உயர்ந்த உள்ளம் – ஒரு பக்க கதை
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,460
“இன்னைக்கு நாம குடும்பத்தோட வெளிய போறதா இருக்கோம். ராத்திரிதான் வருவோம். ஆனாலும், காலங்கார்த்தால எழுந்து நீ சமைக்க ஆரம்பிச்சுட்டே. வெளியே சாப்பிட்டுக்கலாமே, ஏம்மா கஷ்டப்படுறே?” – செல்ல மகள் சிணுங்கலோடு கேட்டாள்
வெளியேதான் சாப்பிடப் போறோம்!
அப்புறம் என்ன பண்றே|?
வேலை இருக்குடி…நீ கிளம்பு! – துரத்திவிட்டாள் அம்மா.
சுஜி, அன்று முழுக்க குழம்பியபடியே வந்தாள். வீடு திரும்பியவுடன் பார்த்தால், சமையல் மேடையில் சமைத்த பாத்திரங்கள் கழுவிக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன
என்னம்மா, சமையல் செய்திருக்கே…ஆனா, எடுத்துட்டு வரல! ஏன் இப்படி?” – கேலியாகக் கேட்ட மகளை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
”வேலைக்காரிக்காத்தான் சமைச்சேன். பாவம் ரெண்டு வீட்டு வேலையை முடிச்சுட்டு நம்ம வீட்டுக்கு எப்பவும் பசியோட வருவா. நாம ஒரு நாள் வெளியே போறதுக்காக அவளை பட்டினி போட வேண்டாம்னு தான் சமைச்சு வெச்சுட்டு, சாவியையும் பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு வந்தேன், பழகிட்டா….திருட்டு, புரட்டு கிடையது. சாப்பிட்டு வீட்டு வேலையும் முடுச்சுடுவா. நமக்காக உழைக்கிறவளுக்கு இது செய்யக் கூடாதா?…சொல்லு?
இப்போது அம்மாவைக் கட்டிக்கொள்ள தோன்றியது
– பத்மா சபேசன் (ஜூன் 2014)