீத்தோவனின் ‘மூன்லைட் சொனாட்டா’ சோகத்தைப் பிழிந்து கொண்டிருந்தது !
நரேன் அங்கிருந்த சோஃபாவில் தொபீரென்று உட்கார்ந்தான்.
உபசாரவார்த்தை ஒன்றையும்எதிர்பார்க்காமல் நான் அவன் பக்கத்தில்அமர்ந்தேன் !
அவன் கண்கள் சிவந்திருந்தது நிச்சயமாக ஆல்கஹாலால் இல்லை ! உண்மையிலேயே அழுதிருக்கிறான்!
குழந்தையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறானே!
” குணா ! நீங்கள் யாரென்று கூட எனக்குத் தெரியாது! ஏனோ உங்களை எனக்குப் பிடித்து விட்டது ! சொல்லுங்கள் குணா ! என்ன வேண்டும் ?
” நரேன் ! உங்களுக்கு ஏற்பட்ட துர்சம்பவம் எனக்குத் தெரியும் ! இன்ஃபாக்ட் அது நடந்தபோது நானும் கொடைக்கானலில் தான் இருந்தேன் !!
“என்ன ….என்ன சொன்னீர்கள் குணா ? ”
ஆமாம் ! பேப்பரில் பார்த்தேன் ! “
விகாரமாய் மாறிய முகம் பழைய நிலைக்குத் திரும்பியது !
” குணா ! இங்கே வாங்களேன்.. எங்கள் திருமண ஃபோட்டோவைப் பாருங்கள்…. !
என் மதுமதி ! ஏன் என்னை விட்டுப் பிரிந்து போனாள் ?….ஏன்?…
அந்த போட்டோவைப் பார்த்ததும் உலகமே தட்டாமாலை சுற்றியது !
அதிலிருந்த மதுமதி நான் கொடையில் பார்த்த பெண் இல்லை! நிச்சயமாக இல்லை ! ஆனால் லேசாக ஒரு சாயல் !
அப்படியானால் இவளும் இறந்து விட்டாளா ?? இன்னொரு கொலையா ??… நான் நினைத்ததற்கு மேலேயே கில்லாடியாய் இருப்பான் போலிருக்கிறதே !!.
ஒன்றுமே புரியவில்லை ! நான் தயாரித்து வைத்திருந்த Ted Talk க்கு வேலையிருக்காது போல் தோன்றியது !
மறுபடி வேறு கட்டுக்கதையை தயாரிக்க வேண்டியதிருக்கும் !
இல்லையென்றால் என்னையும் மேலே அனுப்பக்கூடியவன்தான் !
” உம்.. சொல்லுங்கள் ……”
இதோ..!! என் கதை… அவனுக்கும் உங்களுக்கும்….!!!!
***
” நரேன் ! இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அதே நாள் ! அதே இடம் ! நானும் , மனைவியாகி மூன்று நாள் ஆன என் ரேகா ! மதுமதி போன இடத்திற்கு போய் விட்டாள் !! ”
” குணா ! அவள் தவறி விழுந்தாளா அல்லது ???..
” என்ன நரேன் ? ஏன் இப்படி கேட்கிறீர்கள் ???..”
” நான் கேட்கவில்லை ! போலீஸ் என்னை குடைந்து எடுத்து விட்டார்கள் ! அதனால் கேட்டேன் !!!..”
” அப்ஸல்யூட்லி…. எனக்கும் அதே கதை தான் ! என் மனைவி ரேகா சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் பெரியவர்கள் நிச்சயித்த திருமணம்….!!!
அவளைக் கொல்ல முகாந்திரம் எதுவும் இல்லை என்று தீர்மானமாக தெரிந்த பின்தான் என்னை விட்டார்கள் !
அவளுடைய நினைவு நாள் என்பதால் அங்கு வந்தேன்!
இனி அவன் பேச தயாரானான் !
” குணா ! ஒரு விதத்தில் உங்களுக்கு நேர்ந்த கொடுமை என்னைவிட பல மடங்கு அதிகமாக தோன்றுகிறது !
ஏனென்றால் நீங்கள் மனைவியுடன் வெறும் மூன்று நாட்கள்தான் வாழ்ந்திருக்கிறீர்கள் !!!!!
ஆனால் உங்களுக்குள் ஒரு நெருக்கம் உருவாவதற்கு முன்பே அவள் போய் விட்டதால் இருவருக்குமான பகிர்தல் அதிகம் இருந்திருக்காது இல்லையா ?
Would you mind some drinks ?? “
” Yes ! Sure ! ‘
அவன் பார் கதவைத் திறந்து கலர் கலராய் திரவங்களை எடுத்து வைத்தான் ! பிரிட்ஜிலிருந்து ஐஸ் கட்டிகளும்…. ! இருவருக்கும் வேண்டி இருந்தது !
இருவருமே பொய் பேச இதெல்லாம் தேவையில்லை !
ஆனால் இவை உள்ளே போனதும் உண்மை வர கண்டிப்பாக அவசியம் !!!!
” நரேன் ! நீங்கள் ரியல் எஸ்டேட் விற்பனை பண்ணுபவர் என்பதைத்தவிர எனக்கு உங்களப் பற்றி அதிகம் தெரியாது ! “
“குணா ! என் மேல் இவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வதற்கு நன்றி ! I’m a spoilt child !
கேட்டதெல்லாம் கிடைத்தது ! அன்பைத் தவிர ! அம்மா ஒரு சுயநலவாதி ! தன் வளர்ச்சியை மட்டுமே பார்க்கத்தெரிந்தவள் !!!!!
அப்பா இலக்கியம் என்ற போர்வையில் வீட்டிற்கு அழைத்து வராத பெண்கள் இல்லை !
இந்த சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு என்ன வேல்யூஸ் இருக்கும் ??? எனக்கு தெரிந்ததெல்லாம் பணம் மட்டும் தான் !
முந்திரி , பிஸ்டாச்சியோ , பதாம் எல்லாம் உள்ளே போனதே தெரியவில்லை !
என்னைப் பற்றி இன்னும் கொஞ்சம்..
” என்னைப் பற்றி ஒரே வரியில் சொல்லி விடலாம் ! நான் ஒரு selfmade , orphan !
புகைப்படம் எடுப்பதுதான் பொழுதுபோக்கு , தொழில் , இப்போது மனைவி எல்லாமே ! “
நரேன் கொஞ்சம் படபடப்பாக இருந்தான் ! ஒரு நிமிஷத்தில் வருவதாய் கூறிப் போனான் !
அறையை நோட்டம் விட்டேன் !
பச்சை மரகதக் குதிரை பாயத் தயாராய் நின்று கொண்டிருந்தது !
பெரிய சட்டத்துக்குள் வெற்றிக் குதிரை பக்கத்தில் கோப்பையுடன் நரேன் ! ரேஸ் பிரியன் !!
நரேன் ஒரு ஆல்பத்துடன் வந்தான் !
” குணா ! நீங்கள் இதை அவசியம் பார்க்க வேண்டும் ! ”
திறந்தவுடனே முதல் பக்கத்தில் அவனுடைய மதுமதி ! இப்போது க்ளோஸப்பில்…..!!!
சத்தியம் பண்ணி சொல்வேன்! நான் பார்த்த பெண் இவளில்லை !
கண்கள் சிறிய பாதாங்கொட்டைகள் போல மின்னியது ! முகத்தில் ஒரு குழந்தைத்தனம் !
அடுத்தடுத்த பக்கங்களில் அவர்களின் அன்னியோன்யம் தெரிந்தது !
“குணா ! என் மதுமதி ஒரு குழந்தை! இருபது வயது குழந்தை!
தேம்பித் தேம்பி அழுதான் !
மூன்று நான்கு பெக் உள்ளே போயிருக்கு மென்று தோன்றுகிறது !
” நான் மலேசியாவில் இரண்டு வருஷம் இருந்தேன்! நானும் சஞ்சையும் ஒரு பிஸினஸ் நிமித்தமாக கதிரேசனை சந்திக்க நேரிட்டது… !
மலேசியாவில் ‘ டாடி கதிர்’ என்றால் தெரியாதவர்களே கிடையாது ! என்னை ரொம்ப பிடித்துவிட்டது !
ஒரே பெண் மதுமதி !
உனக்குத்தான் என்று சொத்துக்களுடன் உயில் எழுதி வைத்துவிட்டு வேலைமுடிந்ததுபோல் மனுக்ஷன் போய்ச்சேர்ந்துவிட்டார் !
மலேசியாவுக்கு பெயர் தெரியாத நரேனாகப் போனவன் திரும்பி வரும்போது மதுமதி + மில்லியனர் !
உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணும் ஆளில்லை நான் ! மதுமதியை குழந்தைபோல பார்த்துக் கொண்டேன் !
அப்புறம் தான் தெரிந்தது அவள் மனதளவில் வளரவேயில்லையென்று !
ஒரு மனநல மருத்துவரிடம் காட்டியபோது மிதமான ஆட்டிசம் பாதிப்பு உள்ளது என்றும் , பழகும் விதத்தில் சில குறைபாடுகள் இருக்கும், , மற்றபடி ஒன்றும் பிரச்சினை இல்லை என்றார் !
டாடி கதிர் என்னை ஏமாற்றி விட்டதாய் நான் நினைக்கவில்லை !
அவள் என் மேல் உயிராயிருந்தாள்! ஆனால் படுக்கையறையில் அந்த பூ முகர்ந்து பார்த்தாலே கசங்கி விடுமே !
மதுமதி – செக்ஸ்… எனக்கு பழகிவிட்டது !
வெளியே வேண்டிய அளவு கிடைத்ததால் நான் அதைப்பற்றி பெரிதாக கவலைப் படவில்லை !
ஆனாலும் குடும்ப வாழ்க்கையில் தோழமை மிகவும் முக்கியம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது !
அப்போது வந்தவள்தான் நேத்ரா ! பெயருக்கேற்ப முகமெல்லாம் கண்கள் ! ”
நரேன் இப்போது குழற ஆரம்பித்துவிட்டான் !
” மது ! மது ! என்று புலம்பினான் !
கீழே போய் கிச்சனில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தேன் !
ஒரு வயசானவர் ஓடி வந்தார் !
‘ கொஞ்சம் சாலட் , சப்பாத்தி , ஸப்ஜி , தயிர் சாதம் கொண்டு வர முடியுமா ? ‘
‘ அரை மணியில் ரெடி தம்பி !’ என்றார்!
மேலே போனபோதும் ‘ மது ! நானும் வரேன் ! ‘ என்று புலம்பிக் கொண்டிருந்தான் !
அவனைத் தூக்கி நிறுத்தி வாஷ் ரூமுக்கு அனுப்பினேன் !
நரேன் சிறிது ஃப்ரஷ் ஆகி வந்தான் !
மறுபடி ஒரு ரவுண்டுக்குத் தயாரானவனைத் தடுத்தேன் !
‘ப்ளீஸ் குணா ! ஒரே ஒரு பெக்…!!’
கெஞ்சினான் !
” நேத்ரா என் நிறுவனத்தில் ஆர்க்கிடெக்டாக சேர்ந்த அந்த நிமிஷமே என் மனதில் சித்திரம் வரைந்து விட்டாள் !
வளர்ந்த மதுமதி ! எல்லாம் புரிந்த மதுமதி…
நான்கு மாதத்தில் கணவன் மனைவியாகவே மாறிவிட்டோம் !
