இருப்பதும், பறப்பதும்
கதையாசிரியர்: வளர்கவி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 14, 2026
பார்வையிட்டோர்: 2,846
சாதிக்கத்துடித்தவன் வாழ்க்கை வெறுத்துப் போய் உட்கார்ந்திருந்தான் உமாகாந்த். எல்லாம் அவனுக்கு எதிராகவே நடக்க, ‘ஏண்டா உயிர் வாழறோம்!’னு நொந்து கொள்ளாத நாளில்லை.
அன்றைக்கும் அப்படித்தான் ஒடிந்துபோய் உட்கார்ந்திருந்தான். காலடியில் குழந்தை கைலாஷ் விளையாடிக் கொண்டிருந்தான். ஐந்தோ, ஆறோ படிக்கலாம். அவன் கையில் சில வண்ண பலூன்கள்.
ஊதுவதும், ஊதியபிறகு வாயை இறுக்க மூடி, ‘சடக்கென’ விடுவதுமான ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தான். பலூன் வாயை இறுக்கிப் பிடித்திருக்கும் விரல்களை விட்டால், பலூன் சரக்கென சீறிப் பாய்ந்தது. அது பாய்வதைப் பார்த்து, அவன் பரவசப்பட்டுக் கொண்டிருக்க பளிச்சென ஒரு மின்னல் உமாகாந்தின் மனசுக்குள்!…
“மனசுக்குள் இறுக்கத்தை, இறுக்கி வைத்திருக்கும் வரைதானே விர்னு கிளம்ப முடியலை இறுக்கைத்தை இறக்கிவிட்டால், எகிறிப்பயாலாமே பலூன் மாதிரி?!” தோன்ற துள்ளிக் குழந்தை கன்னத்தை மாறி மாறி முத்தமிட்டான். குழந்தை புரியாமல் விழித்தான்.
‘என்னப்பா? என்னாச்சு உங்களுக்கு’ன்னு கேட்டான் புரியாமல்.
“பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே! னு புரிய வச்சுட்டடா குழந்தை நீ!” ன்னான்.
குழந்தைக்கு மட்டும் இன்னும் புரியவில்லை.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |
