ஒரு கள்வன் கைதாகிறான்!
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 2, 2025
பார்வையிட்டோர்: 2,338
எப்பேர்ப்பட்ட கைதேர்ந்த கள்வனானாலும் அவனையும் அறியாமல் எதாவது ஒரு தடயத்தை விட்டுப் போய்விடுவான். அந்த வீட்டிலும் அப்படித்தான்,
கேசவமூர்த்தி வெளியூர் போயிருப்பதைக் கேள்விப்பட்ட கேடி ரங்கன் அவன் வீட்டுக்குள் திருட நுழைந்தான் அதிகாலை. மூன்று மணிக்குள் திருடிவிட்டுக் கம்பி நீட்டிவிடுவதெனத் தீர்மானித்திருந்த அவனுக்குத் திருட வந்த இடத்தில் தேள் கொட்டினாற் போலிருந்தது கேசவ மூர்த்தி நள்ளிரவே திரும்ப வந்துவிட்டது!.
மூர்த்தி வந்ததும் வீட்டு நிலவரம் தான் விட்டுப் போனா மாதிரி இல்லை என்பதைப் புரிந்து கொண்டவன் உள்ளே யாரோ நுழைந்திருக்கிறார்கள் என்பதை ஊகித்துக் கொண்டு, திருடனா திருடர்களா?!? உள்ளேதான் இருக்கிறார்களா?! வெளியே போய்விட்டனரா!? பீரோ வைத்த ரூம் முழுதும் தேடி அயர்ந்தான்.
அவன் நண்பன் எஸ்.ஐ ராமனுக்கு கால் பண்ணி வரவழைத்தான். ராமன் கெட்டிக் காரன். கள்வன் உள்ளேதான் இருக்கிறான் என்பதை அறிய எல்லா அறைகளிலும் தேடிவிட்டு, அவன் உள்ளேதான் இருக்கிறான் என்றான் உறுதியாக!. மூர்த்தி பயத்தில் படபடக்க.. ராமன் அவனிடம் மென்மையான குரலில்…
‘பயப்படாதே! வந்ததும் நீ எங்காவது போனாயா? ஐ மீன்… இந்த ஹாலைவிட்டு வேறு ரூமுக்கு?!’ எதாவது சப்தம் கிப்தம் கேட்டதா? என்று கேட்டான்.
‘அப்படி எதுவுமில்லை! இப்போதுதான் வந்தேன்!. இங்கே இருந்தபடிதான் உன்னை அழைத்தேன்!’ என்றான் மூர்த்தி ராமனிடம்.
ரெஸ்ட் ரூமில் பாத் டப்பில் பதுங்கியிருந்த கள்வனை சட்டையைப் பிடித்து இழுத்து வந்து பின்புறம் கையை கயிறால் தப்பிக்க முடியாதபடி கட்டிவிட்டு,
‘வெல்! திருடன் விட்டுப் போன தடயம் எது தெரியுமா?’ என்றான்.
கேசவமூர்த்தி ராமனைப் பார்க்க.. ராமன் சொன்னான்.
‘நீ வந்துட்டே இனி, தப்பிக்க முடியாதுன்னதும். பயத்தில் ரெஸ்ட் ரூமில் யூரின் போயிருக்கிறான். குளோசெட்டை ஃபிளஷ் பண்ணினால் சப்தம் வந்துவிடும் என்று சந்தேகித்து, அப்படியே விட்டுவிட்டு உள்ளேயே பாத் டப்பில் பதுங்கிக் கொண்டான்.. பிளஷ் செய்யாததால் யூரின் நிறம் குளோசட்டில் தங்கியிருந்த தண்ணீரில் மஞ்சள் கலந்து மிதந்ததால். இப்போதுதன் யூரின் போயிருக்கிறான் என்பதையும் பக்கத்தில்தான் இருப்பான் என்றும் யூகித்து பாத்ரூமிலேயே தேடினேன். கிடைத்தான்’ என்றான்.