ஒட்டுண்ணிகள்
கதையாசிரியர்: சொ.பிரபாகரன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 8, 2012
பார்வையிட்டோர்: 8,941
வணிகவரி அலுவலகத்தில் இருந்து அமீனா வந்திருந்தான். “உங்க கம்பெனி ரெண்டு லட்சம் சொச்சம் வரிபாக்கி கட்ட வேண்டியிருக்குது,” என்று சொன்னான்.
அலட்சியமாக சொன்னவன், பவுச்சை உடைச்சுப் “பாக்குத்தூளை” இடது கைப் பாதத்தில் போட்டு, வலது பெருவிரலை வைத்து நன்றாக நசியம் பண்ணி, தட்டி வாயில் போட்டுக் கொண்டான். பின்னர் ஒட்டியிருந்த பாக்குத்துகள்கள் முற்றிலும் அகலும் வண்ணம், இரண்டு கைகளையும் நன்றாகத் தட்டி விட்டுக் கொண்டான்.
“அப்படியா? எந்த வருசத்து வரி?” நான் ஆர்வமின்றி கேட்க, அமீனா ஆபிஸை ஒரு சுற்று சுற்றிப் பார்வை இட்டான். நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல், “ஆபிஸிலே நீங்க ஒருத்தர்தான் ஸ்டாபா?” என்று கேட்டான்.
“ஆமாம்.. ஆனா உதவிக்கு ஒரு அசிஸ்டெண்டை, கான்டிராக்டில் வச்சிருக்கோம்,” என்று நான் சொன்னதைப் பெரிதாய் அவன் சட்டைச் செய்யவில்லை. அடுத்த கேள்வியைத் தொடுத்தான். “இந்த ஆபிஸிலே உள்ள பிர்ட்ஷ், ஏர்கூலர், ஹீட்டர், இந்த மேஜை, ஸ்டோர்வெல் எல்லாம் கம்பெனியுடையதுதானா?”
“ஆமாம்,” என்று எரிச்சலாய் சொன்ன நான், “நான் கேட்டதற்குப் பதிலைச் சொல்லுங்க. எந்த வருசத்து வரிப்பாக்கி?” என்று மறுபடியும் கேட்டேன்.
“1998-99ம் வருசத்துக்கானது.. இன்னும் ரெண்டு நாளில் கட்டலைன்னா, நாங்க உங்க ஆபிஸிக்கு ‘சீல்’ வைக்க வேண்டியிருக்கும். பிறகு பத்து நாளைக்குள் இங்கே ஆபிஸிலுள்ள சாமான்களை ஏலத்துலே விட்டுடுவோம்.” காவிப்பல் தெரிய இளித்தான். உன்னை இந்த இக்கட்டில் இருந்த மீட்க, எவ்வளவு பணம் தரத் தயாரா இருக்கே என்பதுதான், இந்த இளிப்புக்கு அடையாளம் என்பதை அனுபவசாலிகள், எளிதில் புரிந்து கொள்வார்கள்.
அவர் கொடுத்த டிரேட் வரி நோட்டிஸைக் கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டேன். லக்னோவிற்கு வந்து இந்த ஆபிஸை ஒப்புக் கொண்டதில் இருந்து, இப்படி ஏதாவது பிரசினை, ஒன்று விட்டால் இன்னொன்று முளைத்துக் கொண்டிருக்கிறது.
அமீனாக்கள் பொதுவாக நேரடியாக விசயத்துக்கு வர மாட்டார்கள். “சாமி போட்டோவே ஆபிஸிலே இல்லையே? நீங்க நாஸ்திகரா?” என்றான்.
“ஏன் சாமி போட்டோ வச்சிருந்தா, வரி கட்டாட்டாலும், ‘சீல்’ வைக்காமல் விட்டு விடுவீங்களா?’
அவர் சிரித்ததில் சாறு முகத்தில் தெளித்தது போலிருந்தது. “அப்படியில்லை, பையா ஸாப்! நீங்க வச்சிருக்கிற சாமிப் படத்தை வச்சு, நீங்க என்ன கோத்திரமுனு கண்டு பிடிச்சுடுவேன்.”
”நான் பிராமணன் இல்லை. ஷத்திரியனும் இல்லை. அதற்காக என்னை வைசிக் என்று நினைத்தால், தப்பாப் போகும். நான் மெளரியா கெளதமும் இல்லை. என் பேர் பிரபாகரன். அதுக்காக என்னை எல்.டி.டி.யின் ஆதரவாளர் என்று நினைத்துக் கொண்டால், அதுவும் தவறு. மாறாக நான் தமிழ்பற்று கொண்ட எல்.டி.டி.யின் எதிர்ப்பாளர். என் பேரை வச்சு, என் கோத்திரம், குலம், சாதி எதையும் கண்டுப்பிடிக்க முடியாது.. எல்லாம் பெரியார் தமிழனுக்குக் கொடுத்த கொடை..”
