இந்திரா
கதையாசிரியர்: நீர்வை பொன்னையன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 18, 2026
பார்வையிட்டோர்: 119
(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சத்தியாக்கிரகம் தொடங்கி பதினைந்து நாட்கள்.
சத்தியாக்கிரகிகள் கலக்டர் அலுவல கத்தின் முன் இரா பகலாய் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
கலக்டர் எதுவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
உற்றார் உறவுகள் உடைமைகள், தொழில்கள் சகலத்தையும் இழந்து உயிர் தப்பினால் போதுமென்று பல்லாயிரக்கணக்கான வங்காளிகள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதி களாக மேற்கு வங்காளத் திற்குள் தஞ்சமடைந்துள்ளனர்.
தஞ்சமடைந்துள்ள மக்களை ஆத ரித்து, அனுசரணை வழங்க வேண்டி யது அரசாங்கத்தின் பொறுப்பு, கடமை. ஆனால் மேற்கு வங்க அரசு பார்த்தும் பாராமல் இருக்கிறது. வெகுஜன அமைப்புக்கள் தஞ்சமடைந்த தங்கள் உறவுகளை அணைத்து உதவ முன்வந்துள்ளன. மேற்குவங்க ஹுகிளி மாவட்டத்தில் சரம்பூர் என்ற இடத்திலுள்ள ஒரு பாடசாலையில் அகதிகளுக்கான ஒரு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
சரம்பூர் அகதிமுகாமில் ஆயிரத்து முன்நுாறு மக்கள் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மாணவர் சங்க சம்மேளனம் இந்த முகாமை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.
கல்கத்தாவில் பல்வேறு இடங்களில் பல அகதி முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன.
தொழிற் சங்கங்கள், மாதர் அமைப்புகள், வாலிப மாணவ அமைப்புகள் அகதி முகாம்களை நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளன.
சரம்பூர் அகதிமுகாமை நிர்வகிக்கும் பொறுப்பு இந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திரா சரம்பூர் மாணவ சங்க சம்மேளனத்தின் செயலாளர்.
சரம்பூர் அகதிமுகாமிலுள்ள மக்களுக்கு தேவையான உணவு,உடை, மருந்துவகை போன்றவற்றை இந்திராவின் தலைமையிலுள்ள குழு பொதுமக்களிடமிருந்து சேகரித்து, விநியோகித்து வருகின்றது.
இந்திரா சரம்பூர் கல்லுாரிக் கலைப்பட்டதாரிப் படிப்பின் மூன்றாம் ஆண்டு மாணவி. போர்க்குணம்மிக்க இந்திரா பல போராட்டங்களை நடத்தி கல்லுாரி மாணவர்களுக்குப் பல உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளாள்.
இந்திரா இந்திய மக்கள் கலாச்சார மன்றத்தின் ஹுகிளி மாவட்ட கிளைத்தலைவி. புரட்சிப் பாடல்களை உணர்ச்சி வேகத்துடன் பாடி மக்கள் அபிமானத்தைப் பெற்றுள்ளவர் இந்திரா.
ஹுகிளி மாவட்ட கலக்டர் ராச்பிஹாரி போசின் தங்கை இந்திரா. அவளது குடும்பத்தில் அண்ணன் போஸ், அவளது தாயார் சுமித்திரா மூவர் மட்டும்தான். ஹுகிளி நதியின் சரம்பூர் இறங்குதுறையின் அருகில்தான் இந்திராவின் வீடு.
தினசரி காலை தனது வீட்டு மேல்மாடிச் சாளரத்தில் நின்று கிழக்கிலிருந்து மேற்குப்பக்கமாய் வருகின்ற எமது படகை ஆவலுடன் எதிர்பார்த்து நிற்பாள் இந்திரா. ஓன்பது மணியளவில் எமது படகு கரை தட்டியதும் இந்திரா ஓடோடி வருவாள். எம்முடன் அவள் இணைந்து நாம் எல்லோரும் கல்லுாரிக்குச் செல்வோம். மாலையில் படகு இறங்குதுறைக்கு வந்து எம்மை வழியனுப்பிவிட்டுத்தான் அவள் தன் வீட்டிற்குச் செல்வாள்.
ஆகதிகள் தாங்கள் தங்குவதற்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் சிறுதுண்டு நிலம் கேட்டு கலக்டரிடம் வேண்டுகோள் விடுத்தனர். கலக்டர் அகதிகளுக்கு நிலம் வழங்க எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருகின்றார்.
ஹுகிளி மாவட்ட செயலாளர் இந்திராவும் அகதிகள் முகாமின் நிர்வாகிகள் இருவரும் கலக்டரை சந்திக்கின்றனர். மூவரும் நிலம் கேட்டு பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஹுகிளி நதிக்கரையில் சரம்பூர் பிரதேசத்தில் போதிய நிலமுள்ளது. அதில் அகதிகள் தங்களுக்கு வீடுகள் கடடிக்கொள்ள ஒரு பகுதி நிலத்தைக் கேட்கின்றனர். இந்த நிலப்பரப்பு மாடுகளுக்கு மேச்சல்நிலம். ஒரு சிறுதுண்டு கொடுப்பதற்குகூட மாகாண அரசாங்கத்தின் அனுமதி வேண்டும். இதுசம்பந்தமாக உடனடியாக எதுவும் செய்யமுடியாது என்று தட்டிக் கழிக்கின்றார் கலக்டர்.
