உயிருள்ள கற்கள்
கதையாசிரியர்: ஆர்.எஸ்.ஜேக்கப்
கதைத்தொகுப்பு:
ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: December 13, 2025
பார்வையிட்டோர்: 90
(1962ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
லண்டன் பட்டணத்தில் எழுப்புதல் கூட்டம் ஒன்று நடந்தது. பற்பல சபைப் பிரிவைச் சார்ந்த பாதிரிமார் வந்திருந்தனர்.
மக்கள் ஆனந்த ஆர்ப்பரிப்புடன் ஓங்காரதொனியில் பாடுகிறர்கள். கெம்பீர சத்தத்தில் பிரசங்கி யாரும் பரலசமடைகினர். மிகுந்த உரத்த தொனியல் பிரசங்கிக்கிறார்.
கூட்டம் முடிந்தது.
அச்சபைக்குருவானவரிடம் வேறு சபைப்பிரிவைச் சார்ந்த ஒரு குருவானவர் கேட்டார்.
“இவ்வளவு சத்தம் ஏனையா? எருசலேம் தேவாலயம் கட்டப்படும்போது ஒரு சிறு சத்தம் கூடக் கேட்க வில்லையே” என்றார்.
“நீங்கள் சொல்வது சரியே, நாங்கள் இப்பொழுது ஆலயம் கட்டவில்லையே; ஆலயத்துக்கு வேண்டிய உயிருள்ள கற்களை வெடிமருந்து வைத்துப் பெயர்க்கத் தானே செய்கிறோம்” என்று சுடச்சுடப் பதில் கொடுத்தாராம் அச்சபைப் பாதிரியார்.
நாம் ஆண்டவரின் உயிருள்ள கற்கள்தானா?
“உம்முடைய வீட்டைக் குறித்து உண்டான பக்தி வைராக்கியம் என்னைப் பட்சித்தது”. [சங், 69:9]
“நீங்கள் உயிருள்ள கற்களாக ஆண்டவரிடம் வந்து, ஆன்மீக வீடாக அமைக்கப்படுவீர்களாக”. [1 பேதுரு 2:5]
– குருமாணிக்கம் உவமைக் கதைகள் 101, முதற்பதிப்பு: ஏப்ரல் 1962, ஜெயா நிலையம், பாளையங்கோட்டை.
![]() |
பள்ளி ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர், சமூகசேவகர் எனப் பல திறக்குகளில் முத்திரை பதித்தவர் ஆர்.எஸ். ஜேக்கப். தூத்துக்குடியை அடுத்த ராஜாவின்கோவில் கிராமத்தில், நவம்பர் 19, 1926 அன்று, சந்தோஷம் நாடார், பொன்னம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 11 பேர். தந்தை விவசாயி, பருத்தி வணிகமும் செய்தார். வணிகத்தின் பொருட்டு ஒவ்வொரு முறை வெளியூர் சென்று திரும்பும்போதும் தின்பண்டங்களோடு கூடவே நல்ல நூல்களையும் வாங்கிவருவார். தன் குழந்தைகளை…மேலும் படிக்க... |
