ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
கதையாசிரியர்: வளர்கவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2026
பார்வையிட்டோர்: 131
(பழைய கதை புதிய பாடல்)

படிப்பு அறிவு அற்றவர்
பாவம் ஏழைக் கிழவராம்
துடிப்பு மிக்க பிள்ளைகள்
தோள்வ ளர்ந்த நான்குபேர்
நான்கு பேருக் கிடையிலே
நாளும் தோன்றும் சண்டையாம்
ஓற்று மையின் வலிமையை
உணரவில்லை அவர்களே!
கிழவர் மனது நொந்துபோய்
பழகச் சொன்னார் அன்புடன்
என்ற போதும் நால்வரும்
ஏற்றுக் கொள்ள வில்லையாம்!
நாலு ஏக்கர் நிலத்திற்காய்
நாளும் அவர்க்குள் சண்டையாம்
வாழும் அந்த குடும்பமோ
வதங்கி வாடி நின்றது!
ஒன்று பட்டு வாழ்ந்திடும்
உபாயமொன்றைக் கிழவரும்
அன்று அந்த நால்வர்க்கும்
அருமை யாக விளக்கினார்!
விறகுக் கட்டு ஒன்றினை
வீட்டு முன்பு போட்டவர்
உருவிடாமல் மகன்களை
ஒடிக்கச் சொல்லிக் கேட்டதும்
மூத்த மகன் தொடங்கியே
ஒத்தை ஒத்தை பிள்ளையாய்
ஒன்றா யிருந்த கட்டினை
ஒடிக்க முடிய வில்லையாம்!
கட்டு விறகு தம்மையே
ஒன்று ஒன்றாய் உருவிப்பின்
புட்டு ஒடிக்கச் சொல்லிட
பொலபொலனு ஒடிந்ததாம்!
“நீங்கள் நான்கு பேர்களும்
கட்டி வைத்த விறகுபோல்
ஓங்கி நின்றால் ஒன்றென
உங்களுக்குத் தாழ்விலை..!
அன்றி தனித்தனி யாகநீர்
அவனி தன்னில் இருந்திடல்
அழித்தல் எளிது உங்களை!”
அறிந்து கொள்வீர் என்றதால்
படித்த றியாக மனிதர்தம்
பிள்ளை கட்கு எளிமையாய்
பாடம் சொன்ன பாங்கினை
போற்றி நெஞ்சிலேற்றுவோம்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இந்திரா
நீர்வை பொன்னையன்
September 18, 2026
இடைவேளை
எஸ்.சங்கீதா
September 18, 2026
நிழலாடும் நினைவுகள்
விமலன்
September 18, 2026