அகதிகள் வேறுவழியின்றி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதிக்கின்றனர். இச்சத்தியாக்கிரகப் போராட்டத்திற்கு இந்திரா தலைமையிலான மாணவர் குழு அனுசரணை. பதினைந்து நாட்களாகப் போராட்டம் நீடிக்கிறது. எதுவித பலனுமில்லை.
சத்தியாக்கிரகப் போராட்டம் உண்ணாவிரதப் போராட்டமாகப் பரிணமிக் கிறது. உண்ணாவிரதப் போராட்டம் ஐந்தாவது நாளை எட்டிவிட்டது. மூன்று போராளிகள் மயக்கமடைகின்றனர். இந்திரா போராட்டத்தை மாற்றுவழியில் முன்னெடுக்க முடிவெடுக்கின்றாள்.
சரம்பூர் பிரதேசத்திலுள்ள மாணவர்கள், வாலிபர்கள், தொழிலாளர், பொதுமக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தீவிர வெகுஜனப் போராட்டமாக மாற்றுவதற்கு போராட்டக்குழு முடிவெடுக்கின்றது.
வெகுஜனப் போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாளிரவு கலக்டருக்கும், தாயாருக்கும், சகோதரி இந்திராவுக்குமிடையில் மும்முனைப் போராட்டம் நீண்ட நேரம் நடக்கின்றது. காலையில் கலெக்டர் தாயாரிடமோ, சகோதரியிடமோ எதுவுமே பேசாமல் கொள்ளாமல் அலுவலகத்திற்கு செல்கின்றார். அவரது மனதில் கொந்தளிப்பு.
மூன்று நாட்களுக்கு முன்பே சத்தியாக்கிரகப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டத்தை வெகுஜனப் போராட்டமாக மாற்றுவதற்குஇந்திரா தலைமையிலான போராட்டக்குழு முடிவெடுத்து செயற்படத் தொடங்கி விட்டது.
ஹுகிளி பிரதேசத்திலுள்ள பொது அமைப்புக்கள் அனைத்தையும், பொதுமக்களையும் தீவிர போராட்டத்தில் ஈடுபடுத்துவதற்கு முழுமூச்சுடன் இராப்பகலாய் தீவிரமாக ஈடுபடுகின்றனர். மாவட்டச் செயலாளர் வளாகத்தில் ஏற்கனவே ஆயிரத்தைஞ்நூறு அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
காலை பத்துமணி.
போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களுடன் இணைவதற்கு புதிய வெகுஜனப்பிரவாகம்
அலையலையாய் கலெக்டரின் அலுவலக வளாகத்திற்குள் வந்துகுவிகின்றது. போராட்ட மக்கள் பிரவாகம் காட்டாற்று வெள்ளமாய் கலெக்டரின் அலுவலகத்தை சுற்றிவளைத்து முற்றுகையிடு கிறது.
கலெக்டர் அலுவலகத்திற்குள் வெளியார் எவரும் செல்லவோ, உள்ளிருந்து எவருமே வெளியே வரவோ முடியாத முற்றுகை ‘கெய்ரோ’ சுற்றிவளைப்பு போராட்டமாக பரிணமிக்கிறது.
கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்கின்ற ஊழியர்களில் இரண்டு மூன்று பேரைத்தவிர ஏனையோர் அனைவரும் ‘கெய்ரோ’ சுற்றிவளைப்புப் போராட்டத்தில் இணைகின்றனர்.
கலெக்டருக்குத் திகைப்பு.
எதுவுமே செய்யமுடியாத நிலை அவருக்கு.
கலெக்டர் அலுவலகத்திற் குள்ளிருந்து வெளியே வருகின்றார்.
ஆயுதமனைத்தயும் இழந்து நிற்கதிக்குள்ளான இராவணனாய் நிற்கின்றார்.
போர்க்களத்தின் முன்னணியில் இந்திரா விஸ்வரூபமாய் நிற்கின்றாள்.
தங்கை இந்திராவின் பக்கத்தில் தாயார்!.
கலெக்டருக்கு மலைப்பு.
இந்திராவின் புரட்சிப்பாடல் வெடித்துக்கிளம்பி பிரவாகமாய்ப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
கலெக்டர் சரணாகதி!
– பாஞ்சான் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூன் 2016, இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், இலங்கை.
| நீர்வை பொன்னையன் (மார்ச் 24, 1930 - மார்ச் 26, 2020) ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் எனப் பல எழுதியவர். ஐம்பது ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் உறுதியாக நின்றவர். தனது கடைசிக் காலம் வரை எழுதிக் கொண்டிருந்தவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் நீர்வேலியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் தொடக்கக் கல்வி கற்று பின்னர் 1951…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
வளர்கவி
September 18, 2026
இடைவேளை
எஸ்.சங்கீதா
September 18, 2026
நிழலாடும் நினைவுகள்
விமலன்
September 18, 2026