ஊக்கமது கைவிடேல்
கதையாசிரியர்: சுந்தர சண்முகனார்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: July 18, 2026
பார்வையிட்டோர்: 103
(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊக்கமது – முயற்சியை, கைவிடேல் – நீ கைவிடாதே.
ஓர் உபாத்தியாயரிடத்தில் மணி, அழகன் என்று இரண்டு பிள்ளைகள் படித்துக்கொண்டு இருந்தார்கள். மணி ஊக்கம் உடையவன். அழகன் ஆள் அழகனே தவிர காரியத்தில் சோம்பேறி.
உபாத்தியாயரிடத்தில் ஓர் அழகிய புத்தகம் இருந்தது. இரண்டு பிள்ளைகளும் பார்த்து ஆசைப்பட்டார்கள். சொந்தமாக ஒரு கதை எழுதிக்கொண்டு வருபவனுக்கு இப்புத்தகத்தைப் பரிசாகக் கொடுப்பேன் என்று உபாத்தியாயர் தெரிவித்தார். இருவரும் வீட்டிற்குச் சென்று கதையெழுத உட்கார்ந்தார்கள்.
அழகன் எழுதி எழுதிப் பார்த்தான். கதை அமைய வில்லை. இந்தக் கதையும் கெட்டது, பரிசும் கெட்டது என்று வெறுத்து எழுந்து விட்டான். மணிக்கும் கதை அமையவில்லை. சோர்ந்து பேனாவைக் கீழே வைத்தான்.
அப்போது தன் எதிரில், ஓர் எறும்பு ஒரு நொய்யரிசியை இழுத்துக்கொண்டு போவதைக் கண்டான். விளையாட்டாக எறும்பு வேறாகவும் அரிசி வேறாகவும் பிரித்தான். எறும்பு ஊக்கத்தைக் கைவிடவில்லை. மறுபடியும் அரிசியை இழுத்தது.
பார்த்தான் மணி. ஆகா! நாம் பிரித்தும் எறும்பு ஊக்கத்தைக் கைவிட வில்லையே! இந்த எறும்புக்குக் குறைந்தவன நாம்? கதையை எழுதியே தீர வேண்டும் என்று எண்ணினான்.
கதை அழகாக அமைந்தது. உபாத்தியாயரிடம் காட்டினான். புத்தகத்தைப் பரிசாகப் பெற்றான். ஊக்கம் கெட்ட அழகன் கண்டு வெட்கப் பட்டான். (ஆகையால்)
ஊக்கத்தைக் கைவிடலாகாது.
எழுதியவர்: மயிலம் தமிழ்க்கல்லூரியில் விரிவுரையாளரா யிருந்த வித்துவான் சுந்தர சண்முகனார்.
– ஆத்திசூடி அமிழ்தம், குழந்தைக் கதை மலர், முதல் பதிப்பு: 30-8-1948, பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி.
![]() |
பேராசிரியர் சுந்தர சண்முகனார் (ஜூலை 13, 1922 – அக்டோபர் 30, 1997) புதுச்சேரியில் வாழ்ந்து மறைந்த ஒரு மிகச்சிறந்த தமிழ்த்தேசிய அறிஞர், ஆராய்ச்சியாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தமிழில் முறையியல் (Methodology) அடிப்படையில் புதிய ஆய்வுத் துறைகளை உருவாக்கிய முன்னோடியாக அவர் கருதப்படுகிறார். “சுந்தர சண்முகனார் புதுவையில் வாழ்ந்து மறைந்த தமிழ்நாட்டுத் தமிழறிஞர்; கவிஞர்; எழுத்தாளர்; தமிழில் புதிய துறைகளில் ஆய்வினை மேற்கொண்ட அறிஞர்.”, என தமிழ்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அறம் செய விரும்பு
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஆறுவது சினம்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
ஈவது விலக்கேல்
சுந்தர சண்முகனார்
July 18, 2026