மதுமதிக்குத் தெரிந்து விட்டது ! என் அறையைப் பூட்டி சாவியை வைத்துக் கொண்டாள் ! அழுதாள் !
குழந்தைதானே! விளையாட்டு காட்டி சமாதானம் செய்து விட்டேன் !
இவளை விட்டு வைத்தால் ஆபத்து என்று புரிந்தது ! சொத்தெல்லாம் ஏற்கனவே என் பெயருக்கு மாற்றிவிட்டார் டாடி….!!!!
” குணா ! இனிமேல் நான் சொல்லப் போவது உங்களை எப்படி பாதிக்கும் என்று தெரியவில்லை !
துப்பாக்கி ஏதாவது வைத்திருந்தால் என்னை …என்னை …சுட்டுவிடுங்கள் !
நானும் நேத்ராவும் திட்டமிட்டு அந்தக் குழந்தையை ……
என்னுடைய பஞ்சாரா ஹில்ஸ் பண்ணை வீட்டில் புதைத்து விட்டோம் !
அன்று இரவு! நேத்ரா வெளியில் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்ததை தற்செயலாய் கேட்டேன் !
என்னை கொன்று விட்டு பணத்துடன் ஓட …..சதிகாரி ….!!!!!!!
நான் முந்திக்கொண்டேன் !
கொடைக்கானலில் தேனிலவு…!
அமைதிப் பள்ளத்தாக்கில் முதலிரவு ! அவளுக்கு மட்டும் ! “
நரேன் அடுத்து கேட்ட கேள்வி..????
குணா ! உங்கள் மனைவி தவறி தானே விழுந்தாள்? .. அல்லது…???”
என்னைப் பிடித்து உலுக்கனான் !
‘ நரேன் ! கூல் ப்ளீஸ்… ! ‘
” என்னைத் தேடி அவள் காதலன் நிச்சயம் வருவான் ! அதற்கு முன்னால் நானே போலீஸில் சரண்டர் ஆகப் போகிறேன் !
நேத்ராவைக் கொன்றதற்காக இல்லை ! என் குழந்தை மதுமதியைக் கொன்றதற்காக !!!”
எல்லா பாரத்தையும் என் தலையில் இறக்கிவிட்டான் நரேன் !
“குணா ! நான் இப்போது க்ளீன் ஸ்லேட் !!
இரண்டு கொலைகளுக்கும் ப்ரூஃப் இல்லை ! என்ன சொல்கிறீர்கள் ? நான் சரணடைவதுதானே சரி ?”
***
நான் மனதில் நினைத்துக் கொண்டேன் !
க்ளீன் சிலேட்டா ???
நீ செய்த குற்றம் என் கேமராவில் !
இதுவே இரண்டு கொலைகளுக்கும் தண்டனை வாங்கிக் கொடுத்து விடும் !
ஆனால் நான் போலீசுக்கு போகமாட்டேன் ! ஏன் தெரியுமா ? நீயும் நிறையவே ஏமாந்திருக்கிறாய் !
ஆனாலும் மதுமதியைக் கொன்றதற்காக மனப்பூர்வம் வருந்துகிறாய் !
நான் இந்த ஆதாரத்தை அழித்துவிடப் போகிறேன் !
***
“நரேன் ! சரண்டர் ஆவதும் ஆகாததும் உன்னிஷ்டம் ! என்னால் உனக்கு எந்த ஆபத்தும் வராது !
எனக்கு ஒரு உண்மையான நண்பன் கிடைத்த மகிழ்ச்சியில் விடைபெறுகிறேன் ! பை…..!!!! ”
***
என் ரேகாவின் நினைவாக , அடுத்த கொடை விசிட்டிங்போது சிம் கார்டை அமைதிப் பள்ளத்தாக்கிலிருந்து தூக்கி எறிய வேண்டும் !!! ! !!!
அதுவே எல்லா குற்றங்களுக்கும் தீர்வாக இருக்கட்டும்…!!!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!?