எனது இந்த பதிலால், பிரசினை வந்தால் நேரடியாகப் பதில் சொல்லாமல், புரியாத மாதிரி குழப்பி, பிரசினையில் இருந்த தப்பிக்க முயலும் ஆசாமி என, என்னை யாரும் எடை போட்டு விட வேண்டாம். எனக்கும் சவால் விடும் வேலைகளை எதிர் கொண்டு சாதனைப் புரிவது, பிடிக்கதான் செய்யும். ஆனால் இந்தச் ‘சரிகட்டும் வேலை’களைச் சரியாகச் செய்வதை, நான் சாதனையாகக் கருதுவதில்லை.
“நீங்க ஏன் முன்னுக்கு வரலை? உங்களை மட்டும் ஏன் லக்னோ டிரான்ஸ்பர் செஞ்சாங்க?” என என் பத்னி என் மீது குற்றம் சாட்டினாள். குழந்தைகள் கூட, என்னை ‘உர்’ரென முறைத்தார்கள்.
‘சரிகட்ட தெரியாதவன் சரியான முட்டாள்’ என்பது அவர்கள் அபிப்ராயம். சொல்லப் போனால், அதுதான் பொது அபிப்ராயம். இந்த மாதிரியான அபிப்ராயம், குடும்பத்துக்குள் வளர்வது, வருங்கால இந்தியாவிற்கு நல்லது இல்லைதான்.
யு.டி.ஐ. ஊழலில் ராமசுப்பு மாட்டிக் கொண்ட போது, தாங்கள் சுத்தவான் போல் கைக்கொட்டிச் சிரித்தது பல இந்திய குடும்பங்கள். டிட்கோ வழக்கில் தமிழக அரசியல்வாதி மாட்டிக் கொண்ட போது, தான் சுத்தவான் போல் புளங்காகிதம் அடைந்தது பல தமிழக குடும்பங்கள். இதோடு விட்டால் பரவாயில்லை! இன்னும் சில குடும்பங்கள் பல படிகள் முன்னேறி, இப்படி ஊழல் புரிந்தவர்களை, பொதுமக்கள் பார்வையில் பொதுவிடத்தில் தூக்கில் போட வேண்டும் என பரிந்துரைத்தது.
இப்படியெல்லாம் பேசிய பல குடும்பங்களில் ஒன்றான என் குடும்பம்தான், ராமசுப்புக்கு உள்ள, அந்தத் தமிழக அரசியல்வாதிக்கு உள்ள திறமையில் 1சதவீதம் கூட எனக்கு இல்லை என்று பகடி செய்தது. “ஏதோ கைச்சுத்தமாய் இருக்கப் போய் நான் இன்னும் தப்பித்துக் கொண்டிருக்கேன்,” என்று நான் ஏகப் பெருமூச்சு விட்டதும், என் பத்னி சீறினாள். “யாரையும், எப்ப வேணாலும், ஏதாவது காரணம் சொல்லி குற்றம் சுமத்தி, தண்டிக்கிறது ஒண்ணும் இப்ப உள்ள சூழ்நிலையில் பெரிய கஷ்டமான காரியம் இல்லை.”
“இதனாலே என்னச் சொல்ல வருறே?”
“நீங்க சுத்தமாய் இருக்கிறதுனாலே உங்களை வச்சுகிட்டு, உங்க கம்பெனியிலே அழறாங்கனு தப்பால்லாம் நெனைச்சுட்டு இருக்காதீங்க.. உங்க கம்பெனிக்கும் உங்க அழுகுணித்தனம் தெரியும். முன்னேயும் போக மாட்டீங்க.. பின்னேயும் வர விட மாட்டீங்க. உங்களை லக்னோ டிரான்ஸ்பர் பண்ணினாலே போதும், நீங்க சரியாயிடுவீங்கனு நம்பிதான், உங்களை இங்கே மூட்டைக் கட்டி, அனுப்பி இருக்காங்க. ராமசுப்பு மாதிரியோ, இல்லை நமது தமிழக அரசியல்வாதி மாதிரியோ, பெரிசா பண்றதுக்கு, அவங்களில் நீங்க ஒண்ணும் 1% கூட, புத்திசாலியில்லை..”
என் ‘சுயம்’ மறுபடியும் அடிபட்டு விழுந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் ஒப்பிட்டு, அதிலும் நான் தேறவில்லை என்பது, சம்மட்டி அடிதான்.
விவாகரத்து வாங்கிட்டு, வானபிரஸ்தனாய் ஆகிடலாம்னு பலமுறை யோசித்து இருக்கிறேன். ஒருமுறை ஆத்திரத்தில், “டைவர்ஸ் பண்ணிடுவேண்டி!” என்று கூட கத்தி இருக்கேன்.
“அதுக்குக் கூட, துணிச்சல் வேண்டும். உங்ககிட்டே இல்லலாததை பற்றி எல்லாம் பேசாதீங்க..” என்று என் மிரட்டலைத் தூசி மாதிரி தட்டி விட்டாள் என் பத்னி.
ஆக பல மாத